Friday, June 20, 2014

இகத்தில் ஒரு 'பரம்'!


தி நகரில் கண்ணுக்குத் தெரிஞ்சவரை எங்கேயும்  டயர் போன்றவைகளை எரிக்கலை. இருந்திருந்தால்  மூக்குக்குத் தெரியாமயா போயிருக்கும்?  காலை உணவுக்குப்போனபோது கீரைவடை காத்திருக்கு. பேஷ் பேஷ்.  இன்றைக்கு ரிலாக்ஸா இருக்கணுமாம். கோபால் சொல்லிப்பிட்டார். போதும் ஓடுனது!  அதென்ன  பெரிய பிரச்சனையா? .எட்டரைக்குப்  பதிலா ஒன்பது மணிக்கு சீனிவாசனை  வரச் சொன்னால் ஆச்சு:-)

போயிட்டுவரேன் சொல்லும் நாள். முதலில்  பதுமன்.  முந்தாநாள் ஏகாதசிக்கு வரமுடியலைன்னு சொல்லி மன்னிப்புக் கேட்டுக்கிட்டு வலம் வர்றேன். நோ ஒர்ரீஸ். உனக்காக நான் இங்கே இன்னும் காத்திருக்கேன் என்று,  உற்சவமூர்த்திகள் 'மாளிகை' வாசலுக்கு வெளியில் கருட வாகனத்தில் ஆடாமல் அசையாமல்  இருக்கான்! ஹா.... பெருமாளே!!


தொட்டடுத்து சொர்க்க வாசல்!  ஏண்டாப்பா.... அதைச் சித்தத் திறந்து வச்சுருக்கப்டாதோ?  எத்தனை வருசக் கனவு!  அது வழியா  நீ வர்றதைப் பார்த்து ஸேவிக்கணும். அது வழியா  நானும் உள்ளே போய் வரணுமுன்னு !   போட்டும்போ. அந்தவரைக்கும்  காட்சி கொடுத்தியே!


கண்ணாடித் தடுப்பா இருக்கும் ஃப்ரேம் கழட்டி வச்சுருக்காங்க. தகதகன்னு ஜொலிப்பு. தங்கமாச்சே!  கோவில் அலுவகத்தில் அனுமதி கிடைச்சது, க்ளிக்கிக்கோன்னு:-)

அடுத்துள்ள ஹால் தர்ம பரிபாலன சபை அனந்த மண்டபம்....ஹோ..........ன்னு  கிடக்கு.  ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி பரிபாடி எல்லாம் கழிஞ்ஞு, பெருக்கித் துடைச்சு வ்ருத்தியாக்கி  வச்சுருக்காங்க. சிவன் சந்நிதிக்குப்போகும் வழியில்தான்  இடதுபக்கம் சொர்கவாசல் கதவின் வெளிப்புறம். இந்தக் கதவும் அட்டகாசமாத்தான் இருக்கு.  ஆனால்   உள்ப்பக்கம் இருப்பதைப்போல் தங்கத் தகடு போர்த்தலை. அதுவுஞ்சரி. செஞ்சுட்டு யாராலே  காவல்காத்துக்கிட்டே இருக்கமுடியுது?   சுவர் அலங்காரத் திரைச்சீலைகளை கழற்றி எடுத்து வைக்கும் வேலை நடந்துக்கிட்டு இருக்கு.  அழகாத்தான், அழகுபடுத்தி இருந்தாங்க.



எல்லா சந்நிதிகளுக்கும் போய் வணக்கம் சொல்லி விடை வாங்கியாச்சு. பெருமாளுக்கு மட்டும்  ஸ்பெஷலா 'போயிட்டு வரேன். உடம்பைப் பார்த்துக்கோ. விட்டேத்தியா கிடக்காமல் அப்பப்ப  மக்களையும் கவனிச்சு கருணைகாட்டு'ன்னு ஒரு முறைக்கு நாலுமுறையாச் சொல்லிக்கிட்டு  கிளம்பினேன்.

நெருங்கிய தோழி  புது வீட்டுக்குக் குடி வந்தாச்சு. போனவருசம் வீடு  கட்டி முடிக்கும் தருணம் போய்ப் பார்த்துட்டு வந்தாலும்   எப்படி செட்டில் ஆகி இருக்காங்கன்னு பார்க்க வேணாமா? அதுவும் புது வீட்டில் , இட்லி மொளகாய்ப்பொடி இருக்கும் இடம் எங்கேன்னும் பார்த்து வச்சுக்கணும், இல்லையா:-)))

கலைநயத்தோடுள்ள  உள் அலங்காரம்.  பல்லாங்குழி சுண்டி இழுத்தது :-)
சமையல் ரெடி. ஆனால்....  லேட் ப்ரேக்ஃபாஸ்ட் என்பதால் பசி இல்லை:( அதுக்காக சாஸ்த்திரப்படி வச்சுக் கொடுப்பவைகளை விட முடியுமா????  (இந்த ப்ளவுஸ் கலருக்கு மேட்ச்சா புடவை வாங்கிக்கணும்!)

திருவான்மியூரில்  இருக்கும் லைட்டிங் கடைகளுக்கு  எல்லோருமா ஒரு சுத்து போய்வந்தோம்.  குத்துவிளக்குக்கு  லைட் போட்டுக்கலாமுன்னா எங்கெ தேடியும் கிடைக்கலை.  போகட்டும். நெக்ஸ்ட் டைம் எதுக்கு இருக்கு?   அவுங்களை இறக்கி விட்டுட்டு  அண்ணாசாலை வந்து இன்னும் சில கடைகளில் தேடிட்டு  வெங்கடநாராயணா சாலை சரவணபவனில் பகல் சாப்பாடு.  இந்தப் பயணத்தில் இதுக்குக்  கடைசி விஸிட்.  தினமும் ஒரே மெனு:(  எப்பவாவது  சாப்பிட்டால் தெரியாது.  அல்மோஸ்ட் தினம் தினமுன்னா போரடிக்கத்தான் செய்யுது:(  அறைக்குத் திரும்பி கொஞ்சம் ஓய்வு. வலை மேய்ச்சலுக்கான நேரம் இது.

இசைவிழா முடிஞ்சு நாட்டிய விழா நடக்குதே!  மார்கழியில் உருகி உருகிப் பாடி,தையில் தை தைன்னு ஆடி....  சென்னையின் கோலாகலங்கள் டிசம்பர் அண்ட்  ஜனவரியில்   என்னை ரொம்பவே  ஏங்க வைக்கும் :(

பரத நாட்டியம் ஃபெஸ்டிவல் ஆரம்பிச்சு இது வெள்ளிவிழா ஆண்டு வேற.  ஆர்வம் இருக்கும்  மக்களுக்கு  எல்லாமே இலவசம். நேரம் கண்டுபிடிச்சுக்க வேண்டியது நம்ம கடமை:-) வாணிமஹால் போய்ச் சேர்ந்தோம்.  மாடியில் சின்ன ஹாலில் அக்‌ஷயாவின் நடனம். சரியா  தில்லானா  ஆரம்பிக்குது. அரைமணி  அனுபவம்தான் நமக்கு.   அடுத்து இன்னொரு நடன நிகழ்ச்சி இங்கேயே!   ரக்‌ஷா ஆடப்போறாங்க.  இன்னும் அரைமணி  கழிச்சு  ஆரம்பம். அதுவரை? ஒரு காஃபி!

கீழே ஞானாம்பிகா வந்தால்...  சின்னச் சின்னச் சிறுமிகள்  அலங்காரமா நடன  உடைகளில்  டிஃபன் சாப்புட்டுக்கிட்டு இருக்காங்க.  ஓக்கே.....  என்னன்னு பார்த்துடலாம்!

மஹாபெரியவா ஹாலுக்குள் நுழைஞ்சோம்.   கண்ணுக்கெட்டிய பக்கமெல்லாம்  பளிச்  பளிச்சுன்னு ஒரு திளக்கம்!  எல்லாம் வைரக்கம்மல்களின் ஒளிதான்! மூத்த குடிமக்கள் கூட்டத்தில்  கலந்தோம்.  மேடையில் உபன்னியாசம் செய்பவரை எங்கேயோ பார்த்த நினைவு. ஒருவேளை டிவியில் (சண்டிகர் வாழ்க்கையில்) இருக்கலாம்.

இன்னிக்கு ஆண்டாள் திருக்கல்யாணம். கடைசி நாள் என்று அங்கே ஆரம்பிச்ச  சம்பாவனை வரிசைகள் சொல்லுச்சு.  மாலை மரியாதைகளோடு அமர்க்களமான சீர்வரிசை!  சும்மாச் சொல்லக்கூடாது......  அருமையாத்தான்  கதை சொன்னார்.  தினமும் இருந்துச்சு போல....  இதைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.  லேசா எங்கியாவது விளம்பரப்படுத்தி இருந்தாங்களோ என்னவோ?  நமக்குத் தெரியாமப்போச்சு, பாருங்களேன்!

நிகழ்ச்சி முடிஞ்சதும் வெளியேறி முன் பக்கம்வந்தால்  ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா (சின்னதா ஒரு குட்டியான  சைஸ் டப்பா) விநியோகம். அதானே.... கல்யாணத்துக்கு வந்துட்டு இனிப்பு எடுக்காமல் போகலாமோ?

ஆறேமுக்காலுக்கு இந்த ' பரம்'  நிகழ்ச்சி. ஸ்ரீதேவி ந்ரித்யாலயா வழங்கும் .....?வாட்? A thematic presentation.  Choreography  ஸ்ரீமதி ஷீலா உன்னிக்ரிஷ்ணன்.

  வெறும் நாட்டியம் சொல்லிக்கொடுத்து அரங்கேற்றம் செஞ்சு வைப்பதுன்னு எங்க காலம்போல் இல்லாம பரதநாட்டிய பள்ளிகள் எல்லாம் இப்போ, புதுவிதமான முறையில் நிகழ்ச்சிகளைத் தயாரிச்சு வழங்க ஆரம்பிச்சுருக்காங்க. இந்த ஸ்டைல்  ஆரம்பிச்சு ஒரு முப்பது வருசம் இருக்கலாம்.  நாட்டிய நாடகம்! (நாடகத்தில் நடிப்பவர்கள் நாட்டியம் ஆட முடியாது.  ஆனால் நாட்டியம் ஆடுபவர்கள் நாடகம் போடலாம்!!!) சூப்பர் ஐடியா இல்லே!!!

அரங்கு காலியா இருக்கேன்னு  பின்வரிசையில் இருந்து முன் வரிசையில் மூணாவதுக்கு  இடம்பெயர்ந்தோம்.  பக்கத்தில் இருந்த ஒரு பெண்மணியிடம்,  இதுக்கு டிக்கெட்  உண்டான்னு கேட்டால் ஆமான்னு சொன்னாங்க. (இவுங்கதான்  நடன ஆசிரியை ஷீலாவின்  அம்மான்னு அப்புறம் தெரியவந்துச்சு)  நான் இடம்பிடிச்சு உக்கார, கோபால் டிக்கெட் வாங்கிவரப் போனார். 250, 500 ,1000 என்று மூணுவகை  இருக்காம்.  ஆனால் 250 வாங்கினாலும் எங்கெ வேணா உக்காரலாமாம் .  ஓக்கே இருக்குமிடம் சரின்னு  இருந்தோம்.   அவ்ளோ பெரிய ஹாலில்  கால்வாசி கூட நிரம்பலை:(   உபன்னியாசத்துக்கு  இதைவிட  மும்மடங்கு மக்கள்ஸ்  வந்துருந்தாங்களே!

ஆறேமுக்காலுன்னு சொல்லி ஏழு மணிக்கு ஆரம்பிச்சது.  மதுரை ஸ்ரீ மீனாட்சியின் கதை!    தேவியின் அவதாரம் தொடங்கி,  மீனாட்சி கல்யாணம், அர்த்தநாரீஸ்வரர் தத்துவம்,  சம்பந்தர், சுந்தரர், சிறு தொண்டர் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள்,  சிவபெருமான், வானில் இருந்து இறங்கிவரும் கங்கையைத் தன் தலையால் தாங்கிய புராண நிகழ்ச்சி  இப்படி  எல்லாமே நாட்டியமா ஆடித் தீர்த்துட்டாங்க பிள்ளைகள்.


அதிலும்  ஒரு பாட்டிலேயே  குழந்தை, சிறுமி, இளம்பெண்ணாக  மூணு மீனாட்சிகள்  வளர்ந்து நின்னது ரொம்ப அழகா இருந்துச்சு.  எல்லோரும் பரதநாட்டிய உடைகளில்தான். ஆனாலும் அந்தந்த பாத்திரத்தைக் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்திட்டாங்க.  கடைசி சிவசக்தி நடனம் சூப்பர்!





ரெண்டு மணி நேரத்துக்கும் குறைவான நிகழ்ச்சிதான். கொஞ்சம் கூட  தொய்வே இல்லாமல்  அருமையா நடனக்கோர்வைகளை அமைச்ச திருமதி ஷீலா உன்னிகிரிஷ்ணனுக்கு மனம் நிறைந்த பாராட்டுகளைச் சொல்லத்தான் வேணும். அம்மாவிடம்சொல்லிட்டு வந்தோம். பாடல்களுக்கு இசை அமைத்தவர்   Kuldeep M Pai .

நிகழ்ச்சியின் முடிவில் நடன ஆசிரியை நடனமணிகளை  ஒவ்வொருத்தராகப் பெயர் சொல்லி  அறிமுகப்படுத்தனது  அழகு!  ஒரு நாற்பது பேர் இருக்கலாம். ஆறு வயசு முதல்  பதினாறு வயசுவரை! எல்லோருமா எப்படி ஒருங்கிணைஞ்சு  அற்புதமா ஆடுனாங்கன்னு வியப்போ வியப்பு எனக்கு! நல்ல நிகழ்ச்சியைப் பார்த்தோம் என்ற மனத்திருப்தியுடன் அறைக்கு வந்தோம். மார்கழி  முடிவுக்கு வந்துருச்சு.


 நாளை இந்த நேரம் ஏர்ப்போர்ட்டில் இருக்கணும். கவுண்ட் டௌன் ஸ்டார்ட்ஸ்!

தொடரும்...........:-)



14 comments:

said...


கூடவே அமர்ந்து நாட்டிய நாடகத்தைப் பார்த்த உணர்வு. குழந்தைகளின் முகத்தில் என்னவொரு தேஜஸ்... அற்புதம்.

தோழி வீட்டுப் பல்லாங்குழி பிரமாதம். கலைநயத்துடனான உள் அலங்காரம் ரசனை!

said...

கதா காலாட்சேபம் உ.வே அநந்த பத்மநாபன் சாரியார். ஸ்ரீநிருசிம்ஹப் பிரியாவின் எடிடர். வடகலை. நம் வேளுக்குடி தென்கலை நாமம் .இவர் வடகலை நாமம். விஷயமெல்லாம் விஷ்ணுவைப் பற்றித்தான். இளையவராதலால் வேகம் இருக்கும்.மீனாட்சி கல்யாணம் சூப்பர்மா. குழந்தைகள் ஒவ்வொண்ணும் அருமை அபிநயம்.

said...

அருணா வீடும் பல்லாங்குழியும் அழகு.மிளகாய்ப்பொடி இடம் கண்டுபிடிச்சீங்களாப்பா.

said...

அருமையான நாட்டிய நாடகம் பார்த்த உணர்வு உங்களுக்கும் எங்களுக்குக்கும் உங்கள் படங்கள் மூலம்.

said...

டீச்சர்.. ஜாக்கெட் துணியின் நிறம் தெரியலை ஃபோட்டாவுல. அதுக்கான சேலை வாங்கினதும் ரெண்டையும் போட்டோ புடிச்சுப் போடுங்க.

அது சரி.. மிளகாப்பொடியைக் கண்டுபிடிச்சு அதுக்கு வேலை வெச்சீங்களான்னு சொல்லவே இல்லையே.

சரவணபவன் கூட பரவால்ல டீச்சர். நியூ உட்லண்ட்ஸ் மோசமாயிருச்சு.

மயிலாப்பூர்ல வள்ளலார் மெஸ்னு ஒன்னு இருக்காம். மூலிகை சாம்பார், மூலிகை ரசம் மாதிரியான சமையல்களைச் செஞ்சு தொண்டு மாதிரி நடத்திக்கிட்டு வர்ராராம் ஒருத்தர். காரணீசுவரர் கோயில் தெருவுல இருக்காம். போகனும்னு ஆசை. இதுவரைக்கும் போனதில்லை. அடுத்து நீங்க வர்ரப்போ முயற்சி செஞ்சு பாருங்க.

மீனாட்சி திருமணப் படங்கள் அருமை.

said...

சிறந்த தொகுப்பு
சுவையாக எழுதப்பட்டிருக்கிறது.

said...

குழந்தைகளின் நாட்டிய நாடகம் நேரடியாக பார்த்ததுபோல் இருந்தது.

said...

வாங்க கீத மஞ்சரி.

ரசனைக்கு நன்றிகள்ப்பா.

நம்ம வீட்டுலேயும் ஒரு மாடர்ன் பல்லாங்குழி இருக்கு எவர்சில்வரில்:(

said...

வாங்க வல்லி.

உபன்னியாசகர் பெயர் சொன்னதுக்கு நன்றிப்பா. நல்லாவே சொல்றார் இல்லை!

சின்னக்குழந்தைகள் அருமையா ஆடுறாங்கப்பா!!!

இதுக்கெல்லாம்தான் நான் சென்னையை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன்:(

said...

வல்லி,

மொளகாப்பொடி சம்புடத்தைக் கண்டு பிடிக்கலைப்பா இன்னும்!

நெவர்மைண்ட், நெக்ஸ்ட் டைம்:-)))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ரசனைக்கு நன்றிகள்.

said...

வாங்க ஜிரா.

காரணீஸ்வரர் கோயிலை இன்னும் போய்ப் பார்க்கலை. ஒவ்வொருமுறையும் நினைக்கறேன் ஆனால் நடக்கலையே! இந்த லிஸ்ட்டில் மயிலை முண்டகக்கண்ணியம்மனும் இருக்காங்க.

மூலிகை சாப்பாடு பரிசோதிக்கும் மனத்திடம் இன்னும் வரலையே:(

ஜாக்கெட்டுக்கு ஏத்த புடவை அங்கேயே அவுங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் நல்லி கடையில் தேட விட்டுப்போச்சு:-)))

பிள்ளைகள் அருமையா ஆடுனாங்க.

said...

வாங்க ஜீவலிங்கம்.

வருகைக்கும் கருத்துக்கும் உங்கள் ரசனைக்கும் நன்றீஸ்.

said...

வாங்க மாதேவி.

ரசிப்புக்கு நன்றிகள்ப்பா.