Wednesday, January 30, 2013

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையா? நோ ஒர்ரீஸ்!!!


மன்னிப்பு கேட்கும் தொனியில்  ரெண்டு டாலர் கட் டணம் என்று சொன்னாங்க கவுண்ட்டரில் இருந்த பெண். அதுகூட இந்த இடத்தை மெயிண்டெய்ன் செய்யத்தான் என்று சொன்னதைக் கேக்க எனக்கே பாவமாப் போச்சு.வெறும் 400 பேர் வசிக்கும் ஊரில் உள்ளூர் மக்கள் தினமும் ம்யூஸியம் வந்து போவாங்களா என்ன? (இங்கே வேலை(!) செய்யும் பெண்மணி தவிர)


சின்ன இடம்தான் என்றாலும் வெளிப்புற வெராண்டாவில்  ரெண்டு மூணு பெஞ்சு இருக்கைகள் போட்டு மழைச்சாரல் அடிக்காமல் இருக்க முன்புற மறைப்பும் அதில் மழைக்கோட்டு, குடைகள் எல்லாம் மாட்டி வைக்க வசதியுமா நல்லாவே இருக்கு.




வெளி வாசலில் ஒரு ப்ரொப்பல்லர். அந்தப் பக்கமா திமிங்கிலக்கொழுப்பு காய்ச்சி எடுக்கும் கொப்பரைகள். கடலும் கப்பலுமா இருக்கும் பகுதி என்பதால் இந்தப்பக்கங்களில் எல்லாம் கப்பல் சமாச்சாரத்தை வாசல் முற்றத்தில் வைப்பது  ஒரு ஃபேஷனாப் போயிருக்கு. இல்லேன்னா  வாஸ்து காரணமோ???)  ஆனா ஒன்னு சொல்லணும். எல்லாவே விதவிதமான டிஸைன்கள்தான்.  ப்ளஃப் மியூஸிய வாசலில் அஞ்சு இதழ் பூ மாதிரி ஒன்னு அட்டகாசமா இருக்கு!


 மவொரிகளில் அந்தக்கால உடைகள், மட்டன் பர்ட் சமைச்சுப் பார்சல் செய்ஞ்சு வைக்கும்  ஓலைப்பைகள் , அவர்கள் பயன்படுத்திய  மீன்பிடிக் கருவிகள் இப்படி ரெண்டு மூணு டிஸ்ப்ளே இருக்கு. தவிர... இங்கே மற்றவர்கள் வர ஆரம்பித்தபின் அவர்கள் கொண்டுவந்த,பயன்படுத்திய  பொருட்கள் ஏராளம்.

இங்கத்து சரித்திரம்  ஒரு 200 வருசம்கூட இல்லை என்பதால் அகழ்வாராய்ச்சி எல்லாம் செய்யாமலேயே   அப்போதைய மக்களின் வழிவந்த குடும்பத்தினர்  தானமாக கொடுத்தவைதான். தங்கள் முன்னோர் பயன்படுத்தியவை சரித்திர முக்கியத்துவம் பெற்றது. அவைகளை ஊருலகம் பார்த்து ரசிக்கணும் என்ற ஆர்வமும் பெருந்தன்மையும்தான் காரணமா இருக்கணும். (ஐயோ... எங்க கொள்ளுப்பாட்டி போட்டுருந்த கெம்புக்கம்மல்  இப்ப இருந்துருந்தா நான் நம்மூர் மியூஸியத்துக்குக் கொடுத்துருப்பேனா என்பது சந்தேகம்தான்.  நல்ல மாதுளைமுத்துப்போல் ஜொலிக்குமாம் கம்மல்!! சுத்தத்தங்கம்! )


மைக்கூடும் தொட்டு எழுதும் கட்டைப்பேனாவும்  படிச்சவங்க வீட்டுலே இருக்கும்  அற்புதப்பொருள்!

ஆதிகாலத்து அமெரிக்கன் டைப்ரைட்டர் இது!

டெலிபோன்  எக்ஸ்சேஞ்ச்.  பிபிஎக்ஸ். நீங்க ரிஸீவரை எடுத்தவுடன் இங்கே விளக்கெரியும். ஆபரேட்டர்  என்ன நம்பர் வேணுமுன்னு கேட்டு  கனெக்‌ஷன் தருவாங்க.

இது என்னன்னு சொல்லுங்க?  துருத்தி!  ஹைய்யோ... பார்த்து எவ்ளோ நாளாச்சு!  வத்தலகுண்டு வாழ்க்கையில்  வாசலில் ஈயம் பூசித்தர வரும்  ஆட்கள் வச்சுருப்பாங்க.  ராஜாஜி மைதானம் மாரியம்மன் கோவிலாண்டை மாட்டுக்கு லாடம் கட்டறவங்களும் இதை வச்சுத்தான் தீக்கனலை ஜொலிக்க வைப்பாங்க.


அய்ய... எச்சில் கும்பா!!!

புகைபிடிக்க பைப் அதுக்கு ஒரு மரக்கவர்!

சிகெரெட் வர ஆரம்பிச்சதும் அதை வச்சுப்பிடிக்க ஒரு ஹோல்டர்.

காஃபி கொட்டை அரைக்கும் மிஷின் இருக்கு. ஃபில்டரைத்தான் காணோம். இல்லேன்னா அடிக்கும் மழைக்கு ஒரு ஃபில்டர் காஃபி போட்டு சூடாக் குடிச்சால் எவ்ளோ நல்லா இருக்கும் இல்லே?



நுரை பொங்கும் காபி மீசையில் ஒட்டாமக் குடிக்கணுமுன்னா இது வேணும். என்னமா (உக்காந்து) யோசிச்சு இருக்காங்க பாருங்களேன்!!!!


தையல் மிஷின்கள்!!  கடந்து வந்த தூரம் அதிகம் இப்போ. கண் சரியாத் தெரியாத என்னைப் போன்றோருக்கு தையல் மெஷீனில் தானே ஊசியில் நூல்கோர்க்கும் வசதி கூட வந்துருச்சு. ஒன்னரை வருசத்துக்கு முந்தி நான்  நியூஸி திரும்பினதும்  அட! அப்படியான்னு ஒன்னு வாங்கிக்கிட்டேன்! ரெடிமேடில் விஸ்தரிப்பு வரலாம்!!!)

ஆமாம்..   மேலே உள்ள படம் ,இது என்னவா இருக்குமுன்னு சொல்லுங்க பார்க்கலாம்.

பனிரெண்டரை மணி. லஞ்ச் டைம்.  ம்யூஸியம் வாசல் பெஞ்சில் உக்கார்ந்து  கொண்டு போன சாப்பாட்டை முடிச்சதால் கோபாலுக்கு கனம் குறைஞ்சது நிஜம்:-)


தொடரும்..........:-))

பி.கு: போன இடுகையில் படம் இல்லாத குறையை இந்த இடுகையில் தீர்த்தாச்சு:-)))) 

26 comments:

said...

ரசித்தேன்.

said...

2 டாலர் கொடுக்காம மீயூசியம் பாத்தாச்சு..........

said...

அது இன்னான்னு சொல்லணுமா ?

ஒண்ணு மாவாட்டற மிஷின். இல்ல தண்ணி தொட்டி.

அது சரி. பக்கத்துலே கோபாலு போஸ் ஏன் கொடுக்கிறாரு ?
அதனாலே மாவாட்டறதா இருக்காது அப்படின்னு சொல்லுது எங்க வூட்டு பாட்டி.

தண்ணி தொட்டியாத்தான் இருக்கும். தூக்கிக்கினு போகவேண்டாம்னு சக்கர நாற்காலி இருக்குது.

ரைட்டோ ?

சுப்பு ரத்தினம்.
www.subbuthatha.blogspot.in

said...

எப்போது ஆபரேட்டர் ஆனீர்கள்:))
படம் அசத்தல்.

காப்பிக்கொட்டை மிசின், தையல்மிசின் எனப்பலவும் காணக்கிடைத்தது. இப்பொழுது இவற்றுக்கு எல்லாம் வேலை இல்லாமல் போய்விட்டது எல்லாம் ரெடிமேட் காலம்.

said...

படங்களுடன் பகிர்வு அருமை. உங்க கூட சுத்துனதுல எங்களுக்கும் கொஞ்சம் பசி வந்துருச்சு.....:)

அது என்ன மிஷின் தெரியலையே....

said...

Water heater?

said...

எனக்கே அருங்காட்சியைப் பார்த்தது போல இருக்கிறது..அருமை!

said...

ஆஹா.. இப்பத்தான் உங்க பதிவு மாதிரி இருக்கு.

மியூஸியம் படங்கள் குறிப்புகள் எல்லாமே அருமை.

said...

\\நுரை பொங்கும் காபி மீசையில் ஒட்டாமக் குடிக்கணுமுன்னா இது வேணும். என்னமா (உக்காந்து) யோசிச்சு இருக்காங்க பாருங்களேன்!!!!//
நம்ம பிக்கேனர் ல ஒருராஜா .. மீசை முக்கியம்ன்னு.. ஒரு ஸ்பூன் ல இதே மாதிரி டிசைன் செய்திருந்தார்..

அரை ஸ்பூன் இருக்கும் அரைஸ்பூன் ல மீசையைத் தாங்கிக்க ஒரு ஸ்டாண்ட்..:))

said...

செலவில்லாம மியூசியத்தை சுத்திப்பார்த்தாச்சு.

அந்த ட்ரம் என்னவாயிருக்கும்?.. கேள்வி தலைக்குள் குடையுது :-))

said...

வாங்கபழனி கந்தசாமி ஐயா.

வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

said...

வாங்க நான்.

காசு மிச்சமா:-))))

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

ஊகம் தப்பு:-))))

அது வாஷிங் மெஷீன்!!!

said...

வாங்க மாதேவி.

உண்மைதான்.


நம் காலத்துலேயே எத்தனை வேகமான மாற்றங்கள் பாருங்க!!!

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

அந்த மெஷின்லே இன்னிக்கு துணி துவைச்சுக்கலாமா?

said...

வாங்க கிரேஸ்.

வணக்கம். துளசிதளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதல் வருகைக்கு நன்றி.

said...

வாங்க தமிழ்ச் செல்வி.

வணக்கம். துளசிதளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதல் வருகைக்கு நன்றி.

அது..... வாஷிங் மெஷீன் !!

said...

வாங்க ரமாரவி.

எனக்கும்தான் இப்ப என் பதிவாத் தெரியுது:-))))

ஆனாலும் மெனெக்கெட வேண்டியதாப் போச்சுங்க நாலுநாளா:(

said...

வாங்க கயலு.

//நம்ம பிக்கேனர் ல ஒருராஜா .. மீசை முக்கியம்ன்னு.. ஒரு ஸ்பூன் ல இதே மாதிரி டிசைன் செய்திருந்தார்.//

அட! அப்படியா!!!!

ஆஹா.... கண்டுபிடிப்பு தேவைகளின் தாய் என்பது உறுதியாச்சு!!!!

said...

வாங்க அமைதிச்சாரல்.

வாஷிங் மெஷினின் வம்சத்தில் முதியவர் அவர்!!!

said...

அந்தக் காலத்துல எங்க பாட்டி வீட்டுல இதேபோல ஒரு காப்பிக் கொட்டை அரைக்கிற மிஷின் இருந்தது.

துருத்தி வைச்சு இவங்க என்ன பண்ணுவாங்களாம்? நம்மைப்போல ஈயம் பூசுவாங்களாமா?

துவைக்கிற மெஷினோ?


ரொம்ப பிடிச்சுது டைப்ரைட்டிங் மெஷின் - பூர்வ ஜென்ம வாசனை!

said...

அந்தக் காலத்துப் பொருட்கள் அப்படியே மனதை அள்ளுது!

டைப் ரைட்டர் பார்த்தவுடனே தட்டிப் பாக்க முடிந்ததான்னு கேட்க தோணுது!

சிறப்பான பகிர்வு. உங்களால நாங்களும் பல இடங்களைப் பார்க்க முடிகிறது!

said...

பதிவு நன்றாக இருந்தது.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

said...

வாங்க ரஞ்ஜனி.

இப்படித்தான் பல பூர்வஜென்ம வாசனைகள் நம்மைத் தொடர்ந்துக்கிட்டே இருக்கு.! நானும் நியூஸியில் ஒரு டைப்ரைட்டர் வச்சுருக்கேன்.

ஆண்டீக் இல்லை. ஒரு 80 களில் வந்ததா இருக்கணும். ஜப்பான் சமாச்சாரம்.

நம்ம வீட்டில் வாடகைக்கு இருந்த ஒரு பழம் பொருள் வியாபாரி காலி பண்ணியபோது மறந்து விட்டுட்டுப் போயிட்டார்:(

என்னடா ஒரு பொட்டி கராஜிலே இருக்கேன்னு பார்த்தால் இது!
அவருடைய புது விலாசமோ காண்டாக்ட் நம்பரோ கிடைக்கலைன்னு நான் வச்சுருக்கேன். தூக்கிப்போட மனசாகலை. ரிப்பன் காஞ்சுபோய்க்கிடக்கு. புது மாத்துனா டைப்பலாம்:-)

ஆனா அதுவும் இப்போ கிடைக்காது போல இருக்கே!!!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

எல்லாம் 'சரித்திரம்' என்பதால் சுவை அதிகம்:-))

said...

வாங்க வேதா.

பதிவு பிடிச்சதுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.