Wednesday, August 21, 2013

கொல்லன் தெருவில் ஊசி விக்கறாங்க போல!!! (மலேசியப் பயணம் 8 )

உலகத்தின் விலை உயர்ந்த கைக்கடிகாரம் வேணுமா?  ரெண்டே முக்கால் அமெரிக்கன் டாலராமே.... அம்பது ரிங்கிட்டுக்குப் பேரம் பேசி வாங்க ஆசையா?  Rolex, Cartier எல்லாம் தண்ணிபட்ட பாடு! இல்லே,  வேற எதாவது ப்ராண்டட் பொருள் வாங்கணுமா...பேசாமக் கிளம்பி  ஜலான் பெடாலிங் வந்து சேருங்க. இங்கெதான் நம்ம மாரியம்மன் கோவிலுக்குத் தொட்டடுத்து இருக்கு இந்தத் தெரு. ஒரு நிமிச நடை.












சீனச்சாமி Guan Di கோவில் கொண்டுள்ளார். வீரத்துக்கான சாமி.  பழைய காலத்தில்  போர் வீரர் என்னும் அந்தஸ்த்து எவ்ளோ உயர்வா இருந்துருக்கு பாருங்க. இவரை வழிபட்டால்  மனசில்  தைரியம் கூடும் என்பதுதான் விசேஷம். இப்பவும் வாழ்க்கையில் வேறுவிதமாப் போராடத்தானே வேண்டி இருக்கு. நின்னு ஜெயிக்க மனோதிடம் வேண்டாமோ?  உள்ளே போய் வேண்டிக்கலாமுன்னா கோவில் மூடிட்டாங்க. வெளியெ நின்னே கொஞ்சூண்டு தைரியம் கொடுன்னு வேண்டிக்கிட்டு  அங்கிருந்து ஒரு நிமிச நடையில் புகழ்பெற்ற Jalan Petaling  தெருவுக்குள் நுழைகிறோம்.






 சின்னச்சின்னப் பூச்செண்டுகள்  சிரிச்சு வரவேற்குது. மலர்களைக்கொடுத்து மகிழ்விக்கும் ஒரு நல்ல கலாச்சாரம் சீனர்களுக்கிடையில் இருக்கு.  வெறுங்கையா,  யாரையும் பார்க்கப் போவதில்லையாக்கும் கேட்டோ!

இதுக்காக அதிகம் செலவு பண்ணனுமுன்னு அவசியம் இல்லை.வெறும் மூணு ரிங்கிட் முதல்.....


பெரிய பலாப்பழங்களை வெட்டி வச்சு, சுளை பிரிச்சு சின்ன ட்ரேயில் அடுக்கி மூடி வச்சுருக்காங்க.  சல்லீசு. ஆனால்  இப்படி ஒரு அடர்ந்த நிறமான்னு  நம்ம கோபாலுக்கு யோசனை!


லோகத்தின் எல்லா பொருட்களுக்கும் போலி  இங்கே கிடைக்குதுன்னா...  பழத்திலுமா இருக்கும்? சினிமாக்களின் டிவிடிக்கள் கொட்டிக் கிடக்கு. படம் ரிலீஸ் ஆகுமுன்னே கூட இங்கே கிடைச்சுருது !


பொதுவா சீனர்களுக்கு  வெளியே உணவு உண்ணும் கொண்டாட்ட மனநிலை அதிகமா இருக்குன்னு என் தோணல். எங்கூரிலும் பாருங்க..... சீன உணவுக்கடைகளில் சீனர்களே கூட்டம்கூட்டமா குடும்பத்தோடு வந்து சாப்பிடுறாங்க. அதே சமயம் நம்ம  இந்திய ரெஸ்டாரண்டுகளில்  வெள்ளையர்கள்தான் இங்கொன்னும் அங்கொன்னுமா இருந்து  சாப்பிடுவாங்க.  நம்மைப்போலுள்ள  மக்கள்ஸ், வீட்டுலேசெய்யும் அதே சாப்பாட்டை, அங்கே போய்க் காசைக்கொட்டிக் கொடுத்துத் திங்கணுமா என்ற நினைப்புதான்.



பொதுவா நீங்க கவனிச்சீங்கன்னா.... சீனாவைத் தவிர்த்த ஏனைய நாடுகளில் இருக்கும் பெரிய ஊர்களில் சைனாடவுன் என்ற ஒன்னு இருப்பதைப் பார்த்திருப்பீங்க.  அதிலும் வெள்ளைக்கார நாடானால்....  இந்த ஏரியாவே தனிச்சுத்  தெரியும்.  அங்கே  24 கேரட் சுத்தத் தங்க நகைக்கடை கூட இருக்குமுன்னா பாருங்க. எங்கூரில் ஒரு ஏரியா (நம்மூட்டாண்டைதான்) இப்பதான் மெள்ள மெள்ள சைனா டவுனா டெவலப் ஆகிக்கிட்டு  வருது. இன்னும் ஒரு பத்து வருசத்தில்  கூரையில் சிகப்புக் கலருடன், சிங்கச் சிலைகளும் ட்ராகன்களுமா மாறப்போவது உறுதி. பலசமயங்களில் சீனர்களின் ஒற்றுமை பார்த்தால்  வியப்பாத்தான் இருக்கு எனக்கு! நாடு முழுசும் ஒரே மொழி என்பதும் ஒரு  காரணமோ?

இங்கே கோலாலம்பூரிலும் வெள்ளீயச்சுரங்கத்தில் வேலைக்குன்னு சீனர்கள் வர ஆரம்பிச்சது, இந்த சைனா டவுனுக்கு  விதை போட்டது. 1873 ஆவது வருசம். அப்பத்தான் மாரியாத்தாளும் இங்கே இடம்பிடிச்சு உக்கார்ந்தாள். போட்டின்னா விலகிப்போறவளா :-)  சுரங்க வேலையில் சீனர்களுக்கு எப்படி இவ்ளோ ஈடுபாடுன்னு தெரியலைங்க. நம்ம நியூஸியிலும் கூட  1862 இல் தங்கம் இருக்குன்னு கண்டுபிடிச்ச கையோடு முதன்முதலில்  சீனர்கள்தான் சுரங்கவேலைக்கு தயார்னு வந்து இறங்கினாங்க. அவுங்க தலைமுறைகள் இங்கே  இப்போ வந்து குடியேறும் சீனர்களிடமிருந்து வேறுபட்டுத்தனியா பெருமிதத்தோடு நிக்குதுன்றது வேற கதை.

சிகப்பு நிறத்தில் நாலைஞ்சு பேப்பர் லேண்டர்னைக் கட்டிவிட்டதும் ஏரியாவுக்கே ஒரு களை வந்துருது பாருங்க.

Buskers என்ற பெயரில் கொல்லன் தெருவில்  ஊசி விக்கறாங்க. அன்னாடக் கைச் செலவுக்கு ஆச்சு பாருங்க.


தெருவோர உணவுக்கடைகள் ரொம்பி வழியுது இங்கே. எல்லாம் கூடியவரை சுத்தம்தான். ஆனால் நம்ம நாக்கு சங்கீதாவையில்லெ தேடுது.  அங்கே இங்கேன்னு விசாரிச்சுக்கிட்டுப்போய்ச் சேர்ந்தோம்.  இந்த ஏரியாவில் ஏழெட்டு இந்திய உணவகங்கள். பெயர்ப்பலகைகள் எல்லாம் தமிழிலும் இருக்கு, ஜோதிஜி.





முதல்  Franchise  கொடுத்த  2005 முதல் சங்கீதா  மலேசியாவில் இயங்குது . Kopatha  group (நகை வியாபாரம்)  எடுத்து நடத்துது. நம்ம சிங்காரச் சென்னையில் 1984 இல் அர்மீனியன் தெரு (சைனா பஸார்) வில்  'முதல் சங்கீதா ' ஆரம்பிச்சு இப்ப சென்னையில் ஏராளமான கிளைகளுடனும், சில வெளிநாடுகளில் Franchise கொடுத்தும் வளர்ந்துக்கிட்டே இருக்காங்க. இவுங்க க்ரூப்பில் இப்போதைக்கு 2700 பேர் வேலை செய்யறாங்களாம். இப்போ நாம் சாப்பிடப் போற இந்தக் கிளையில் 25 பேர் வேலையில். நமக்கு பரிமாற வந்தவர் மணிகண்டன். கும்மோணத்துக்காரர். இளைஞர்.  மெனு கார்டை வாங்கிப் பார்த்தேன். இளந்தோசையாம். எப்படி இருக்கும்? ஆவல்தான். ஸ்டாட்டரா  ஒரு வெங்காயப் பக்கோடா.





கோபாலுக்கு ஒரு செட்  கல்தோசை & எனக்கொரு செட் இளம் தோசை.  மெட்ராஸ் ஃபில்ட்டர் காஃபி இருக்காம். அசல் பாலா? ஆமாம்.  அஞ்சு நாளாச்சு காஃபி டவராவைக் கண்ணுலே பார்த்து.....

ஸ்வீட்ஸ் கார்னர் என்று ஒரு பக்கம் கண்ணைப் பறிக்குது. எங்க கிறைஸ்ட்சர்ச் மாநகரில் இல்லாத அரிய காட்சி. மறுநாள் கொண்டாட்டத்துக்காக கொஞ்சம் இனிப்புகள் பார்ஸல் ஆச்சு. எண்ணி ரெவ்வெண்டுதான், ரெண்டு வகையில்.

 கோபாலுக்கு 'அல்வா' கொடுக்கலாமுன்னு ரொம்பநாளா இருந்த ஆசையை....  நிறைவேற்ற நல்ல நாள் நாளைக்கு!











'பத்துமலை போயாச்சா?' ன்னார் மணிகண்டன். நாளைக்குன்னேன். அங்கே பெருமாள் இருக்கார்னு வாய்மொழிந்ததும் பரபரப்பு தொத்திக்கிச்சு. எங்கே எங்கேன்னேன். போனவுடன் தெரியும் என்ற அருள்வாக்கு:-)

நம்ம அங்கலாய்ப்பு தெரிஞ்சு, பெருமாள் எப்படியெல்லாம்  சேதி அனுப்பறான் பாருங்க!

மழை இன்னும் விட்டபாடில்லை. கொஞ்சம் காத்திருப்புக்குப்பின் ரெட் டெக்ஸி கிடைச்சு , நம்ம பார்க் ராயல் வந்திறங்கினோம். தொட்டடுத்துள்ள சூப்பர் மார்கெட் போய்  ப்ரேக் ஃபாஸ்டுக்கான சில பொருட்களை ( ம்யூஸ்லி, நறுக்கிய பழங்கள்.  ஒரு லிட்டர்  அஸ்ட்ராலியா இறக்குமதி பால், அரைக்கிலோ சக்கரை, ஒரு சின்ன நெஸ்காஃபி பாட்டில்) வாங்கிக்கிட்டோம். இன்னும் மூணு நாள் இருக்கு.  தினம் காலை  உணவுக்காக ரயில் பிடிச்சுப்போய்னு அலைய முடியாது கேட்டோ!




வரும் வழியில் இரவு லைட்  அலங்காரத்தோடு பெட்ரோனாஸ் கோபுரங்கள் ஜொலிச்சது. அழகாத்தான் இருக்கு!


தொடரும்.........:-)

PIN குறிப்பு:  நாளைய  (ஜூன் 5)கொண்டாட்டத்துக்காக கொஞ்சம் நிறைய இனிப்புகளைப் போட்டு இருக்கேன். யார் யாருக்கு எது விருப்பமோ அவைகளை தாராளமா எடுத்துக்கலாம்.


25 comments:

said...

நான் ஸ்வீட் சாப்பிடக் கூடாதாம். என் பெண் ஆர்டர். சுகர் வந்து 20 வருடம் ஆச்சு. எத்தனை நாளைக்கு ஸவீட் சாப்பிடாம இருக்கிறது. அதுவும் ஒரு வாழ்க்கையா?

பொண்ணுக்குத் தெரியாமல் அப்பப்ப சாப்பிட்டுக்கறதுதான்.

said...

ரசித்தேன்... சுவைத்தேன்...

said...

படங்களை சும்மா சுட்டுத்தல்லியிருக்கீங்க... சூப்பர்...

said...

இந்த தொடர் முழுக்க நான் ரசித்த ஒரு விசயம்.

பொதுவாக பத்திரிக்கையில் படித்த பலரின் பயணக்கட்டுரைகளை சுயபுராணமாக இருக்கும். சில படங்கள் மட்டுமே லே அவுட் செய்து இருப்பாங்க. ஆனால் பதிவுகளில் நமக்கான சுதந்திரம் இருப்பதால் இண்டு இடுக்கு முதல் சந்தித்த கவர்ந்த யோசித்த ஆச்சரியப்பட்ட அத்தனை விசயங்களையும் செய்திகளாக பகிர முடியும் என்பதை உங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகின்றது.

அந்த மாரியம்மன் கோவில் என் வாழ்வில் மறக்க முடியாத மறக்க கூடாத இடம். தொடர்ந்து மூன்று மணி நேரம் கூட அங்கே ஒரு சமயத்தில் இருந்துள்ளேன். அன்று ஞானம் தந்த போதி மரம்.

said...

பழைய ரெண்டு பதிவுகளுக்கு வர முடியல:( மலேசிய மாரியாத்தா மன்னிக்கணும்:)

//வெளியெ நின்னே கொஞ்சூண்டு தைரியம் கொடுன்னு வேண்டிக்கிட்டு அங்கிருந்து//

Why கொஞ்சூண்டு டீச்சர்?
நிறைய தைரியம் கேட்கலாமே?:)

//சீனர்களின் ஒற்றுமை பார்த்தால் வியப்பாத்தான் இருக்கு எனக்கு! நாடு முழுசும் ஒரே மொழி என்பதும் ஒரு காரணமோ?//

ஐய்யய்யோ; அங்கேயும் பல மொழிகள், இனக் குழுக்கள் உண்டு!:)
Mongolian, Zhongyu,
Manchurian, Xibe
Hongkong-இல் பேசும் Cantonese..

எனக்குத் தெரிஞ்சது இவ்ளோ தான்;
தமிழ் ஒப்பியல் ஆய்வு செய்த போது அறிந்து கொண்டது..
ஆனா, தெரிஞ்ச மக்கள் கிட்ட கேட்டீங்க-ன்னா இன்னும் 40-50 மொழிகளின் பேரைச் சொல்லுவாங்க! ஒவ்வொரு மாநிலத்துக்கும் வெவ்வேறு ஆட்சி மொழி:)

//பேப்பர் லேண்டர்னைக் கட்டிவிட்டதும் ஏரியாவுக்கே ஒரு களை வந்துருது பாருங்க//

எனக்கு Paper lantern ரொம்பப் பிடிக்கும் டீச்சர்;
தோழனுக்காக, Harry Potter போன்ற Classics ஆங்கிலப் படப் போஸ்டர்கள் வாங்கும் போது, சில வித்தியாசமான Paper lantern-களை, அதே தளத்தில் வாங்குவேன்!

நட்சத்திரம், உலக உருண்டை, தேனடை (Honeycomb)
எல்லாத்துக்கும் மேலா, காதல்-இதயம் -ன்னு Paper lantern-கள் இருக்கு!

Violet Color ரொம்பப் பிடிக்கும்; அதுலயே உள் வண்ணங்கள் வேற இருக்கும்!

அந்தக் காதல்-இதயம் Paper lantern-ஐ, படுக்கையின் மேல் கட்டிட்டு, விளக்கெல்லாம் அணைச்சிட்டுப் படுத்தா...
நம் மீது, சிறு சிறு காதல் இதயங்கள் மிதக்கும்! Very Romantic:) அப்படியே தூங்கிருவேன்:)


said...

//கோபாலுக்கு ஒரு செட் கல்தோசை & எனக்கொரு செட் இளம் தோசை//

அவருக்கு = கல்லு
உங்களுக்கு = இளம்-ஆ?
கணவர்களே, நீங்கள் அப்பாவித் தேவதைகள்!:))

ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ, முருகா!

மஞ்சள் மாமலை போல் லட்டு
மகரந்தச் சுவையில் கட்லி
வளை வளை வண்ண ஜாங்கிரி
வடித்த நெல் வேலி அல்வா

இச்சுவை தவிர யான் போய்
பர்கர் கிங் பாஸ்ட் புட் உண்ணும்
அச்சுவை பெறினும் வேண்டேன் - மலேசியப்
பத்துமா மலை உளானே!:))

said...

//'பத்துமலை போயாச்சா?'
அங்கே பெருமாள் இருக்கார்//

//நம்ம அங்கலாய்ப்பு தெரிஞ்சு, பெருமாள் எப்படியெல்லாம் சேதி அனுப்பறான் பாருங்க!//

:))))
Hello Daddy,
Batu Malai is for my Love, Murugan! Your Marugan!
You better go to your சொத்து மலை - திருப்பதி:)

//எங்கே எங்கேன்னேன். போனவுடன் தெரியும் என்ற அருள்வாக்கு//

கீழே அனுமன் சிலைக்கு அருகே இருக்கும் பெருமாள் கோயில்!

பக்கத்துலயே சரவணப் பொய்கை; அதன் தோரண வளைவில், ஒரு குழந்தை முருகன் சிலை ரொம்ப அழகா இருக்கும்:)

மலை மேலேயும் உண்டு பெருமாள் உண்டு! உருவமா இல்லாம, அருவமா! சக்கர வழிபாடு!
பத்து மலையும், ஆதியில் வேல் வழிபாடு மட்டுமே!

said...

//‘நாடு முழுதும் ஒரே மொழி – சரியாச் சொன்னீங்க!// என்று சொல்லலாம்னு பார்த்தால் ரவி வேறு மாதிரி எழுதியிருக்கிறாரே! நிறைய இனிப்புகள் - அட திருநெல்வேலி அல்வா கூடக் கிடைக்குதே! எல்லோருக்கும் கொடுத்துவிட வேண்டியதுதான்!

நம் நாட்டில் சீனர்களுக்கு இருக்கும் 'killer instinct' (கேரளா தவிர்த்து) யாருக்கும் இல்லை என்று தோன்றுகிறது.

said...

அன்பின் டீச்சர்,

தினம் தினம் உங்க கூடவே மலேசியாவைச் சுற்றிப் பார்ப்பது ரொம்ப மகிழ்ச்சியைத் தருது.

விலாவாரியா எல்லா இடங்களையும் சுற்றிக் காட்டுறீங்க..ரொம்ப சந்தோஷமா இருக்கு..

இனிமே வெளிநாடுகளுக்குப் போறவங்க யாரும் பயப்படத் தேவையில்லை..முதல்ல துளசி டீச்சரோட பதிவுகளைப் படிச்சுட்டு அந்தந்த நாடுகளுக்கு தைரியமாகப் போய்விட்டு வரலாம்.

தொடர்ந்து எழுதுங்க டீச்சர்..அதோட நன்றிகளையும் தெரிவிச்சுக்குறேன்..

கோபால் அண்ணாவுக்கு நன்றியைச் சொல்லிடுங்க..எல்லா இடங்களுக்கும் கூட்டிட்டுப் போறாருல்ல..அதுக்குத்தான் :-)

said...

இத்தனை ஸ்வீட்டா!! அதுவும் ஒரே பதிவில். சீனருக்கு வீரத்துக்கு மேல வேற ஒண்ணு இருக்கு. சுரங்கம் கண்டு பிடிக்கிற மாதிரி நாட்டையும் பிடிப்பாங்க. அத்தனை பேருக்கும் சாப்பாடு வேணுமே.
ஜோதிஜி சொல்வது போல இவ்வளவு விவரங்கள் கொண்ட பதிவுகளியோ புத்தகங்களையோ படித்ததில்லை.
அடுத்த நாள் கொண்டாட்டம் பெட்ரோன டவரிலா:)
செய்யூ............

said...

//naadu muzhuthum ore mozhi//

is it? pls check up.






said...

பூக்கடை, பாக்கடை எல்லாம் சுற்றி வயிறு நிறைய பலாப்பழம், சுவீட்ஸ், தோசை எல்லாம் சாப்பிட்டுவிட்டோம்.:)

அடுத்து வருகின்றோம்........

said...

பலா ஈர்க்குது .. தமிழில் பெயர்பலகை ::)))))) எல்லா படங்களும் அழகு . அந்த பாடும் பெண்ணின் pant கிழிந்துருப்பது பேஷன்? or ....

said...

நமக்கும் டாக்குட்டரம்மா சொன்னாங்க ஸ்வீட் சாப்பிடக்கூடாதுன்னு.

மனம் வெறுத்துப்போய்,தென் வாட்ஸ் த பாய்ண்ட் ஆஃப் லிவிங் ன்னு கேட்டேன்.

அதுவும் சரி. ஆனால் எப்பவும் பாய்ண்ட் பத்துக்கு (180) மேலே போகாமல் பார்த்துக்குங்கன்னாங்க.

மாடரேஷன் செஞ்சுக்கணும். அம்புட்டுதான். ஒரேடியா வேணாமுன்னு ஒதுக்கினால்.... திருட்டுத்தனமா சாப்பிடத்தோணும்:-)

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரசித்தமைக்கும் சுவைத்தமைக்கும் நன்றீஸ்.

said...

வாங்க ஸ்கூல் பையன்.

டிஜிட்டல் கெமெராவின் 'கொடை' அது:-)

said...

வாங்க ஜோதிஜி.

மூன்று மணி நேரம் போனது தெரிஞ்சுருக்காதே! என்ன ஒரு அழகான கோவில்,இல்லே!

மனசின் ஓட்டம் அப்போ எப்படிப் போனதுன்னு கவனிச்சீங்களா?

said...

வாங்க கே ஆர் எஸ்.

வெவ்வேற மொழிகள் இருக்குன்னாலும் ஒசத்தி, தாழ்த்தின்னு சண்டை இருக்கா என்ன?

இங்கே சீனர்கள் கூட்டத்துக்குப் போனா..... என் காதில் விழும் ஓசைகள் ஒரே மாதிரியாத்தான் தோணுது. பிரிச்சுப் பார்க்கத் தெரியலையே!

புரியலையேப்பா:(

said...

கே ஆர் எஸ்,

சொத்துமலையில் தெலங்கானா விவகாரத்தால் கூட்டமே இல்லையாமே!!!!

ஊர் ரெண்டு பட்டாத்தான் சாமிக்கும் நிம்மதியோ!

அருவமா அங்கே மட்டுமா? நீக்கமற எங்கும் இல்லையோ!!!!

said...

வாங்க ரஞ்ஜனி.

வெள்ளைக்காரனுக்கு எல்லா இந்தியர்களும் ஒரே ஜாடை என்பது போல் காதுலே விழும் சீன மொழிகள் எல்லாம் எனக்கு ஒன்னுதான்:-)

ரவி வரலைன்னா பதிவு பூர்த்தியாகாது:-)

said...

வாங்க ரிஷான்.

உங்க தனிமடல் பார்த்ததும் எழுதுவதிலுள்ள மகிழ்ச்சியும் நோக்கமும் அலாதியான திருப்தி கொடுத்தது என்பதே சத்தியமான உண்மை.

உலகம் சுற்றிகள் ஏராளமா இருக்காங்க. அந்த மலையில் நான் ஒரு சிறுதுளி மணல்.

கூடவே வர்றதுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

முந்தி ஒரு காலத்தில் 'அக்கரைச்சீமையில் ஆறு மாதங்கள்' என்று ஒரு தொடர் பத்திரிகையில் வந்தது.

அதில் ஆசிரியர் காந்திமதி, ரஷ்யாவிலொரு பள்ளிக்கூடத்துலே டீச்சரா இருப்பாங்க. ராமாயணக்கதைகளைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கிட்டு இருப்பாங்க. ஒரு வகுப்பிலேயே முடிஞ்சுருமா என்ன?

தொடரும் போட்டுட்டு வீட்டு வந்துருவாங்க. நடுஇரவில் மாணவர் ஒருவர் ஃபோன் போட்டு, அப்புறம் என்ன ஆச்சுன்னு ஒரு வரி யாவது சொல்லுங்க டீச்சர். என்ன ஆச்சோன்ற ஆர்வத்துலே தூக்கம் வரலைன்னுவார்!

அந்த நினைவு வந்துச்சு எனக்கு:-)

said...

வாங்க வல்லி.

படத்தில் ஸ்வீட் தின்னால் தப்பே இல்லையாக்கும்:-)

அடுத்த நாள் மலைமேல்:-)

said...

வாங்க சிஜி.

பேராசிரியர் என் காதைத் திருகலாம். தப்பே இல்லை:-)

said...

வாங்க மாதேவி.

வாங்க மலை ஏறலாம்.

said...

வாங்க சசி கலா.

புது பேண்ட்ஸ் வாங்கிக் கிழிச்சு விட்டுக்கணும். இல்லேன்னா பேஷன் உலகில் ஜாதி ப்ரஷ்டம் ஆகிரும்:-)