Monday, February 24, 2014

மனிதன் பாதி மிருகம் பாதி கலந்து வந்த கலவை

பனிரெண்டு மணிக்குக் கோவிலை மூடிருவாங்களேன்னு வண்டியிலிருந்து இறங்கி அரக்கபரக்க ஓடினோம். விளக்கொளிப்பெருமாள் கோவிலில் இருந்து  முன்னூறு மீட்டர் தூரத்தில்தான் இருக்கார் அழகிய சிங்கர். ஆளரின்னு அன்றே ஆழ்வார் சொல்லி வச்சுருக்கார்!!!!

நம்ம ஸ்ரீயின் பதிவில் இருந்து சுட்ட படம் மேலே! மனம் நிறைந்த நன்றி ஸ்ரீ

கோவில் பூட்டி இருக்கு.  ஒரு ரெண்டு மூணு பேர் நம்மைப்போல பேந்தப்பேந்த முழிக்க,  பட்டர் வந்துக்கிட்டு இருக்கார்னு  இன்னொருத்தர் சேதி சொன்னார்.  அவர்தான் கூப்பிடப் போனாராம். கொடிமரம் மட்டும் நெடுநெடுன்னு  நிக்க பெரிய திருவடியின் சந்நிதி. குட்டிக்கதவுகள்.  இருட்டுக்குள் எட்டிப்பார்த்து கன்னத்தில் போட்டுக்கிட்டு 'ஆஜர் ஹோ' சொன்னேன்.

காலை  ஏழு முதல்  பதினொன்னு, மாலை அஞ்சு முதல் ஏழரை மட்டும்தான் கோவில் நேரங்கள்.  முதலிலேயே தெரிஞ்சுருந்தால்   இப்படிச்  சரியா  பகல் பனிரெண்டு மணிக்கு வந்து  நிக்கமாட்டோம்.

அது என்ன எல்லாக் கோவில்களையும்  உச்சிகாலபூஜை முடிஞ்சு சாயங்காலம் அஞ்சு வரை மூடி வச்சுடறாங்க?  முந்தி ஒரு காலம் போலவா..... இப்பதான்  சுற்றுப்பயணம், கோவில்விஸிட் எல்லாம் கூடிப்போயிருக்கே......  அதுக்குத் தகுந்தாப்போல்  கோவிலைத் திறந்து வைக்கும் நேரங்களை மாத்தி அமைக்கக்கூடாதா?  பூஜை செய்பவர்கள் ஷிஃப்ட் முறையில் வந்தால் கூடப்போதுமே.

மனசு இப்படி  ஏடாகூடமாக நினைச்சாலும்,  நடைமுறையில் சரிவருமான்னு தெரியலை. ரொம்பப்பெரிய கோவில் என்றால் பகல் முழுசும் திறந்துதான் இருக்கு . இந்த மாதிரி  கொஞ்சம் சின்னக் கோவில்களை (ஆனால் புகழ்பெற்றவை கேட்டோ!) நாள் முழுசும் திறந்து வச்சால் அர்ச்சகர்/பட்டர்  உண்மையில் தேவுடுதான் காக்கணும்.  அங்கே அம்மும் கூட்டம்  மாதிரி  இங்கும்  மக்கள்ஸ் வந்தால்தானே?

இந்தக் கோவிலின் கதையும்   போன ரெண்டு பதிவுகளில் பார்த்த அந்த ப்ரம்மா X சரஸ்வதி சம்பவத்தின் தொடர்ச்சிதான்.   யாகத்தைக் கெடுக்க அரக்கர்களை மீண்டும் அனுப்பறாங்க  அம்மையார். என்னடா இது  நிம்மதியா ஒரு யாகம் செய்ய முடியலையேன்னு ப்ரம்மா கலக்கத்தோடு  மஹாவிஷ்ணுவிடம்  உதவி செய்து காத்தருளும்படி வேண்ட,  அவரும் அரக்கர்களுக்கு  சிம்மசொப்னமா இருக்கட்டுமுன்னு நரசிம்மர் உருவிலே வந்து அரக்கர்களையெல்லாம் ஓட ஓட  விரட்டிட்டு, இனி  நீ யாகத்தைத் தொடங்குன்னு சொல்லி  இங்கேயே  யோக நரசிம்மராக,  மேற்கு நோக்கி  அமர்ந்தாராம்!

என் நெருங்கிய தோழியின் இஷ்ட தெய்வம்  நரசிம்மர்தான்.  சிங்கம் என்றாலே ஒரு பயம் வந்துருமேன்னு  நான் சொல்ல,'அவரைப் போன்ற கருணை உள்ளம் யாருக்குமே இல்லை.  சரணம் என்று சொன்னாலே ஓடோடிவருவார் காப்பாற்ற!   குழந்தை ப்ரகலாதன் ,'ஆமாம். இங்கே இருக்கார்னு சொன்ன உடனே    எப்படி  தூணைப்பிளந்து வந்து  காப்பாற்றினார்'னு சொன்னாங்க.....  

"ஆமாம்..... குழந்தை எந்தத் தூணைக் காண்பிப்பான்னு  தெரியாததால்  அங்கே சபையிலிருந்த அத்தனை தூண்களிலும் ரெடியாக நின்னுக்கிட்டு இருந்தாராம். ஒரு உபன்யாசத்தில்கேட்டுருக்கேன்.  ஹைய்யோ... என்ன ஒரு ஸ்நேகமுள்ள சிம்ஹம்! "

சந்நிதி முன் நிற்கும்போது  தோழியை நினைக்காமல் இருக்க முடியலை!

மூலவர் பெயர்  முகுந்தநாயகன்   மற்றும் அழகிய சிங்கர்.
தாயார் வேளுக்கை வல்லி என்ற  அம்ருதவல்லி  என்கிற பெயரில்!
இந்தக் கோவில்  இருக்கும் இடத்துக்கு  திருவேளுக்கை என்ற பெயர் .

அந்தக் காலத்தில்  எல்லாமே ரொம்பக்கிட்டக்க கிட்டக்க, சின்னசின்ன தொகுப்புகளா அமைஞ்சிருக்கும்  இடங்கள்  ஒவ்வொன்னுக்கும் ஒரு ஊர்ப் பெயர் இருந்துருக்கு போல!  திருவெஃகா, திருத்தண்கா, தூப்புல், திருவேளுக்கை இப்படி.  இப்ப அதெல்லாம் காஞ்சி நகருக்குள்ளே இருக்கும் பேட்டைகளா இருக்கு.

இதோ.... கொத்துச்சாவியுடன் பட்டர்  வேகநடையில் வர நாங்கள் (மொத்தம் ஆறுபேர்)  அவரைத் தொடர்ந்து ஓடினோம். ஆளரியின்  தரிசனம் ஆச்சு. இங்கேயும் உற்சவர் சிரிச்ச முகத்தோடு ' பெரியவர்  எண்ணெய் தேய்ச்சுண்டு  உள்ளே இருக்கார்' னு சொன்னார்.

கோவிலுக்கு  எதோ காசோலை கொடுத்தார் ஒருவர்.  பட்டர் அதை வாங்கிக்கிட்டே....   கோவிலுக்கோ இல்லை எதாவது தர்ம ஸ்தாபனங்களுக்கோ வெறும் காசைத் தூக்கித் தர்றதைவிட  அவுங்களுக்கு அப்போதைய தேவை என்னன்னு பார்த்து பொருளா வாங்கித் தர்றதுதான் உத்தமம் என்றார். முக்கியமா ஆதரவற்றோர் பள்ளிகளுக்கு  நிறையச் செய்யலாம்.  குழந்தைகளுக்குத் தேவையான  சிலேட்டு, பல்ப்பம், பேனா, நோட்புக், புத்தகமுன்னு  எவ்ளோ வேண்டி இருக்கு.  பெருமாள் கூட  கோவிலுக்கு கொடுப்பதைவிடக்   கல்வி நிறுவனங்களுக்குக் கொடுத்தால்  சந்தோஷப்படுவார்  என்றது எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு.  உங்க பெயரென்னன்னு  கேட்டேன்.  எதுக்கும்மா?  நல்லதை யார் வேணுமுன்னாலும் சொல்லலாமேன்னார்!

பரபரன்னு வந்ததைப்போல அதே வேகத்துடன் கோவில்கதவை இழுத்துப் பூட்டிட்டு கிளம்பினவரிடம் ஒன்னும் சொல்லத் தோணலை.   அப்புறம் தான்  ஞாபகம் வருது கோவிலைச் சுத்திப் பார்க்கலையேன்னு:(  படங்களையும்  எடுக்கலை. நேரமிருந்தால்  இன்னொரு முறை வரணும்.  ஆனால்  வாய்க்கலையே:(

அப்புறம் நியூஸி வந்தபின் நம் ஸ்ரீ எழுதும் 'இணைய நண்பர்களுக்காக  பதிவில் போய் படங்களை ரசித்தேன்.  நீங்களும் கண்டு மகிழலாம்.



காசோலை கொடுத்த நபரிடம், என்ன இன்றைக்கு  தரிசனமுன்னு ( ரொம்பத் தெரிஞ்சவரா இருக்கணும்) பட்டர்  குசலம் விசாரித்தபோது , நமக்கொரு  சேதி கிடைச்சது. ஒரு எட்டு அங்கே போய்ப் பார்த்துட்டு சரவணபவன் போகணும்.

தொடரும்........:-)




20 comments:

said...

a revelation
through
what you said this day.

thanks a lot.

subbu rathinam.

said...

பட்டர் சொன்னது போல் அனைவரும் செய்தால் சரி...!

said...

[[அது என்ன எல்லாக் கோவில்களையும் உச்சிகாலபூஜை முடிஞ்சு சாயங்காலம் அஞ்சு வரை மூடி வச்சுடறாங்க?]]

துளசி கோபால்:
தப்பாக எடுக்காவிட்டால் ஒரு உண்மையை சொல்கிறேன். கோவில் நடை சாத்துவது திறப்பது எல்லாம் பட்டர், ஐயர் விருப்பப்படி மட்டும்--ஆகம விதிகள் எல்லாம் கிடையாது; எல்லாம் பொய்!

1980 மே; என் நண்பன் கல்யானம் ஸ்ரீ ரங்கத்தில். அவர்களுடன் பெரிய கோவிலுக்கு சென்றோம்---நடை சாத்தி இருந்தது! 12 to 3.00; நடை சாத்துவார்களாம். ஆகம விதிகள் காரணம் இல்லை; உணமையான காரணம்--பட்டர், ஐயர்கள் தூங்கும் நேரமாம்!

பிறகு, மாமி கொடுக்கும் சுட சுட டிகிரி காப்பியை குடித்து விட்டு மறுபடியும் வந்து தொழிலை ஆரம்பிப்பார்கள்.

அதனால் தான், பகல் பன்னிரண்டு மணிக்கு நடை சாத்துகிறார்கள்!

said...

சிறப்பான பகிர்வு.....

கோவில் பட்டர் சொன்னது மிகச்சரி.....

விடுபட்டுப் போன மற்ற பதிவுகளையும் படிக்க வேண்டும்.

said...

நன்றி துளசி. இங்குதான் தேசிகர் ..\நிருசிம்ஹனைதுதி செய்து காமாசிகாஷ்டகம் எனு ஸ்தோத்ரங்களை எழுதினார்.\\ நீதான் ரக்ஷிக்க வேண்டும்]] வேற யாராலும் என்னக் காப்பாத்த முடியாது. நீயும் ரட்சிக்கவில்லை என்றால் எனக்குக் கதியேதும் கிடையாது. வேகவதி ஆற்றின் கரையில் இருக்கும் நரசிம்மா இதுதீர்க்கமான முடிவு\\ ஆனால் ஒன்று பக்தி செலுத்துபவர்களுக்குத் தான் பொருந்தும். நன்றி

said...

கோவில் பட்டரே இவ்விதம் சொன்னது ஆச்சரியம் தான் .

எனக்கு இன்னும் ஒன்று கூட தோன்றும் , கோவிலில் பாலபிஷேகம் செய்ய கடவுளுக்கு ரெண்டு அல்லது மூன்று சொம்பு or 1or 2 லிட்டர் போதும் என்ற பட்ச்சத்தில் மீதமுள்ள பால் அனைத்தும் வீண் அல்லவா . இதனை பணமாகவோ அல்லது பாலாகவோ தேவை படுபவர்க்கு போய் சேருமாறு செய்யக்கூடாதா. துளசி நீங்கள் தான் என் இந்த எண்ணம் சரியா என்று சொல்ல வேண்டும் . ரொம்ப நாளாக என் மனதை அரிக்கும் கேள்வி .

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

அறிவுக் கண்ணைத் திறக்கச் சொல்லிட்டான் 'அவன்'!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

பெருமாளுக்கும் அதுதான் பிடிக்குமாம்!!!

said...

வாங்க நம்பள்கி.

உண்டமயக்கம் தீர அதிகபட்சம் ஒரு மணி நேரம் எடுத்துக்கொண்டால் ஆகாதோ??

அஞ்சு மணி நேரம் டூ மச்:(

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பட்டர் சொன்னது ரொம்பவே சரி. ஆனால் தேடிப்போய் விசாரிச்சு வாங்க நேரம் கூடுதல் தேவையா இருக்கே:(

அதான் நோகாமல் புண்ணியம் சேர்க்க முயற்சி செய்யறோம்:(

இணையத்தில் ஒரு வசதி. நின்னு நிதானமா எப்ப வேணுமுன்னாலும் பதிவுகளைப் படிக்கலாம்:-))))

said...

வாங்க வல்லி.

கூடுதல்தகவல்களுக்கு நன்றிப்பா.

பக்திகள் பலவிதமா இருக்கேப்பா!

said...

வாங்க சசி கலா.

புரட்சிகரமான கருத்துக்களை நம்ம ராமானுஜர் சொல்லலையா!!!! அவர் வழி வந்த இவர் சொல்வதே சரி.

பால்......... எனக்கும் இப்படி ஒரு கருத்து உண்டு.

ஒரு ஏழு வருசத்துக்கு முன் எழுதுனது இங்கே:-)

http://thulasidhalam.blogspot.com/2007/02/3.html

said...

நீங்கள் இந்த கோயிலுக்குப் போய் படம் எடுக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

said...

வணக்கம்

பட்டர் கருத்துப்படி செய்தால் சரிதான்... படங்கள் மிக அழகு. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

said...

எப்படி Madam, எல்லாத்தையும் ஞாபகம் வைச்சு எழுதுறீங்க.. எனக்கெல்லாம் நேத்து என்ன பண்ணினேனங்கறதே ஞாபகம் வர மாட்டீங்குது.

said...

அழகிய சிங்கர் தர்சனம் கிடைத்தது.

said...

வாங்க தமிழ் இளங்கோ.

சிலசமயம் நாம் நாமாக இருப்பதில்லை என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு:-)

said...

வாங்க ரூபன்.

வணக்கம்.

உங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி அளிக்கிறது.

said...

வாங்க அகிலா.

இதெல்லாம்தான் ஞாபகம் இருக்கு. முந்தாநாள் என்ன குழம்பு வச்சேன்னு கேட்டால்...... பேய்முழிதான்:-)))

said...

வாங்க மாதேவி.

சிங்கரின் அருளும் கிடைத்திருக்குமே!