Wednesday, April 03, 2013

முப்பது கைகளோடு நரசிம்ஹர்!!!

இது ரேவதி மண்டபம் என்றதும்  ஆஹா..... நம்ம ரேவதி,  மறக்கவிடமாட்டாகளேன்னு .... பெருமாளின் நட்சத்திரம் ரேவதி(யாம்)  அன்றைக்கு  அழகிய மணவாளன் ஜோரா இங்கே வந்துதான்  பக்தர்களுக்கு அருள்புரிவானாம்.  எதிரில் இன்னொரு மண்டபம். அர்ச்சுனமண்டபம். பகல்பத்துக் கொண்டாட்டம் இங்கேதான் என்று சொல்லிக்கொண்டு போன காளி முத்துவைத்  தொடர்ந்தோம். மல்லிகார்ச்சுன ராயர் கட்டித் தந்த மண்டபம் இது.

மூன்றாம்  திருச்சுற்றுக்கு வந்திருந்தோம். துலாபாரம்  செலுத்தும் இடம். என்னென்ன பொருட்களை செலுத்தலாமுன்னு  சுவரில் எழுதி வச்சுருக்கு.  19 வகை. அதில் ஒன்னைப் பார்த்ததும் 'அட' என்றேன்.  கடுகு!   பெருமாள் தாளிச்சுடுவார் போல!!!!

எனக்கென்னவோ துலாபாரமுன்னு சொன்னாலே குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவில்தான் நினைவுக்கு வருது.  சமீபகாலமா கவனிச்சது புதுக்கோவில்களில் கூட  துலாபாரம்  வழிபாடு செய்ய ஏற்பாடுகள்  உண்டாக்கப்பட்டிருக்கு.  ஸ்ரீரங்கத்தில் துலாபாரம் ஆதியில் இருந்தே இருக்கா? இல்லை இடைச்செருகலான்னு  பழைய ஆட்கள் யாராவது சொன்னால் தேவலை!

அடுத்து திருக் கொட்டாரம். ஸ்டோர் ரூம்! அடுத்து  செங்கமல நாச்சியார் தான்யலக்ஷ்மி, சந்நிதி. மஹாலக்ஷ்மி மந்திர். இவுங்க ரெண்டு பேருடன்,  கிருஷ்ணர், யோகநரசிம்மர், ராமன் என்று மொத்தம் அஞ்சு பேருக்குத் தனித்தனி சந்நிதிகள்.  எட்டிப்பார்த்தால் கண்ணில்  ரத்தம் வரும் நிலையில்:(  தனலக்ஷ்மிக்கே இப்படின்னா..............   ஹூம் .... என்னத்தைச் சொல்வது?

வலப்பக்கம் கொஞ்ச தூரத்துலே  உருளை வடிவமா பிரமாண்டமான  அஞ்சு   களஞ்சியங்கள்.  நெல், மற்றும் தானியங்களைக்  கொட்டி வைக்கும்   மெகா .....  மெகா சைஸ் குதிரு!   எப்பக் கட்டுனாங்கன்னு தெரியலை. ஆனால்  15 ஆம்  நூற்றாண்டு பழுது பார்த்தாங்கன்னு  கோவில் குறிப்பு சொல்லுது. இம்மாம் பெரிய சைஸுக்கு அவசியம் என்னவா இருக்கும்?  கட்டிவிட்டதோடு விடாமல் கோவிலுக்கு ஏராளமான நிலபுலன்களை அந்தக்காலத்துலே மானியமாக்  கொடுத்துருக்காங்க  அரசர்கள். அதுலே விளைஞ்சு வரும்  தானியங்களைத்தான் கோவிலில் வேலை செய்யும் அனைவருக்கும்  ஊதியமாகக் கொடுக்கறார் பெருமாள்.

 செய்யும் வேலைகளின் முக்கியத்துவம்  கருதி  வருசத்துக்கு இம்புட்டுன்னு  நெல் அளந்துருவார். ஹையஸ்ட் பெய்டு வேதாந்தம்  கற்பிக்கும் ஆசிரியர்கள்தான்!  400  கலம் நெல். அடுத்ததா  மீமாம்சம், வியாகரணம் கற்பிக்கும் ஆசிரியர்கள். 300 கலம். பார்த்துக்குங்க, கல்விக்கண்ணைத் திறந்து வைக்கும் ஆசிரியர்களுக்கு அப்போ இருந்த மரியாதைகளை!

(எனக்குத் தெரிஞ்சே பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது 'நல்லாப் படிக்கலைன்னா, கண்ணை விட்டுட்டு தோலை உறிச்சுக்குங்க'ன்னு சொல்வாங்க! )

 தலைமைக் கணக்கர், சோதிடர்கள், கூத்தர்கள், நடனக்கலை  ஆசிரியர்கள் வகைக்கு  200 கலமும் குழல் வாசிப்போர்க்கு 170 கலமும் கொடுக்கப்பட்டது.

தையற்காரர், தச்சர், பொற்கொல்லர், சிறுபறை வாசிப்போர், வடமொழி தென் மொழி மறை ஓதுவோர் வரிசைக்கு 150,  வைகாசித் திருவிழா நாடக நடிகர்கள் 120 ன்னுதான் சம்பளம்.

தண்ணீர் கொண்டு வருவோர், துணி துவைப்போர், குடை பிடிப்போர், சங்கு முழங்குவோர் ,நடன மகளிர், மண்பாண்டங்கள்  வினைவோர், காவல்காப்போர்  போன்ற மற்ற வேலைகளுக்கு தலா 100 கலமும் மேற்படியாரின்  உதவியாளர்களுக்கு 75 கலமுமாய் நிர்ணயம் செஞ்சுருந்துச்சுன்னு  கோவில் புத்தகம் சொல்லுது.

உள்ளே படுத்திருக்கும்  ஒரே  ஒரு  (பெரும்)ஆளுக்குப் பணிவிடை செய்ய எத்தனை நூறாட்கள் பாருங்களேன்!  ரெங்க ராஜ்ய பரிபாலனம்  ரொம்பப் பெருசுதான்!!!  அதான் களஞ்சியமும் பெருசாவே இருக்கு!  கோவில் நிலத்தில் பயிரிடுவோர், அப்போ  கொள்ளை அடிக்கலை என்பதும் முக்கியம்.

 வட இந்தியாவில் பயணம் செய்யும்போது   அங்கங்கே  கோதுமை மூட்டைகளை அடுக்கிப் ப்ளாஸ்டிக் சாக்குப்படுதா போட்டு மூடி வச்சுருப்பதைப் பார்த்திருக்கேன்.  அந்த சமயம்தான்  ஆயிரக்கணக்கான டன்கள் கோதுமை சரிவரப் பராமரிக்காததால்  கெட்டுப்போய் வீணாச்சுன்னும் அதை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாம் என்று  சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர் கருத்து தெரிவிச்சதும்  அதை எடுத்து தானம் செய்ய தங்களுக்கு அதிகாரமில்லைன்னு   உணவுப்பொருள் கழகம் சொன்னதாகவும் சேதி வந்துக்கிட்டு இருந்துச்சு.

அரங்கன் கோவில் கொட்டாரத்தில்  அந்தக்காலத்தில்  கொட்டி வைத்த தானியங்கள்  சீக்கிரம் கெட்டுப்போகாத அளவில் அந்த உருளைக் கொட்டாரங்கள் அமைச்சுருந்தாங்கன்னு  வாசிச்சதும்,  ஐயோ!  இந்த  முறையைப் பயன்படுத்தி உணவு தான்யம் வீணாகாமல் காப்பாத்தக்கூடாதான்னு  மனசுக்குத் தோணுச்சு. இப்பேர்ப்பட்ட அற்புதத்தின் அருமை தெரியாமல்  அவை இருக்குமிடம் பாழடைஞ்சு புதர்கள் மண்டிக்கிடக்கேன்னு  மனசு தவிச்சது உண்மை. 'பூச்சி பொட்டு' தாராளமாப் புழங்குமோன்னு ஒரு சந்தேகம் வேற!  உருளைகள்  கீழ் பாகம்   செங்கற்கள் சரிஞ்சு இடிஞ்சு வேற கிடக்கு:(

இன்னொரு மதில் சுற்றின் வழியாப்போறோம். நம்மை முந்திக்கிட்டுப் போகுது  பேட்டரி கார். கோவில் வகையில் ஒன்னும், தமிழகமுதல்வரின் காணிக்கையா ஒன்னும்  இருக்காம். நடக்க முடியாதவர்களை  மூன்றாம், நாலாம் பிரகாரங்களில் உள்ள முக்கிய சந்நிதிகளுக்குக் கொண்டுபோய் தரிசனம்  முடிஞ்சதும்  கொண்டு வந்து விடறாங்க. கோவில் அலுவலகத்தில்  போய்  இந்த இலவச  உதவியைப் பெற்றுக் கொள்ளலாம்.

 அருள்மிகு மேல் பட்டாபிராமர் சந்நிதி, வாசுதேவப்பெருமாள் சந்நிதி, தன்வந்திரி சந்நிதி  எல்லாம் இந்தத் திருச்சுற்றில்தான் இருக்கு.  தரையைப் பழுது பார்க்கும் பணி நடக்குது இப்போ!

ரங்கநாயகித் தாயார் சந்நிதிக்கு வந்தோம். நேத்து  தரிசனம் ஆச்சேன்னு இன்னிக்கு  உள்ளே போகலை. முன் மண்டபம் கலகல,  பூ வியாபாரம் கமகமன்னு ஒரு பக்கம்!  பகல்  வெளிச்சத்தில்  கோவில் பளிச்!. கம்பராமாயண மண்டபத்தின் அருகில் உக்ர நரசிம்மர் இருக்கார்.நேற்று உள்ளே போகலையேன்னு  ஒரு நிமிஷம் தரிசனம் பண்ணிட்டு வர்றேன்னு  கே எம் கிட்டே சொன்னப்ப, உள்ளே ஒன்னுமில்லை என்றார் அவர்.

போனமுறை இங்கே வந்தப்ப  ( அது ஒரு இருபத்திநாலு  வருசங்களுக்கு முன்னே!!!)  உக்ர நரசிம்ஹர் சந்நிதியில் தரிசனம் செஞ்சுக்கிட்டு இருந்தப்ப அங்கிருந்த பட்டர் நாங்கள் யாருமே எதிர்பாராத ஒரு விநாடியில் பெருமாளின் தீர்த்தத்தைக் கைநிறைய வாரி மகளின்  முகத்தில்   ஜ்லீர்னு  அடிச்சுட்டார்.  எல்லோருக்கும் திக்ன்னு ஆகிருச்சு. மகள் திகைச்சுப்போய்  நின்னுட்டாள்.  அப்பதான் அவர் சொன்னார் 'இனி பயம் என்பதே இவள் வாழ்விலிருக்காது'ன்னு!!!!   இது உண்மைன்னு கூட பல சமயம் நினைச்சதுண்டு!!! அப்ப ஒரு பெரிய நரசிம்மரை அங்கே பார்த்த நினைவு.

என்னடா....  அதெப்படி உள்ளே  ஒன்னுமில்லாமப் போகுமுன்னு   போய்ப் பார்த்தேன். மூலவருக்கு ஏதோ  பழுது.  புதுசா ஒன்னு செஞ்சுக்கிட்டு இருக்காங்களாம்.  திரை போட்டு வச்சுருக்கு. அதுவரை?  சின்னதா ஒரு உற்சவர்  இருக்கார். அவரை தரிசனம் செஞ்சுக்கிட்டு வெளியே இருந்த ஓவியங்களை க்ளிக்கினேன். ஹிரண்ய வதம், லக்ஷ்மிநரசிம்ஹன்,  Gகதையுடன் பெருமாள்  என்று அழகான ஓவியங்களில் சனம் ஆட்டோகிராஃப் போட்டு வச்சுருக்கு:( சிதிலமாகும் ஓவியங்களைச் சரிப்படுத்தினால் நல்லது.


அச்சச்சோ!!!! ஹிரண்யனுக்கு பதிலா இதை வதம் பண்ணிட்டேனே!!!! அதிர்ச்சியில்  கைகளால்  வாய் பொத்தும் சிம்ஹன்! 30 கைகள்! எனக்கிது அபூர்வம்!!! 
ஏழுகடல் தாண்டி, ஏழு மலை தாண்டி காட்டுக்குள்ளே இருக்கும் குகையில் ஒரு கிளி இருக்கும். ராக்ஷ்ஸனுடைய உயிர் அந்தக்கிளியிலே இருக்குன்னு  எங்க பாட்டி சொன்ன கதை போல இவன் உயிர்  அதுலேயா????


மேட்டு அழகிய சிங்கர் (உக்ர நரசிம்ஹர்) சந்நிதிக்கு   வலப்புறம் போனால் வைகுண்ட வாசல் !

கம்பராமாயண மண்டபத்துக்கு நேரே பின்னால் ஸ்ரீ கிருஷ்ணர் ராதா ருக்மிணி சந்நிதி.  ராதா ருக்மிணியா?  ருக்மிணி சத்யபாமா இல்லையோ????  இதுவும் சாத்தி இருந்துச்சு.  எங்கே பார்த்தாலும்  மண்டபங்களும்  கோபுரங்களும் ஏராளமான  சந்நிதிகளுமா  இருந்தாலும்  ஒரு சில சந்நிதிகளே  முக்கியமா இருக்கோ என்னமோ? இல்லே வெவ்வேற டைமிங்கா இருக்கலாம்.

புஷ்கரணிக்கு மதில் எழுப்பிக் கம்பி வேலியும் போட்டு வச்சது நல்லதுதான்.  அழுக்கில்லாமல் இருக்கு.  பக்கத்துலே கோதண்டராமர், குலசேகராழ்வார்  சந்நிதிகள்,

 வடகிழக்கு  மூலையில் இருக்கும்  ஆயிரங்கால் மண்டபத்துக்குள் இன்னொரு  குட்டியா  தேர் போல ஒரு டிஸைனில் திருமாமணி மண்டபம் . ராப்பத்துக்கு  நம்பெருமாள் இங்கேதான் எழுந்தருளுவாராம்.  அகளங்கன் திருவீதி கிழக்குப் பிரகாரம் முழுசும் மணல்வெளியாக் கிடக்கு. கோவில் பீச். விழாக்காலங்களில் மக்கள்ஸ் ஹாயா உக்கார்ந்து  ஆயிரங்கால் மண்டப நிகழ்ச்சிகளை ரசிக்கலாம்.



 வைகுண்ட ஏகாதசி சமயம் 47  தென்னை மரங்களின்  அடிப்பாகத்தை வெட்டிக்கொண்டுவந்து நட்டுப் பந்தல் போட்டுருவாங்களாம்.  அதென்ன 47ன்னு ஒரு கணக்கு?  ஆயிரங்கால் மண்டபத்தில் இருப்பவை  953 (கற்றூண்கள்)கால்கள்தான் . மற்றதெல்லாம் என்ன ஆச்சு?  தெரியலை. ஆனால் ஆயிரமுன்னு சொல்லிட்டு அதுக்குக்குறைவா இருந்தால்  பெருமாளுக்குப்பிடிக்காது.அதை ஈடு கட்டத்தான் இந்த 47!!!  கூட்டிக்கழிச்சுப் பார்த்தால் கணக்கு சரி:-)))))



இந்த ஆயிரங்கால் மண்டபமே  அடிபாகம் முழுசும் மண்ணில் புதையுண்டு கிடந்ததாம்.  அப்புறமா மண்ணைத் தோண்டி சரிப்படுத்துனாங்க,இங்கே பாருங்கன்னு  காமிச்சார் கே எம்.


வெள்ளைக்கோபுரம் பளிச்ன்னு மின்னுது.  தில்லிப்படையினரிடம்  இருந்து கோவிலைக் காப்பாத்த  உள்ளூர் மக்கள் செய்த தியாகம் ஒன்னா ரெண்டா?  வெள்ளையம்மாள் என்னும் பெண்,  தில்லிப்படைத் தளபதியை அழைச்சுக்கிட்டுக்  கோபுரத்தின் மேல் ஏறி  அவனையும் அங்கிருந்து தள்ளி, தானும் விழுந்து உயிரை மாய்ச்சுக்கிட்டாள்ன்னு  சம்பவம் சொல்லப்படுது. அவள் நினைவாக இந்தக் கோபுரத்துக்கு வெள்ளைக்கோபுரமுன்னு பெயர்னு சொல்றாங்களாம்.

தில்லிப்படையினர் கொள்ளையடிக்க வந்து   ஊர் மக்களை விரட்டிட்டு கோவிலுக்குள்ளேயே  குடி இருக்கத் தொடங்கியதும், அவர்களை விரட்டவந்த  ஊர் மக்களில் பனிரெண்டாயிரம் பேர்களை  தில்லிப்படையினர்  கொன்று குவிச்சதாகவும்  கோவில் சரித்திரத்தில் வாசிச்சப்போ மனம் நெகிழ்ந்து  போச்சு.  அந்தத் தியாகிகளையும் அவர்கள் தியாகத்தையும் இந்த வெள்ளைக்கோபுரம்  நினைவூட்டுதுன்னு நான் நினைக்கிறேன்.

கோபுரப்பட்டி ஆதிநாயகப் பெருமாள்  கோவிலில்  அரங்கனுக்காக உயிர்நீத்த அந்த பனிரெண்டாயிரம் பேர்களுக்கும் ஆடி அமாவாசை தினம்  தர்ப்பணம் செய்யறாங்கன்னு  தெரிஞ்சதும் கண்ணும் மனசும் கலங்கிதான் போச்சு.  நம்ம 'ரங்கன் பட்டபாடு' பதிவில்  காலில் கயிறு கட்டிக்கிடக்கும் பெருமாள் படத்தைப் பார்த்தீங்களே அவர்  இவர்தான்.  கோபுரப்பட்டி ஆதிநாயகன்.  திருவரங்கத்தில் இருந்து 10 கிமீ தொலைவில்தான்  இருக்காராம்.   உத்தமர்கோவில் தாண்டி மண்ணச்சநல்லூர் பக்கம். முதலிலேயே தெரிஞ்சுருந்தால் போயிருக்கலாம்:(

வெள்ளைக்கோபுர மணல்வெளியில்  கோபுரவாசலுக்கு எதிரே ஒரு நாலுகால் மண்டபம் இருக்கு.  பகலில் சுடும் மணலில் நடந்து பாதம் கொப்புளிக்காமல் இருக்க எதிர்ப்புறம் மதில் ஓரமா   மேற்கூரை ஒன்னு போட்டு வச்சுருக்காங்க.

சிற்பக்கலையை  அனுபவிக்க இப்போ நாம் சேஷராயர்  மண்டபம் போகிறோம். .

தொடரும்......:-)





45 comments:

said...

எங்க கோபால் படம் காணோம்?
நீங்க அவர் சாப்பிடும் போது எடுத்த படத்தை மட்டும் போட்டு...அவரை கவுக்கராமாதிரி தெரியுது...

said...

படங்களும் தகவல்களும் அருமை. ‘முப்பது கைகளோடு, வாயையும் கைகளால் மூடியபடி..’ எங்களுக்கும் புதிது. வாட்டர் டேங்க் போலிருக்கும் நெற்குதிர்கள் அழகு. வெள்ளைக் கோபுரம் பெயர்க்காரணமும் தில்லிப் படை செய்தியும் வலி.

said...

ஒவ்வொரு பகுதியா ரசிச்சு பார்க்க நேரம் தான் வேணும்...

மணல் வெளி - கோவில் சுற்றிய பிற்கு களைப்பினைப் போக்க, அங்கே அமர்ந்து கொண்டு இளைப்பாறுவது எனக்குப் பிடித்த விஷயம்.

said...

அது என்னப்பா. இப்படி ஒரு நரசிம்ஹரைப் பார்த்ததே இல்லை. :(

தெரிந்தவர்கள் யாராவது சொன்னால்
தேவலை. நெற்களஞ்சியம் எத்தனை பெரிசுப்பா.

ஒவ்வொரு வரியிலும் சேதிகள் நிறைந்திருக்கின்றன.
ஆதிநாயகன் கோவில் பற்றியும் இப்பத்தான் கேள்விப் படுகிறேன். இவ்வளவு பக்தியுள்ளங்கள் செய்த தியாகத்திற்காகவாவது கோவிலை இன்னும் நன்றாகக் காக்கலாம். படங்கள் அற்புதம். விவரங்கள் அதி அற்புதம்.

said...

பலருக்கும் சாப்பாடு பிரச்சனை இல்லை...

அழகான படங்கள்... வியப்பான தகவல்கள்...

said...

இது ரேவதி மண்டபம் என்றதும் ஆஹா..... நம்ம ரேவதி, மறக்கவிடமாட்டாகளேன்னு //

நம்ம ரேவதி நரசிம்மன்(வல்லிஅக்காதானே) அவர்கள் தானே!

நரசிம்மர் படங்கள் வெகு அழகு.

கோவிலைப்பற்றிய நிறைய தகவல்கள்.

தியாகத்தை காட்டும் வெள்ளை கோபுரம் . ஆயிரங்கால் மண்டப வரலாறு என்று நீங்கள் விவரிக்கும் போது நின்று நிதானமாய் பார்க்க வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்துகிறது.

said...

பள்ளி நாட்களில் கோடை விடுமுறை ஸ்ரீரங்கத்தில் தான். சென்னையிலிருந்து போகும் எங்களுக்கு மணல் வெளி விளையாடும் இடம். எத்தனை எத்தனை வருடங்கள் தொடர்ந்து போயிருக்கிறோம்!
செங்கமலவல்லித்தாயர் சந்நிதி முன்பு தான் பெருமாள் ஒவ்வொரு உற்சவ ஆரம்பத்தின் போதும் நெல் அளப்பார்.
முதல் படி 'திருவரங்கம்', இரண்டாவது படி 'பெரிய கோவில்' மூன்றாவதாக அளப்பதைத்தான் மூன்று என்பார்கள்.

காணக் கண் கோடி வேண்டும்.

வெள்ளைக் கோபுரத்திலிருந்து வெளியே வந்து இடது புறம் திரும்பினால் பாட்டி வீடு. பழைய நினைவுகள் அடுக்கடுக்காக வருகின்றன.

said...

நெல் அளவையன்று எல்லோருக்கும் நெல் மணிகள் பிரசாதமாக தரப்படும். வீட்டில் கொண்டு வந்து வைத்தால் அன்னத்துக்கு என்றுமே பஞ்சம் வராது என்பார்கள்.

தான்யலஷ்மி சன்னிதியின் இடது பக்கத் தூணில் மெகா சைஸ் காலணிகள் தொங்க விடப்பட்டிருக்கும். அதைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தும் சென்ற முறை அங்கே பட்டரிடம் கேட்டேன். வருடந்தோறும் பெருமாள் குறிப்பிட்ட ஒரு செருப்பு தைப்பவரின் கனவில் வந்து தனக்கு காலணிகள் தைத்துத் தரும்படி கேட்பாராம். அவை தான் இவைகள் என்றார். நம்முடைய காலணிகள் எப்படி தேய்ந்து பிய்ந்து போகிறதோ அது போல் பெருமாளுடைய காலணிகளும் தேய்ந்து போகுமாம். அப்படித் தான் இருந்தது.

வெள்ளைக் கோபுரம் தாயார் கோபுரம். தாயார் சன்னிதியின் வாசலில் மாலை நேரங்களில் உட்கார்ந்தால் அருமையான காற்று வாங்கலாம்.

பேட்டரிக் காருக்கு அலுவலகத்துக்கெல்லாம் செல்ல வேண்டாம். தேவைப்படுபவர்கள் யார் வேண்டுமானாலும் ஏறிக் கொள்ளலாம்.

மேலப் பட்டாபிராமர் சன்னிதி போகும் வழியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ரங்கா ரங்கா என்று கத்தினால் எதிரொலி கேட்கும்.

பெருமாளுகே வைத்தியரானவரை பார்த்தீர்களா?

said...

சிறந்த தகவல்கள் தொகுப்பிற்கும், ரங்க தரிசனத்திற்கும் நன்றி மேடம்

said...

முப்பது கை நரசிம்ஹன் (என்ன கதைன்னு
சொல்றீங்களா? ) ,வெள்ளைக்கோபுரம் ,12000 பேரின் தியாகம் ,அவங்களுக்கு தர்ப்பணம் , எவ்ளோ விவரங்கள் !!! அருமையான பெரிய விவரங்கள் எளிய நடையில் .... நன்றி .

said...

ஆயிரங்கால் மண்டபத்தில் தானியங்கள் அடுக்கி வைத்திருந்ததைப்பார்த்தேன் ஒருமுறை ..

இந்த அருமையான களஞ்சியங்களை சீர்ப்படுத்தி சேமிக்கமாட்டார்களோ..!

தங்க விமானம் பார்க்க ஏறிச்செல்லும் படிக்கட்டுகள் அருகே இரு பெரிய தொட்டிகள் நெய் சேகரிக்கவாம் ...

said...

நெற்குதிர்கள் அமைப்பு ரொம்பவே வியக்க வைத்தது. நம் முன்னோர்கள் இந்தக் கால இஞ்சினீர்களுக்கு சவால் விடற மாதிரி இருக்கு :-)

சாயந்திர நேர அரையிருட்டில் ஆயிரங்கால் மண்டபத்தைப் பார்த்த நினைவு லேசுபாசா இருக்கு. இப்ப தெளிவா உங்க பதிவில் பார்த்தாச்சு.

முப்பது கை நரசிம்மர்.. ஹைய்யோ!!!

said...

ஒன்னு சொல்றேன். திருவரங்கம் போனப்போ எனக்குப் பிடிச்சதே அந்த மகாலட்சுமி இருந்த எடந்தான். அமைதியா கூட்டமில்லாம அவள நிம்மதியா பாக்க முடிஞ்சது. முருகனாவே இருந்தாலும் எனக்கு நெருக்கி அடிச்செல்லாம் பாக்கப் பிடிக்காது.

நான் அங்க போய் தாயேன்னு கும்பிட்டு நின்னதும் அங்கிருந்த பட்டர் தீர்த்தம் குடுக்குறப்போ பரிபூர்ண ஆரோக்யப்பிராப்தின்னு சொல்லிக் கொடுத்தாரு. யாருக்குமே சொல்லாம எனக்கு மட்டும் சொன்னது புல்லரிச்சுப் போச்சு. தேவைப்படுவதும் அதுதானே.

ஆயிரம் சொல்லுங்கள்... ஜம்புவை விட அகிலாண்டேஸ்வரியும் அரங்கனை விட தாயாரும் எனக்கு எப்பவும் கனிவு காட்டுவார்கள். தஞ்சாவூர்க்காரியாக இருந்தாலும் கூட்டமில்லாம ஏகாந்தமா பாப்பா. சமயபுரத்தா மட்டும் என்ன.. கூட்டமாயிருக்குமேன்னு நெனச்சு போனா என்னடான்னு காத்தாட உக்காந்திருக்கா. ஆயிரம் இருந்தாலும் தாயில்லையா! மகமாயி!

அந்த நரசிம்மர் படம் வித்யாசமா இருக்கு. இரணியனுக்குப் பதிலா புலியைக் கொன்றுவிட்டு விரல்களைக் கடிக்கும் நரசிம்மர். அழகா இருக்கு.

said...

வாங்க நம்பள்கி.

உக்ர நரசிம்மர் சந்நிதியில் சுவர்ச் சித்திரங்களை கோபால் வியப்புடன் பார்க்கும் படம் போட்டுருக்கேனே பார்க்கலையா:-))))

சாப்பிடும் படம் ஒன்னு சீக்கிரமே வரப்போகுது. லஞ்ச் டைம் வரட்டும்!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

வெள்ளைக் கோபுர சமாச்சாரம் இன்னொண்ணு கூட இருக்கு. எழுத விட்டுப்போச்சு.

கோனேரி ராஜாவின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அழகியமணவாள தாஸர் மற்றும் இரண்டு ஜீயர்கள் கோபுரத்தின் உச்சிக்குச் சென்று தற்கொலை செய்துகொண்டார்களாம். இவர்களின் நினைவாக அவர்களின் திருவுருவங்கள் கோபுரத்தில் பொறிக்கப்படடுள்ளதைப் பார்க்கலாமாம்.

ஆனால்.... நான் பார்க்கலை:(

said...

அடக்குமுறை ஆட்சிகளுக்கு எதிரான தியாகங்கள் எண்ணற்றவைதான் வரலாற்றில்:(!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஆஹா...அப்ப இது கோவில் பீச் என்றது சரியாப் போச்சு:-))))

said...

வாங்க வல்லி.

சொல்ல விட்டுப்போச்சுப்பா.....

நெற்களஞ்சியம் ஒவ்வொன்னும் 5000 கலம் நெல் கொள்ளளவு!!!

வருமானம் வராத சந்நிதிகள் என்றால் கவனிப்பு இல்லையோ என்னவோ:(

இன்னும்சரியாப் பார்க்கலை. இன்னொரு பயணம் போகத்தான் வேணும்! அப்படியே ஆதி நாயகனையும்....


said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

இருபது ரூபாய் புத்தகம் தகவல்களைக் கொஞ்சம் நல்லாவே தந்தது. மேற்கொண்டு....

அதான் வாய் இருக்கே:-)))

said...

வாங்க கோமதி அரசு.

சாக்ஷாத் அதே ரேவதிதான்:-)))

பார்த்தது பத்தலை. இன்னொருக்கான்னு ஏங்குது மனம்:(

said...

வாங்க ரஞ்ஜனி.

சொந்த ஊர் நினைவுகள் எப்பவுமே பசுமரத்தாணிதான்!

எங்கூரிலும்(?) அரிசி அளக்கும்போது லாபம், ரெண்டுன்னுதான் ஆரம்பிக்கும்.

எனக்கு வெள்ளைக்கோபுரம் வழியே வெளியே எட்டிப்பார்க்கத் தோணலையேப்பா:(

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

ஊர் சுத்தல் கம்மியா? அதான் செருப்பே தேய்ஞ்சு போறது!!!

பெருமாள் சமையலுக்கு தினம் மண்பாண்டம் செஞ்சு கொடுக்க குறிப்பிட்ட ஆட்களை கோவிலில் நியமனம் செஞ்சுருக்கறதைப்போல் அவருக்கு செருப்பு தைச்சுக்கொடுக்கவும் ஒரு குடும்பம் இருக்காம். அவர்கள் சேவையை பாராட்டத்தான் மேற்கு உத்திர வீதியில்(திருவிக்ரமன் திருவீதி) ஒரு கோபுரத்துக்கு சக்கிலியன் கோட்டை கோபுரம் என்று பெயராம்.

பேட்டரிகாரை நிறுத்தி ஏறி இருக்கலாமோன்னு இப்போ தோணறது உங்க விளக்கம் பார்த்து:-)

இந்த கைடு பாருங்களேன் எதிரொலி ரகசியத்தை என்னிடம் சொல்லவே இல்லை:(

கூடுதல் தகவல்களுக்கு நன்றிப்பா.

said...

வாங்க லோகன்.

நலமா? ஆளை இந்தப்பக்கம் ரொம்பநாளாக் காணோமே!

ரங்கன் இழுத்துவந்துட்டான்:-)))

வருகைக்கு நன்றி.

said...

வாங்க சசி கலா.

இன்னும் நம்ம சுப்புரத்தினம் ஐயா இந்த இடுகையைப் பார்க்கலை போல!

எப்படியும் முப்பது கைகள் வந்துரும். அவர் விடமாட்டார்.

காத்திருப்போம்!

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

தங்கவிமானம் படிகள் இருக்கும் தகவலே ஊர் திரும்பினப்புறம்தான் கிடைச்சது:(

இந்த கைடு சொல்லி இருக்கப்டாதோ????

நெற்களஞ்சியம் சீரமைத்தால் அது எப்படிப்பட்ட உலக அதிசயமா இருக்கும் இல்லே!!!!

பூனைக்கு யார் மணி கட்டுவது:((

said...

வாங்க அமைதிச்சாரல்.

எப்பேர்ப்பட்ட டெக்னாலஜிப்பா அது!!!!!

பார்த்து மிரண்டு போயிட்டேன்!!!

வேர் ஈஸ் சுப்பு ஐயா??????

30 கைஸ் வெயிட்டிங்.

said...

வாங்க ஜிரா.

தாய்க்குத் தெரியாதா சேய்க்கு என்ன பிடிக்குமுன்னு!!!!

முதலில் ஆரோக்யம். அப்புறம்தான் ஐஸ்வர்யம். உண்மையைச் சொன்னால் ஆரோக்யத்தைவிட வேற ஐஸ்வர்யம் உலகில் உண்டோ????

அதென்னமோ முதல்நாள் இருட்டுலே தடுமாறினோம். மறுநாள் பகலில் பல சந்நிதிகள் மூடிக்கிடந்தன.

அடுத்தமுறை பார்க்கணும்.

அவன் கூப்பிடுவான்தானே?

said...

நெல்களஞ்சியம் இவ்வளவு பெரிது என்பது ஆச்சரியம். அழிந்துகொண்டுபோவது:(

said...

திருவரஙகத்தில் இருப்பதே ஒரு சிறப்பான அனுபவம்.அனுபவம் கிட்ட வாழ்ததுகள்

said...

// அடுத்தமுறை பார்க்கணும்.

அவன் கூப்பிடுவான்தானே? //

கண்டிப்பா. எதுக்கும் தாயார் வழியாவும் ஒரு ரெக்கமண்டேஷன் போட்டுக்கோங்க. கன்பர்முடா திரும்பவும் வரவைப்பான். :)

said...

டீச்சர், ஒங்க கிட்ட புடிச்சதே, இதான்;

கோயிலுக்குப் போவும் போது, ஹோமம்/ பரிகாரம் ன்னு கண்டதையும் பண்ணாம,

இறைவனை மட்டுமே கண் குளிர அனுபவிச்சிட்டு,

அவனைச் சுத்தி இருக்குற ஒவ்வொரு இடமும், தூணும், கொட்டாரமும், குளமும்,
சிலையும், யானையும், பறவையுமா அனுபவிக்கிறீங்க பாருங்க... அதான்! I like it:)

ஆழ்வார்கள், இப்பிடித் தான் அரங்கனை அனுபவிச்சாங்க!
- ஒரு ஹோமம்/ பரிகாரம் -ன்னு பண்ணினாங்களா? No!
- தங்க ரதம்/ வெள்ளிக் கவசம் -ன்னு உண்டியில போட்டாங்களா? Never!

கோயிலைச் சுத்தி இருக்குற வீடு, தோட்டம், தொரவு,
யானை, பறவை -ன்னு தான் பாடுறாங்க பாசுரத்தில், கூடவே இறைவனையும், சில வாழ்வியல் உண்மைகளையும்!
----

பொன்னிசூழ் திருவரங்கம், காவிரியில் பனம்பழம் வீழ்ந்து சிதற,
வாளை மீன்கள் தான் மேல் எழுந்துத் துள்ளிக் குதிக்குதோ -ன்னு கொக்கு பறந்து போய் ஏமாந்துச்சாம்:)

கரண்டம் ஆடும் பொய்கையுள் - கரும் பனைப் பெரும் பழம்
புரண்டு வீழ வாளை பாய் - குறுங் குடி நெடுந் தகாய்

காதல் மடப் பிடியோடு
களிறு வருவன கண்டேன்
-ன்னு பாடுவாரு எங்கள் அப்பர் பெருமான்; இவரு சாமிய பாக்கப் போனாரா? யானையின் காதலைப் பாக்கப் போனாரா? -ன்னே தெரியாது:)

அப்படி, ஆழ்வார் பயணம் போல் ஒங்க பயணப் பதிவுகள் வாழ்க!:)


said...

திருவரங்கத்தில் நீங்க பார்த்தது ரெண்டு வகை
1) சாமி சம்பந்தமானது - அதெல்லாம் சுத்தமா, ஏதோ கொஞ்சம் பராமரிப்போட வச்சிருக்காங்க
2) இராமானுசர் முதலானோர் சம்பந்தமானது - நெல் கொட்டும் கொட்டாரமெல்லாம் அதான்; இப்போ பராமரிப்பு இல்லை:((

கோயில் உண்டி, கருப்புப் பணம் இதெல்லாம் வேணாம்;
பொது மக்களுக்குத் தேவையான உணவு/ நெல், மருந்து -ன்னு குடுங்க-ன்னு கேட்டு, அதற்குக் கொட்டாரம் கட்டியது இராமானுசர்;

இந்த உருள் கொட்டாரங்கள், கிராமத்தில் உள்ள நெற் குதிர் போலத் தான்;
ஆனா, கீழே சூடேறச் செங்கல்லும், உட்புறச் சுவரில், சுண்ணாம்பு/வைக்கோல் கலந்த பூச்சும் இருக்கும்; நீர்த்துப் போய் அழுகிப் போகாமல், அதே சமயம் பூச்சிப் பொட்டு தாக்காமல், இப்படியொரு வழி = கொட்டாரம்!

இதே போல, மருந்து/ மூலிகைக்கும் சிறு "கங்காளம்/ காளாஞ்சி" உண்டு;
அதெல்லாம் இன்னிக்கி காணோம்; ஆனா மருந்துக் கடவுள் -ங்கிற கதையும், தந்வந்திரி சன்னிதி மட்டும் அப்படியே இருக்கு;

கோயில் ஒழுகு முதலான பல கல்வெட்டுகள்,
ஓலைச் சுவடிகள் பாதுகாப்பா வைக்கும் இடங்களும் உண்டு;

//தையற்காரர், தச்சர், பொற்கொல்லர்,
தண்ணீர் கொண்டு வருவோர், துணி துவைப்போர், குடை பிடிப்போர், சங்கு முழங்குவோர்//

இவங்களையெல்லாம் Cheap Labor ன்னு கருதாமல்,
கோயில் அந்தணர்கள்-பூசை செய்வோருக்கு என்ன அகவிலைப் படிகளோ, இவர்களுக்கும் அப்படியே தர ஏற்பாடு செய்தவர் இராமானுசர்;

ஒவ்வொருத்தருக்கும் Job Description ன்னு எழுதிக் "கோயில் ஒழுகு" -ன்னு பொறிக்கச் செய்தார்;
அவர்களை வெறுமனே temporary contract workers ன்னு கருதாமல், அவர்களுக்கும் மரியாதை மிக்க இடம்;

கோயில் வண்ணான்
= அவனுக்குப் பேரு "ஈரங் கொல்லி உடையார்" ன்னு வச்சாரு;
துணி துவைச்சி, ஈரத்தைக் கொல்லுறான்-ல்ல?:)
அவன் தரும் துணியை அல்லவோ, அரங்கன் சித்தாடை கட்டிக்கிட்டு உலாப் போவுறான்?

நம்பெருமாளை, பூணூல் இல்லாத "சார்த்தாத முதலிகள்" தூக்க வேணும்;
சாதி இல்லாத ஆழ்வார்களை, கோயில் அந்தணர்கள் தூக்கி வர வேணும் -ன்னு எல்லாம் வகுத்துக் குடுத்தவர், இராமானுசர்;

அதான் பெரியார் பக்தரான பாரதிதாசன், ரெண்டே ரெண்டு ஆன்மீக அன்பர்களை மட்டும் கொண்டாடினாரு; பெரியார் பாசறையில் இருந்துக்கிட்டே, அவங்க மேலும் பாட்டும் எழுதினாரு:)
1) இராமானுசர்
2) வள்ளலார்

Btw, திருவரங்கம் கோயில் வாசல் தெருவில், பெரியார் சிலையை தரிசித்தீர்களா?:)



said...

//30 கை நரசிம்மர்//

சரியா எண்ணலையோ? அது 32 கை:)
16 each on each side!
ரெண்டு கை இரத்தம் குடிக்குது; Finger Taste in Mouth:)

நல்லாப் பின்னாடி பாருங்க உங்க போட்டோவை;
நரசிம்மருக்குப் பின்னாடி ரெண்டு இறக்கையும் இருக்கும்! Big Feathers!

"கண்ட பேருண்ட நரசிம்மர்" -ன்னு பேரு!
கதையை நான் சொல்ல மாட்டேன்; சொன்ன பேரை வச்சி நீங்களே தேடிக்கோங்க:)

சமயப் போட்டியில் உதித்த கப்சாக்கள்!
* இவரை அடக்க அவரு = சரபேஸ்வரர்
* சரபத்தை அடக்க இவரு = கண்ட பேருண்டம்
Tit for tat; tat for tit:)

said...

ஒரு சிலருக்கு, எப்பமே தத்தம் சுய பெருமிதங்கள்;
அதைச் சுமக்கும் "சுமைதாங்கி"யாத் தான் இறைவனை நடத்துவாங்க:(

* Such people don't have God
* They just have Religion
Their attachment is to Religion only & it's so called "Greatness"

அப்படி வந்த கதைகள் தான் இவை:
* வராக அவதாரமா? = அதன் கொம்பை ஒடிச்சி மாலையில் கோத்துக்கிட்டாரு
* வாமன அவதாரமா? = தோலை உரிச்சிச் சட்டையாப் போட்டுக்கிட்டாரு (சட்டநாதர்-சீர்காழி)
* நரசிம்ம அவதாரமா? = அடக்கிக் கொன்னுட்டாரு சரபேஸ்வரர்

இப்படியெல்லாம் திரிச்ச விட்டா, இவனுக சும்மா இருப்பானுகளா? ரெண்டும் ஒரே புராணக் குட்டை தானே?
இயற்கையான சங்கத் தமிழை அழித்த புராணக் குட்டை:(

* சரபம் = பறவையா வந்துச்சா?
* அந்தச் சரபத்தை அடக்க = "கண்ட பேருண்டம்" -ன்னு "பறவை நரசிம்மர்"

இவனுங்க பதிலுக்குத் திரிச்சி விட்டானுக:)
அதான் அந்த "ஓ-வியம்"! யாரோ, நாயக்கர் காலத்தில் வரைஞ்சி வச்சி ஓவியமாத் தான் தெரியுது;
பின்னாளில் உருவான ஓவியம்; எவர் கண்ணிலும் அதிகம் படாமல், ஒரு மூலையில்...

கருணை வள்ளலான சிவபெருமான் - நஞ்சுண்ட பிரான்;
அவரா நரசிம்மரை அடக்கிக் கொன்னாரு? சரி, அப்படியே இருந்துட்டுப் போவட்டும்; அதுக்காக, பறவை நரசிம்மத்தின் மடியில் ஈசனைப் பார்க்க, மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு;

முடிஞ்சா, அந்தப் படத்தை எடுத்திருங்க டீச்சர்.. Request Only!
இல்லீன்னா, சுட்டியாக் குடுத்துருங்க; பார்க்கத் துணிவுள்ளவர்கள் பார்த்துக்கிடட்டும்...

முருகா,
கலை உரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும்
கண்மூடிப் பழக்கமெல்லாம், மண்மூடிப் போக!






said...

//கோபுரப்பட்டி ஆதிநாயகப் பெருமாள் கோவிலில் அரங்கனுக்காக உயிர்நீத்த அந்த பனிரெண்டாயிரம் பேர்களுக்கும் ஆடி அமாவாசை தினம் தர்ப்பணம் செய்யறாங்கன்னு தெரிஞ்சதும் கண்ணும் மனசும் கலங்கிதான் போச்சு//

திருக்குடந்தை (கும்பகோணம்)
வல்-வில் பெருமாள் (சாரங்கபாணி) கோயில்;

இந்த ஆலய அலுவலர் ஒருவர், கோயிலுக்காகவே வாழ்ந்துட்டாரு; கல்யாணமே பண்ணிக்கலை;
சதா, ஆலய முன்னேற்றம், வரும் அடியவர்களுக்கு வசதி-ன்னே இருந்துட்டாரு;

இவரு இறந்த போது, இவருக்குச் சொந்தம் -ன்னு யாருமே இல்ல:(

வல்-வில் பெருமாள், அன்று முதல், இன்று வரை, ஒவ்வொரு வருசமும், ஈர ஆடை உடுத்தி, இவருக்குத் தர்ப்பணம் குடுக்குறாரு;
இன்னிக்கும் ஆண்டுத் திதி அன்னிக்கிப் போனீங்கனா, பெருமாளை ஈர ஆடையில் காணலாம்;

108 திருப்பதிகளில், தர்ப்பணம் குடுக்கும் பெருமாள் = குடந்தைப் பெருமாள்
-----

நீங்க பதிவில் சொன்னதால் இதை இங்கிட்டுச் சொல்லுறேன்...

said...

வாங்க மாதேவி.

அற்புதம் அழிஞ்சுக்கிட்டு வருதேன்ற அங்கலாய்ப்புதான் எனக்குப்பா:(

said...

வாங்க மலைக்கோட்டை மன்னன்.

பெருமாளிடம் பொறுப்பைக் கொடுத்தாச்சு. இனி அவன் பார்த்து செய்யட்டும்.

செஞ்சுருவான். அவனுக்கு வேற வேலை என்னவாம்?

அவனுக்கும் அது ஒரு அனுபவம்தானே:-)))

said...

ஆமாம் ஜிரா.

ப்ராப்பர் ச்சேனலும் அதே அதே:-))))

said...

வாங்க கே ஆர் எஸ்.

அன்றெழுதின எழுத்தை அவனாலேயே அழித்தெழுத முடியாதாம். எங்க பாட்டி சொல்வாங்க. அதனால் எங்கும் பரிகாரம் ஏதுவும் செய்வதில்லை.

அவன் கொடுத்த கண் எல்லாத்தையும் அனுபவிக்கதானே!!!!

said...

கொட்டாரம் மேல் விவரங்கள் அற்புதம்!

15 படுக்கை வசதியோடு (நெசமாவா?)மருத்துவமனை ஒன்னு கோவில் திருவீதிகள் ஒன்னில் அமைச்சவராச்சே அந்த கருணைக்கடல்.

இன்றைக்கு அவரைப்பத்தி எனக்குத் தெரிஞ்சவரையில் இடுகை ஒன்னு போட்டுருக்கேன்.அதுக்கு என்ன மொத்து வாங்கப்போறேனோ?

ஓம் நமோ நாராயணாய!!!

said...

கே ஆர் எஸ்,


கைகளை எண்ணியவள், இறக்'கைகளை' விட்டுட்டேன் பாருங்க:(

இந்த கண்ட பேருண்ட பக்ஷிதான் நான் சின்னப்புள்ளையா இருந்தப்ப கேட்ட கதைகளில் வந்த அண்டபேரண்ட பக்ஷி!!! ஆஹா..... இப்போதான் புரியுது!!!

தீவிரமா சைவ வைணவ எதிர்ப்புகள் இருந்த சமயத்துலே ரெண்டு பேருக்கும் ஆகாம எப்படியெல்லாம் கதை பண்ணீ விட்டுருக்காங்க பாருங்க:(

எனக்குத் தெரிஞ்சவரை நரசிம்ஹரின் ஆவேசம் அடங்காமல் கொதிச்சுக்கிட்டு இருந்த சமயம் சரபேஸ்வரர் வந்து நின்னு அவர் கோபம் தணிஞ்சது என்றவரைதான் கேள்விப்பட்டிருந்தேன்.

படத்தை நம் பதிவில் இருந்து எடுப்பது பிரச்சனை இல்லை. பல ஆயிரம்பேர் வந்து போகும் கோவிலில் இருக்கும் படம்தானே இது.

குறைஞ்சபட்சம் இதன் மூலம் நம்ம பதிவர்களுக்காவது உண்மைக்கதை தெரியும் என்ற நம்பிக்கையில் விட்டு வைக்கிறேன்.

அதான் சிம்மமே... oops....mistaken என்றுதானே முகபாவனையில் சொல்கிறது,இல்லையோ!!! ஆங்காரமே இல்லை கவனிச்சீங்களா?

இன்னொன்னு இப்போ படத்தை எடுத்தால் தலைப்பை எப்படி ஜஸ்டிஃபை செய்வதாம்?

இறைவனே இதை சட்டை செய்ய்லைன்னு இருக்கணும்.

நம்ம வாசகர்கள் 110 பேரும் இதைப் பார்த்துத் தெளிஞ்சாச்சு:-)))

said...

ஆமாம் கே ஆர் எஸ்.

கும்மோணம் சாரங்கபாணி கோவிலில் அந்த பக்தர் திதியன்னிக்குக் காலையிலே மூலவர் தரிசனம் இல்லை. சந்நிதி அரைநாள் பூட்டியே இருக்கும்.

லோகம் முழுசுக்கும் அவந்தானே தாய் தந்தை எல்லாமே!

said...

துளசிதளம்: முப்பது கைகளோடு நரசிம்ஹர்!!! = இந்த பதிவு ஒரு கலைப் பொக்கிஷம். தூர்ந்து போகும் இடங்களை, சிற்பங்களை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி மேடம் துளசி கோபால் - Tulsi Gopal

said...

கோவில் கொள்ளை கொள்ளவந்தோரை கோபுர உச்சிலேற்றி தன்னோடு உயிர்மாய்த வெள்ளையம்மாள் வீரச்செயல் மெய்சிலிர்க செய்தது ! கோவில் இருக்கும் இடமறிய அவா !

said...

வாங்க கவிநேசன்.

இந்தக் கோவில் திருவரங்கம் ரங்கநாதர் கோவில். அங்கேதான் இருக்கு இந்த வெள்ளைக்கோபுரம். சேஷராயர் மண்டபத்துக்கு அருகில்.