Friday, October 12, 2012

குளக்கரையில் ஒரு பதிவர் குடும்ப நிகழ்ச்சி.

சம்பவத்துக்கு ஒரு ஆறுநாள் இருக்கும்போது விருந்தாவனில் பாபுவுடன் ஒரு டிஸ்கஷன். என்ன இது அநியாயம்? வடக்கின் ஆக்கிரமிப்பு தாளலை::( பேருக்கு ஒரு தமிழ் இருக்கவேணாமோ?

 "இருக்கே..... இங்க பாருங்க, லைவா !"

 அய்ய............தோசை.

 "அப்ப குழிப்பணியாரம், ஆப்பம் இப்படி எதாவது......"

 "மூச்!!! "

 "............இட்லி?"

 "பேசப்டாது"

 ஒரு பக்கம் வடக்கர்கள் வந்து தமிழ்நாட்டு வியாபாரங்கள் அத்தனையும் வழிச்சுத் தங்கள் பக்கம் இழுத்துட்டுக்கிட்டாங்கன்னு வயித்தெரிச்சல் படும் மக்கள், தங்களை அறியாமலேயே வயித்துலே(யும்) அவுங்களுக்கு இடம் கொடுத்துட்டாங்க பாருங்களேன்........... வியப்புதான்.

பட்டர் நான், பனீர் டிக்கா மசாலா, மலாய் கொஃப்தா, ஆலூமட்டர், நவ்ரத்தன் கொர்மா..........

 இதான் ஓசைப்படாம உள்ளே நுழையறதா? மக்கள் விரும்பறாங்கன்னு சினிமா நாயகி(??)களைக் கொண்டுவந்தது முதல், உடைகள், கல்யாணவீட்டுக் கலாச்சாரங்கள் இப்படி எல்லாச் சமாச்சாரங்களும் வந்துருச்சே! முந்தானையின் அழகுக்காகக் குஜராத்தி ஸ்டைலில் புடவைகட்ட ஆரம்பிச்சது கலியாண ரிசெப்ஷன்களில் தொடங்குச்சு!

 போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு எங்கெ சாப்பிடப்போனாலும் மெனுகார்டில் சீன சாப்பாடுகள்:( மஞ்சூரியன் மஞ்சூரியன்னு சொல்றமே... அது உண்மையான சீனத்துலே இல்லவே இல்லை(யாம்)! இங்கே எங்கூரில் அதென்டிக் சீன உணவு வகைகள் விற்கும் கடையிலே கேட்டால் பேய்முழி முழிக்கிறாங்க....அப்படி ஒன்னு கேள்விப்பட்டதே இல்லைன்னு!!!!

 தமிழ் சாப்பாடு குறைஞ்சபட்சம் ஒரு தென்னிந்திய மெனு........

 "அதைத்தான் தினமும் வீட்டுலே சாப்புடுறாங்களே. வெளியே போனாலும் அதேதானா? "

 என்ன லாஜிக்ன்னு புரியலையே:(

! "சரி. வடையை மட்டும் சேர்த்துருங்க. இல்லேன்னா பதிவர் சந்திப்புக்குப் பெருமை இருக்காது!"

 விழா நடக்கப்போகும் ஹாலை பார்த்துருங்கன்னு கூட்டிக்கிட்டுப்போனார் பாபு. நீச்சல்குளத்தையொட்டியே இருக்கு. அடடா....குளிக்கும் மக்கள்ஸ்க்கு தொந்திரவாப் போயிருவோமோன்னு ஒரு சந்தேகம்!

 "மாலை ஆறரைக்கு அப்புறம் நீச்சல் குளத்துக்கு அனுமதி இல்லை. உங்க விழா ஏழுக்குத்தானே.? அதுக்குள்ளே எல்லா இடத்தையும் சுத்தம் செஞ்சு சாப்பாடு ஐட்டங்களுக்கும், இருக்கைகளுக்கும் ஏற்பாடு செஞ்சுருவோம். குறைஞ்சபட்சம் 100 பேர்கள் வருவாங்கதானே"?

 சொல்ல முடியாது.... நமக்கேது அவ்ளோ நண்பர்கள்? அழைப்பு அனுப்பி இருக்கேன்னாலும் அன்று வேலைநாளாப் போயிட்டபடியால் அழைத்தவர்கள் அனைவருக்கும் வர இயலுமான்னு தெரியலையே.... ஒரு அறுபதுன்னு ஆரம்பிச்ச கோபாலை மடக்கி, 'நூத்தியம்பது லட்சியம் எண்பது நிச்சயம்'ன்னு சொன்னேன்.:-)

 விருந்தாவன் அடுக்களையில் இருந்துதான் சகலமும் என்பதால் , எண்பதுபேருக்கு எல்லாம் செட் செஞ்சுடறோம். மேற்கொண்டு மக்கள்ஸ் வரவர பதார்த்தங்களைக்கொண்டு வந்து நிரப்பலாமுன்னு சொன்னார் பாபு.

 நீச்சல்குளத்துக்குப் பக்கத்தில் பார்ட்டி என்றதும், ஸ்விம்மிங் ஸூட் கொண்டு வரணுமோன்னு நெருங்கிய தோழிகளுக்குக் கவலை! யாரையும் டார்ச்சர் பண்ணும் உத்தேசமில்லை என்று சொன்னேன்:-)))))

 பெங்களூருவிலிருந்து முதல் நாள் வரும் மச்சினர் குடும்பத்துக்கு இதே ஹொட்டேலில் ஒரு அறை புக் செய்யும்போதே இன்னொரு அறையையும் புக் செஞ்சோம். காலை விழாவுக்கு வந்துட்டு, மறுபடியும் மாலை நிகழ்ச்சிக்கு வரும் தோழிகள், மற்ற உறவினர்கள், சென்னை ட்ராஃபிக்கில் மாட்டிக்கிட்டு மறுபடி வீட்டுக்குபோய்வரணுமுன்னா கஷ்டம்தானே? பேசாம மாற்று உடைகளைக் கையோடு கொண்டு வந்துட்டால் மதிய உணவு முடிஞ்சதும் இங்கே வந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக்கிட்டு மாலை விழாவுக்கு ரெடி ஆக லகுவாக இருக்காதா? முன்னேற்பாடுகளை தோழிகளுக்கும் உறவினர்களுக்கும் சொல்லியாச்சு:-)

 காலைச் சடங்குகள் முடிஞ்சதும் பகல் 2 மணி அளவில் நாங்கள் மகளுடன் அறைக்குத் திரும்பினோம். மறுநாள் இரவே அவள் நியூஸி திரும்புவதால் முடிச்சுக்கொடுக்க சில வேலைகள் இருந்தன. மாலை ஒரு ஆறரைமணி அளவில் ஹொட்டேல் நியூவுட்லேண்ட்ஸ் அறைக்குப் போனால், அண்ணனும் அண்ணியும் விழாவுக்குத் தயாராகி ரெடியா இருந்தாங்க. மற்ற தோழிகள் எல்லாம் வந்துருந்து கதையும் பேச்சுமா பொழுது போயிருக்கு! அட...... நான் ரொம்ப மிஸ் பண்ணிட்டேனே..... 

ஹாலுக்குள் நுழைஞ்சப்ப அங்கங்கே சிலர்! நம்ம விருந்தினர்கள் வரத்தொடங்கி இருந்தாங்க. நான்தான் ஸோ அண்ட் ஸோன்னு தன் பேரைச் சொல்லி அறிமுகப்படுத்திக்கிட்டவரை எங்கியோ பார்த்த நினைவு. அவருடைய இருக்கைக்குப் பின் இருக்கையில் நம்ம நுனிப்புல் உஷா, அப்துல் ஜப்பார் ஐயாவிடம் பேசிக்கிட்டு இருந்தவங்க, முன் இருக்கைக்குக் கீழே கையைக் காமிச்சாங்க. ஒரு மோதிரம்! யானைவால் முடிவச்ச தங்க மோதிரம்.

 யானைக்காரிக்குப் பரிசா யாராவது கொண்டு வந்துருக்கலாம் என்ற சம்ஸயத்துடன் அதை எடுத்து, யாரோடதுன்னு ஏலம் போட்டேன். லதானந்த் கூடப்பேசிக்கிட்டு இருந்த தெரிந்த முகத்துக்காரர் தன்னோடதுன்னு வாங்கிக்கிட்டார். விரலில் இருந்து நழுவி இருக்கு:( அப்பவும் அவரை சட்ன்னு நினைவுக்கு வரலை.

 சபையில் நண்பர்கள் கூடி கலகலப்பான சமயம், என் அருகில் இருந்த நம்ம காவேரி கணேஷிடம், அவரைக் காமிச்சு யாருன்னு தெரியுதான்னா... அவருக்கும் யாருன்னு புரிபடலை. நான் விசாரிச்சுச்சொல்றேன்னவர் வந்து சொன்ன பெயரைக்கேட்டு அப்படியே ஆடிப்போயிட்டேன்:( நம்ம டோண்டு!!!!!


டோண்டு, நீங்கள் உடல்நலக்குறைவில் இருந்து மீண்டுவர எம்பெருமாளை மனதார வேண்டுகின்றோம்.



 உணவுக்கான ஏற்பாடுகள் எல்லாம் ரெடின்னு வந்து சொன்ன மேனேஜர் பாபுவிடம், கேக் வெட்டிட்டுச் சின்னதா ஒரு ஸ்பீச் முடிச்சு சாப்பிடத்தொடங்கலாமுன்னு சொன்னதும்..... கேக்கான்னு முழிக்கிறார். மெனு ஐட்டங்கள் முடிவு செஞ்சபோது அந்த லிஸ்ட்டில் கேக் என்று பார்த்ததாக என் நினைவு.

 இல்லீங்களேன்னு சொன்ன பாபுவிடம் கேக்குக்கு ஏற்பாடு செஞ்சுருங்கன்னதும்.... 'எங்க ரெஸ்ட்டாரண்டில் பேக்கரி இல்லை. வெளியே இருந்து வாங்கிக்கலாம். ஆனால் இன்னிக்கு பந்த். கடைகள் இருக்குமான்னு தெரியலையே. என்ன கேக் வேணும்' என்றவரிடம் முயற்சி செஞ்சு பாருங்க கிடைக்கலைன்னா..... வெறும் பேப்பரில் கேக் என்று எழுதி வெட்டிக்கலாம்!

 அடுத்த இருபதாவது நிமிஷம் ரெண்டு கேக்குகளோடு பாபு ஆஜர்.!!! உடனடி ஏற்பாடு செஞ்சு உதவின பாபுவுக்கு என் நன்றியை இங்கே(யும்) பதிவு செய்கிறேன்.

 இரண்டு பக்கக் குடும்பத்தினரும் வந்துருந்தனர் எங்களை மகிழ்வில் ஆழ்த்த!

 பொன்னாடைகள் போர்த்தி வாழ்த்தியவர்களும், பாமாலை பாடி வாழ்த்தியவரும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியில் எங்களை முக்கி எடுத்தனர். . 'அன்றொருநாள்' படம் ஒன்றைப் பரிசாகக் கொடுத்து கொசுவத்தி ஏத்திவச்சார் மோகன்குமார்.

 பெண்களூரில் இருந்து புறப்பட்டு வந்த ஷைலஜா, வாழ்த்துக் கவிதை வாசிச்சப்ப, நானும் மரபு வழுவாமல் வா ....வா.....(ஹிந்தியில் பாராட்டு) சொன்னேன், கேட்டோ:-))))

 பதிவுலக நண்பர்கள் தல பாலபாரதி & குடும்பத்தினர், டாக்டர் புரூனோ, லக்கிலுக், அதிஷா, கேபிள் சங்கர், காவேரி கணேஷ், பாலகணேஷ், மோகன் குமார், ஸாதிகா, டி ஆர் சி, மரபூர் சந்திரசேகர், மா.சிவகுமார், சிமுலேஷன் சுந்தரராமன் & திருமதி சுந்தரராமன், அண்ணாகண்ணன், உண்மைத்தமிழன் சரவணன், செந்தில், பட்டர்பஃப்ளை சூரியா, எறும்பு ராஜகோபால், பலாபட்டறை ஷங்கர், ஆன்மீகச் செம்மல் ஜி ராகவன், டோண்டு ராகவன், வடுவூர் குமார் &திருமதி குமார், பதிவர் நானானி சார்பில் அவரது அன்புக் கணவரும் மகளும் பேரன் ஷன்னு த க்ரேட்,

 பண்புடன் குழும நண்பர்கள் சா.கி.நடராஜன், மோர் சுப்ரா, உதயன், ஸ்நாபக் விநோத், அச்சு சுதாகர் கார்த்திக், மரத்தடி குழுமத் தோழிகள், ஹோப் ஃபவுண்டேஷன் குழுவினர் சார்பில் டாக்டர் அஷோக், சந்தோஷ் ஆகியோர் குடும்பங்கள், விழாவுக்காகவே வெளியூர்களில் இருந்து நேரில் வந்து வாழ்த்திய அன்புள்ளங்கள் சீனா&செல்வி தம்பதியர், திருப்பூர் ஜோதி கணேசன், அவர் நண்பர் ராஜராஜன், அன்று காலையில்தான் அமெரிக்காவை வென்று(???) தாய்நாடு திரும்பிய (தூக்கக் கலக்கக் கண்களுடன்) புதுகை அப்துல்லா, தலைநகரில் இருந்து (மத்திய அரசின் சார்பில் பங்குபெற்ற (??!!!! இருக்குமோ ) நம்ம வெங்கட் நாகராஜ். எழுத்தாளர்கள் ஷங்கரநாராயணன், லதானந்த், முனைவர் இரா.வாசுதேவன், புத்தக வெளியீட்டாளர் சந்தியா பதிப்பகத்தின் திரு & திருமதி நடராஜன்,

 பாரதி மணி ஐயா, க்ரிக்கெட் போட்டிகளின் நடுவிலும் நமக்காக நேரம் ஒதுக்கிய நண்பர் அப்துல் ஜப்பார் ஐயா, கல்பட்டு நரசிம்ஹன் & சாந்தா தம்பதியினர், பேராசிரியர் சிவஞானம் ஐயா&குடும்பத்தினர், சிங்கை சித்ரா ரமேஷின் பெற்றோர்&குடும்பத்தினர் (மற்றபடி எவர் பெயராவது விட்டுப்போயிருந்தால் தயவு செய்து சொல்லுங்கள்.என் கவனக்குறைவுக்கும் ஞாபகமறதிக்கும் மன்னிக்கணும்.) இப்படி அனைவரின் அன்பும் ஆசிகளும் வாழ்த்துகளும் நிறைந்து வழியும் நாளாக அமைஞ்சுபோனது எங்கள் பாக்கியம்.

எல்லோரையும் குளக்கரையில் நிறுத்தி பெரிய க்ரூப் ஃபோட்டோவா ஒன்னு எடுத்துடலாமுன்னு ஃபொட்டோக்ராஃபர் சொன்னது அருமையான ஐடியாவா இருந்தாலும் விருந்துக்கு நடுவில், அப்படியே தட்டை வச்சுட்டு இப்படி வரிசையில் நின்னு போஸ் கொடுங்கன்னு சொல்ல இயலுமா?????

 வல்லி சிம்ஹன் வரலை. காலையில் ஓடுன ஓட்டத்துக்குக் கால் வலி வந்துருக்கு:(      பாவம்....      எல்லோருக்கும் இந்த பதிலைச் சொல்லியே நேரம் போக்கினேன்.

 மனம் நிறைஞ்சு போயிருந்ததால் வயிற்றுப்பசி அறவே இல்லை. ஒன்னுமே சாப்பிடலையே நீங்கன்னு சொல்லிக்கிட்டே 'லைவாப்' போட்டு எடுத்துவந்த தோசையை எனக்கு விளம்பிட்டுப் போனார் பாபு!

 கூடியிருந்து குளிர்விக்க வந்திருந்த நண்பர்கள், சரியாச் சாப்பிட்டாங்களான்னு கூட கவனிக்க முடியலை. இடம் சின்னது என்பதால் நல்ல கூட்டம்போல ஒரு தோற்றம்!!!!

 தொலைபேசி, மின்மடல்கள் மூலமாக வாழ்த்திய அன்பர்களுக்கும், நேரில் வந்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அன்புள்ளங்களுக்கும் , வர நினைத்து வரமுடியாமல் போன நட்புகளுக்கும் , பதிவின் மூலம் சேதி அறிஞ்சு வாழ்த்திய பதிவர் குடும்ப மக்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை இப்பதிவின் மூலம் தெரிவித்து மகிழ்கின்றேன்.




 படங்களை ஆல்பத்தில் போட்டுருக்கேன். கீழே இருக்கும் சுட்டிகளில் எதாவது ஒன்னு வேலை செய்யும் என்ற அதீத நம்பிக்கை:-)

 படத்தொகுதி சுட்டி 1

 அது இல்லைன்னா இது

 படத்தொகுதி சுட்டி 2

 இவ்ளோ உற்சாகமும் அன்பும் இருக்கே...பேசாம சதாபிஷேகத்தை அடுத்த வருசமே வச்சுக்கலாமா ஷைலூ?

61 comments:

said...

சிறப்பான பதிவு.
நினைவுகள் என்றென்றும் மனதில் நிற்கும் வண்ணம் நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன என்று உங்கள் பதிவிலிருந்து தெரிகிறது. சிறப்பான படங்கள்.

கொடுத்துள்ள படங்களில் டோண்டு ராகவன் இருக்காரா தெரியவில்லை.

said...

குளக்கரை சந்திப்பு '' பேரே அருமை.

உங்கள்விழாவில் அடியேனுக்கும் ஒளிவெள்ளம் அடிச்சாச்சு:)
சாயந்திரம் வந்திருந்தால் இத்தனை நண்பர்களையும் பார்த்துப் பேசி இருக்கலாம்.
ஒரு 13 நாட்கள் போனதே தெரியவில்லை.எல்லாவற்றுக்கும் நன்றி துளசி.முதலில் உங்கள் அறுபதைக் கொண்டாட வேண்டாமா:0)

said...

சூப்பர். ரெண்டாவது சுட்டி எனக்குப் படங்களைக் காமிக்குது. :)

said...

/// "சரி. வடையை மட்டும் சேர்த்துருங்க. இல்லேன்னா பதிவர் சந்திப்புக்குப் பெருமை இருக்காது!" ///

படங்களுக்கு நன்றி...

said...

கடைசியில் நூத்தியம்பதா இல்ல முன்னூறா அதை சொல்லவே இல்லியே..

எனக்கு தெரிஞ்ச முகங்கள் (உங்களைத் தவிர) யாருன்னு தேடி, நுனிப்புல் உஷான்னு போட்டுருக்கீங்களேன்னு உத்து பாத்தா.. what!! இதுவா உஷா மேடம்!!! நான் அவங்க எழுத்தெல்லாம் படிச்சு ஒரு 50 வயதுடையவரை இல்ல கற்பனை பண்ணி வெச்சுருந்தேன்..! இவங்க என்ன இம்பூட்டு யூத்தா இருக்காங்கன்னு ஒரே ஷாக்ல இருக்கேன்.. I love you Usha madam!

டீச்சர் கின்னஸ் சாதனையா இது? தனிப்பட்ட ஒருவர் முன்னின்று நடத்தியதிலேயே மாபெரும் வடை சந்திப்பு. சூப்பர் பதிவு சூப்பர் ஃபோட்டோஸ்.How can you even remember so many friends?!! :O

said...

வந்து சிறப்பித்த பலரது பதிவுகளின் மூலம் அறிய வந்திருப்பினும் நீங்கள் சொல்லிக் கேட்க இன்னும் அழகு.

வல்லிம்மா மாலை விழாவில் கலந்து கொள்ள முடியாது போனது எங்களுக்கும் ஆதங்கமே.

said...

@படம் ஒன்றைப் பரிசாகக் கொடுத்து கொசுவத்தி ஏத்திவச்சார் மோகன்குமார்.

பெரிய இடங்களிலும் கொசுத்தொல்லை இருந்திருக்கின்றதே!


நல்ல படங்களுடன் கூடிய பகிர்வு.

வாழ்த்துகளும், வணக்கங்களும் தெரிவித்துக் கொள்கின்றேன் சகோ.!


நன்றி

said...

enna athukkulle mudichchiteenga?
pls continue seyyunga!

said...

//'நூத்தியம்பது லட்சியம் எண்பது நிச்சயம்'//

ரசித்தேன். ஆனால் வந்தோர் எவ்ளோன்னு சொல்லலை."லட்சியம் " ஜெயித்திருக்கும் என நினைக்கிறேன், குளம் அருகே உள்ள படமே சொல்லுதே எவ்ளோ கூட்டம் என !

மூணு பதிவில் முடிச்சிட்டீங்க. "வீடு திரும்பி"யவரா இருந்தா பத்து வாரம் ஓட்டிருப்பார் :)

//கொடுத்துள்ள படங்களில் டோண்டு ராகவன் இருக்காரா தெரியவில்லை.//

ஸ்ரீராம் மூன்றாம் படத்தில் முதலாவதாய் இருப்பவர் டோண்டு ராகவன் (லதானந்த் அருகே அமர்ந்துள்ளார்)

ஷைலஜா கையெழுத்து அச்சடிச்ச மாதிரி அழகா இருக்கு !

மேனேஜர் பாபுவிற்கு ஸ்பெஷல் பாராட்டுகள்

//நாங்கள் மகளுடன் அறைக்குத் திரும்பினோம். மறுநாள் இரவே அவள் நியூஸி திரும்புவதால் //

ஓஹோ ! பெண்ணை அனுப்பி விட்டு தான் மறுபடி ஹனிமூன் கிளம்புனீங்களா ? ரைட்டு !

said...

ஒண்ணு்ம கவலைப்படாதீ்ங்க டீச்சர் மனம் நிறைய வாழ்த்திட்டு வயிறு நிறைய சாப்டுட்டு வாய் நிறைய அரட்டையடிச்சுட்டு சந்தோஸமாதான் கிளம்பினோம் எல்லோரும். மகிழ்வைத் தந்த அந்தக் குளத்தங்கரைச் சந்திப்பை உங்க எழுத்தில படிச்சு மறுபடி ஒருமுறை மனசால அங்க போயிட்டு வந்தேன்.

said...

தலைப்பு சூப்பர் :))

படங்களும், விவரித்த விதமும் ரொம்ப அருமை.

said...

இவ்ளோ உற்சாகமும் அன்பும் நிறைந்த விழாவுக்கு வாழ்த்துகள் !!

said...

கொடி, நாங்க எல்லாம் யூத் இல்லை, யூத்து மாதிரி :-), ஆமாம் ஒரு கேள்வி நான் எழுவது எல்லாம்
பாட்டி எழுத்தாவா இருக்கு :-(

said...

துளசி, உங்களின் அறுபதாங்கல்யாணத்தை ஒரு பதிவர் மாநாடாய் மாற்றியதற்கு நன்றி. இப்படி ஒரு வாய்ப்பு, பதிவர்களை சந்திக்க வைத்ததற்கு மிகமிக நன்றி

said...

காட்சிங்கான தலைப்பு :-))

படங்களையும் ரசிச்சேன்.

said...

ஆஹா நேரில் கூடவே இருந்து பார்ப்பது போலவே படங்களும் பகிர்வும் இருந்துச்சு நன்றி நல்ல சான்ஸ் மிஸ் பண்ணியச்சு

said...

அந்த குளக்கரையை சுற்றி சுற்றி வந்து கொண்டுருந்தேன். தேவியர்களின் மிகப் பெரிய விருப்பம் இது. அங்கு வந்துசேர்ந்ததே (ஆட்டோகாரன் இடித்து கையில் வைத்திருந்ததை இழந்து) எனக்கு பெரும் சாதனை தான். ஆனால் அங்கு உங்களை தேடி வந்த கூட்டத்தைப் பார்த்த போது பிரமிப்பு தான். டில்லி முதல் திருப்பூர் வரைக்கும்.

அடுத்த விசேடத்தில் குழந்த குட்டிகளோடு கலந்து கொள்ள வேண்டும். அப்போதும் நீங்க கோபால் அவர்கள் சகல சௌபாக்கியங்களோடு, ஆரோக்கியத்தோடு நலம்பெற்று வாழ வேண்டும்.

said...

குளக்கரை சந்திப்பில் கலந்து கொண்டதில் எனக்கும் மகிழ்ச்சி. நிறைய பதிவர்களை அன்று சந்திக்க முடிந்தது.....

சிறப்பான வர்ணனை.... அதற்குள் முடிந்துவிட்டதே என்று எண்ணம்.....

said...

Dear Thuasi Gopal Madam,
I am ananthanarayanan c, I had been reading your thulasidhalam past few years.

I started reading your travel and receipes in chennai,chandighar and now from new zealand also. most of the time i red it in office itself because i working at Cognizant as Senior Associate I still does not have exp in writing in tamil eventhough my mother tongue is tamil your way of writing and latest receipe vada in donut machine are fine to follow and know lot of things and i wish to meet in person I thought of meet your 60th brithday of Gopal sir but now only i came to i happen on 20th sep itself if you allow me to meet me you can call me any time in 8056027460 as i very hard core fan of you.
cananthu@gmail.com
ananthu_007@yahoo.com

said...

அருமை அருமை..வந்திருந்து பார்த்தமாதிரி ஆகிடுச்சு துளசி.. குளக்கரை போட்டோ நல்லா இருக்கு :))

said...

அப்பாடியோவ்! உங்கள் ஞாபகசக்தி வியக்க வைக்கிறது.
அருமையான சந்திப்பாக இருந்தது.

said...

உஷா மேடம்: ஆமாம் நைட்டு பூரா ஒரே யோசனை.. ஏன் அப்படி நினைச்சு வெச்சிருந்தேன்னு.. ஒரு தியரி என்னன்னா, மொக்கை போடாம நல்ல பதிவா எழுதுறவங்க கண்டிப்பா ஒரு வயசுக்கு மேல இருப்பாங்கன்னு ஒரு அனுமானமோ என்னவோ.. அதுல வேற நீங்க எக்கச்சக்கமான படிப்பாளி எழுத்தாளி, வேற எப்படி நினைக்குறதாம்? எது எப்படியோ வயசு இப்ப என்னவா இருந்தா என்ன, உங்க ஹேர்கட், புடவை ஸ்டைல், நல்ல ஆரோக்கியமா இருக்குற முகம் (அதுவாவே அமைஞ்சதோ இல்ல நீங்க அக்கறை எடுத்துக் கொண்டோ, எப்படி இருப்பினும்)- எல்லாமா சேர்ந்து I yam lou you!

என்ன என்னோட பதிவுல வந்து அவங்களை கொஞ்சிக்கிட்டு இருக்கே டீச்சர் கோச்சிக்க போறாங்க.. So, ‍ டீச்சர்: ஏன் சாயங்காலம் பார்ட்டிக்கும் காலை புடவை மாதிரியே கலர்? சிம்பிள் எப்போதுமே அழகுன்னாலும், இவ்ளோ க்ராண்ட் ரிசப்ஷனுக்கு நீங்களும் சாரும் இன்னும் கொஞ்சம் க்ராண்டா ட்ரெஸ் பண்ணி இருக்கணும்னு ஃபீலாவுது.. மதுவை பாருங்க ஜிகுஜிகுன்னு. பராவாயில்லை சதாபிஷேகத்துக்கு நினைவு வைத்துக் கொள்ளவும். :)

said...

அடடா !!
ஆயர் பாடி கோபியர் எல்லாம்
ஆர்ப்பரித்த கோகுலம் போல அல்லவா இருக்கிறது !!
அட்டகாசம் . போங்கள். !!
உங்களுக்கும் கோபாலுக்கும்
திருஷ்டி சுத்திப்போடச் சொல்லுங்கள்.

மாலை நிகழ்ச்சிக்கு வல்லையே அப்படின்னு
மனசு வலிக்குது.

அது சரி !! லைவ் ஆ தோசை சாப்பிட்டீகளா !
தோசை அப்படின்னு நீங்க சொல்றது
வெஜ் தானே ?

சுப்பு ரத்தினம்.

said...

// துளசி.முதலில் உங்கள் அறுபதைக் கொண்டாட வேண்டாமா:0)//

வல்லியம்மா !! சரியா கேட்டீங்க....

அந்த அக்கார வடிசல்
அந்த புளியோதரை
அந்த தயிர் வடை

அடடா !! அடடா !!
ஆண்டவன் படைத்தான். என்கிட்டே கொடுத்தான்.
அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்.

மீனாட்சி பாட்டி.

said...

வராதவர்களுக்கு வர்ணனை. வந்தவர்களுக்கு மலரும் நினைவுகள் ஆயிடுச்ச்ச்சே

துள்சி மறுபடியும் உங்களைப் பார்க்கணும் போலவே இருக்கு.

said...

அழகான வர்ணனை. வரலாம் என்று ஆசைப்பட்டேன். ஆனா ரோஷ்ணிக்கு அன்று பரீட்சை இருந்தது.....

ஆனா உங்களையும் கோபால் சாரையும் பின்பு சந்திச்சதுல எனக்கு மிகுந்த மகிழ்ச்சிம்மா.

எங்க வீட்டு தலைவர் போட்டோக்களில் அங்கங்கே கலக்கறார்...:)

said...

தண்ணீருக்கு ஒரு சிறப்பு உண்டு. உயிர்கள் துளிர்ப்பது நீரினால்தான். அந்த நீர்தான் உயிர்களின் உடம்பில் நிறைந்து இருக்கின்றது.

அப்படித் தண்ணீர் நிறைந்த குளக்கரையில் நல்ல நிகழ்ச்சி நடந்தது பெருமைதான்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களையும் கோபாலையும் சந்தித்தேன். மிகுந்த மகிழ்ச்சி.

நான் உள்ளே வருகையில் மகளிரணி மேடையில் இருந்தாங்க. அடுத்து ஷைலஜா படித்த கவிதை.

அடுத்து பழைய வலைப்பதிவார்களையெல்லாம் சந்தித்தது மகிழ்ச்சி.

டோண்டுவுடைய நிலை வருத்தம் கொடுக்கிறது. படத்திலிருப்பவர் டோண்டு என்பதே நம்பமுடியவில்லை. அவருக்கு இறைவன் நல்ல உடல்நலம் அருளட்டும்.

வல்லியம்மாதான் ஏற்பாடுன்னு நேற்றைய பதிவில் தெரிஞ்சு கொண்டேன். மாலை அவர் வராததால் சந்திக்க முடியவில்லை.

said...

மிகவும் அருமை. படித்து இன்புற்றோம்.

படங்களும் அழகு.

said...

// கொடுத்துள்ள படங்களில் டோண்டு ராகவன் இருக்காரா தெரியவில்லை.//
லதனந்த் பக்கத்தில் அமர்ந்துளேன்.

@துளசி மேடம்
அன்று மாலை மனைவி அருகில் இல்லாத தைரியத்தில் சகட்டு மேனிக்கு கூல் ட்ரிங்க் எடுத்துக் கொண்டதால் திடீரென என் உடல் நிலை கெட ஆரம்பித்ததால் ஓசைப்படாமல் சென்று விட்டேன். உங்களிடம் சொல்லிக் கொள்ளாமல் போனதற்காக ம்ன்னிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

குளத்தங்கரை மாலை நிகழ்ச்சியும் நேரில் கலந்து கொண்டது போல் இருக்கிறது உங்கள் அழகான நேர்முக வர்ணனையில்.

வல்லி அக்கா மாலை நிகழ்ச்சியில் வரமுடியாமல் போனது எல்லோருக்கும் போல எனக்கும் ஏமாற்றமே.

said...

மகிழ்வான செய்தி. நல்வாழ்த்துகள் கோபால் & துளசி உங்கள் இருவருக்கும்.

said...

வாங்க ஸ்ரீராம்.

நம்ம மோகன் குமார் பதிலைப் பார்த்தீங்கதானே?

said...

வாங்க வல்லி.

ஒளிவெள்ளம் வந்த திசையில் நீங்க இருந்தீங்களே!!!!

தனித் தனியா எதையும் கொண்டாட மாட்டோம்.ஹேப்பி பர்த் டே சொன்னால் கூட சேம் டு யூதான்:-))))

said...

வாங்க குமரன்.

கூகுளுக்கும் தெரியுது... ரெண்டாவதில்தான் படங்களின் எண்ணிக்கை குறைவுன்னு:-)

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க பொற்கொடி.

பதிவுலக மார்கண்டேயி அவுங்க:-)

பாபு வாக்கு 125.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

வல்லி வராதது எனக்கும் குறைதான்:(

said...

வாங்க சிவஹரி.

தண்ணீர் இருக்குமிடத்தில் கொசுவுக்கு(ம்) கொண்டாட்டம்தான்:-))))

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க சிஜி.

அப்ப அறுபதை, எம்பதுவரை இழுக்கலாமா?:-))))

said...

வாங்க மோகன் குமார்.

பத்து இழுத்தால் கொஞ்சம் ஓவராப் போயிருக்காது?

பயணத்தில் உங்க நினைவு அப்பப்ப எட்டிப் பார்த்துச்சு என்பது உண்மை:-))))

said...

வாங்க பால கணேஷ்.

ஆஹா... அப்பச் சரி.என் கவலையைப் போக்கிட்டீங்க:-)

நன்றீஸ்.

said...

வாங்க புதுகைத் தென்றல்.

ரசிப்புக்கு நன்றிகள்.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

வாழ்த்துகளுக்கு எங்கள் இனிய நன்றிகள்.

said...

வாங்க உஷா.

கல்யாண வேலைகளுக்கிடையிலும் பதிவர் மாநாட்டுக்கு வந்ததுக்கு நானல்லவோ நன்றி சொல்லணும்!

காலையிலும் வந்துருந்தால் இன்னும் மகிழ்ச்சியா இருந்துருக்கும்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

நன்றியோ நன்றி:-)

said...

வாங்க லக்ஷ்மி.

நீங்க சென்னையில் இருந்தீங்களா அப்போ?
அடடா..... கோட்டை விட்டுட்டேனே:(

said...

வாங்க ஜோதிஜி.

நீங்கள் இத்தனைதூரம் வந்து வாழ்த்தியது மனதுக்கு நிறைவா இருந்தது.

தேவியரும் வந்திருந்தால் மகிழ்ச்சி இன்னும் நாலுமடங்காக ஆகி இருக்கும்:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உங்கள் வரவு எதிர்பாராதது!!!!

சின்ன விழாதானே. அதான் சுருக்:-))))

said...

வாங்க அனந்து.

முதல் வருகைக்கு நன்றி.

இருப்பிடம் சென்னை என்றால் அடுத்த பயணத்தில் ஒரு பதிவர் வாசகர் சபையில் சந்திக்கலாம்.

தமிழ் எழுதுவது எளிது.கையில் கலப்பை பிடிச்சால் போதும்.

விவரம் தனிமடலில் அனுப்புகிறேன்.

said...

வாங்க கயலு.

ரசனைக்கு நன்றி.

said...

வாங்க குமார்.

நீங்கள் ரொம்ப இளைத்தும் கருத்தும் போய் இருந்தீர்கள்.

விசாரிக்க நேரமில்லாமல் போச்சு:(

சென்னை வாழ்க்கை எப்படி இருக்கு?

said...

பொற்கொடி,

மதுவுக்கு உடை அம்மா செலக்‌ஷன்.

எனக்கு நானே. அதான் அடக்கி வாசிக்கும்படி ஆச்சு:-)

அது பழைய புடவைதான்.

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

பாபு வாக்கு வேத வாக்கு. தோசை என்னும் வஸ்து வெஜ் தானாம்!!!!!

said...

வாங்க மீனாட்சி அக்கா.

என்னதான் ஹிஸ்டரி டீச்சர்ன்னாலும்.... ரிபீட்டுனால் எப்படிக்கா?

said...

வாங்க கவிதாயினி.

பேசாமக் கிளம்பி வாங்க.

ரெண்டே மாசத்துலே சம்மர் வருது!!!!

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

தலைநகரில் இருந்து வந்த தங்கத் தலைவரல்லவா !!!!

உங்களையும் சந்திக்க முடிஞ்சதில் மகிழ்ச்சியே!

said...

வாங்க ஜீரா.

இறையருள் எப்போதும் கூட இருக்கணும். உடல்நலம் விரைவில் சீரடைய நம் எல்லோருடைய பிரார்த்தனைகளும் நம்பிக்கையும் வீண் போகாது.

said...

வாங்க மாதேவி.

ரசனையுடன் தொடர்வது மகிழ்ச்சி. நன்றிகள்.

said...

வாங்க டோண்டு.

நீங்கள் வந்தது எங்களுக்கு மிகப்பெரிய கௌரவம்.

தனித்து உரையாட சந்தர்ப்பம் அமையவில்லை:(

உங்கள் மனோதிடம் சொல்லமுடியாத வலிமை உடையது. பெருமாள் இருக்கிறார்.

விரைவில் பூரணநலம் அடைய எங்கள் வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.

said...

வாங்க கோமதி அரசு.

உங்கள் ரசனைக்கு எங்கள் நன்றிகள்.

வல்லி கலந்து கொள்ளாதது எனக்கும் குறைதான்.

said...

வாங்க வாசன்.

வாழ்த்துகளுக்கு எங்கள் இனிய நன்றி.