Friday, October 10, 2014

இறை மறுப்பாளி வீட்டின் இரு கடவுளர்கள்!

ஒருவர்  ஜூபிடர் (Jupiter )என்னும் ரோமானியக் கடவுள். மற்றவர்  ட்ஸூஸ் (Zeus) என்னும் க்ரேக்கக் கடவுள். ரெண்டு பேருடைய குணாம்சங்களும்  கிட்டத்தட்ட ஒன்னுதான். சுருக்கமாச் சொன்னால் நம்மூர் வருணன்.  ஆனால் கடவுளர்களுடைய கடவுள் என்றெல்லாம்  அந்தந்த நாட்டுக்கார் புகழ்த்திச் சொல்றாங்க.

இதுலே   முதல்முதலா  மகள் வீட்டுக்குள் வந்தவர் ஜூபிடர்தான். அவர் வந்தபோது நான் இந்தியாவில் இருக்கேன். அப்பவே அவருக்கு ஒரு வயசு.  உள்ளூர் எஸ் பி ஸி.ஏ வில் இருந்து  வாங்கி இருக்காள்.  வீட்டுக்குக் கொண்டு வந்தபிறகுதான் தகவலே  எனக்கு வருது. ஒரு பக்கம் மகிழ்ச்சின்னாலும் கூட , இது லைஃப்டைம் கமிட்மெண்ட் ஆச்சேன்னு சின்னதா உள்ளூற ஒரு பதற்றம்.


என்ன பெயர் வச்சேன்னு கேட்டப்ப, ' ஜூபிடர் ' என்றாள்.  ஏற்கெனவே ஷெல்ட்டரில் இந்தப்பெயரை வச்சுக் கூப்பிட்டுப்,  பழக்கம் ஆகி இருப்பதால் பெயரை மாத்தலைன்னும் சொன்னாள். ( இதே நானாக  இருந்தால்  பெயரை உடனே மாத்தி,  கேசவன் என்று வச்சுருப்பேன். செல்லமா கேஷவ்ன்னு கூப்பிடலாம்!) அப்பப்பப் படங்களும் அனுப்புவாள்.




 நான்  திரும்ப நியூஸி வந்து நேரில் பார்த்தப்ப  ரெண்டேகால் வயசு ஆகி இருந்துச்சு.  நல்ல வாளிப்பான  உடலோடு  கொஞ்சம் உயரமா இருக்காரேன்னு நினைச்சேன்.  செல்லமா 'ஜூபி'ன்னு நான் மட்டும் கூப்பிட்டுக்கிட்டு இருந்தேன்.


எப்பவாவதுதான் நம்மிடம் வரும் வழக்கம். நான் மகள் வீட்டுக்குப்போகும்போதெல்லாம்  அநேகமா தூரக்க இருந்து பார்ப்பதோடு சரி. அவள் ஊரில் இல்லாத சமயம் ஜூபிக்கு சாப்பாடு கொடுக்கப் போவோம். கொஞ்சம் யோசனையோடு நம்மை ஏறிட்டுப் பார்த்துட்டு  'பூனை வாசல் ' வழியா வெளியே போறதும் உண்டு.



திடீர்னு ஜூபிக்கு  நாலு வயசாகும்போது  இன்னொரு பூனை வச்சுக்கலாமான்னு  யோசனை என்றதும்,  நம்ம 'ராஜலக்ஷ்மி' யை வேணுமுன்னால் கொண்டு போ என்றேன். 'அதெப்படி?  உனக்கு யாரும் வேணாமா?  உன்னால்   தனியா வாழமுடியாது' ன்னு  பதில் வருது! 'அதான் அப்பா இருக்காரேடா............'    'அவர் பொழுதன்னிக்கும் டூர்லேதானே?' கூடவே வந்த அடுத்த வரி.......  ஒரு ஆறுவாரக்குட்டியை வாங்கி வந்தாச்சு.

"அடராமா...... எங்கே இருந்து?"

  "ஷெல்டரில்  இருந்துதான். "

போகட்டும்........  ஒரு ஜீவனுக்கு  வாழ்வு கிடைச்சதே!

ஷெல்ட்டரில் வாங்கும்போது, கொஞ்சம் விலை கூடுதல் என்றாலும்  நல்ல ஆரோக்கியமானவைகள் கிடைக்கும். தேவையான 'அனைத்தையும்'  ஃபிக்ஸ் செஞ்சு, மைக்ரோசிப் கூட  வச்சுருவாங்க.  அதுலே நம்ம  ஜாதகம் அடங்கி இருக்கும்! 

"பெயர் வச்சுட்டாங்களா அவுங்க?"

 இல்லையாம். இவள்தான்  Zeus என்று நாமகரணம் செஞ்சாளாம்.

ஙே.........

"பெரியவன் ரோமானியக் கடவுள் என்றதால் இவனுக்கு க்ரேக்கக் கடவுளின் பெயர் பொருத்தமா இருக்குமுன்னு நினைச்சேன்."

"எப்படிக் கூப்புடணும்?  ஸீயஸ்ன்னா?"

"ஹாஹா..... (ட்)ஸூஸ்ன்னு  சொல்லணும்."

அட ராமா..... அவன் ஜூபின்னா இவன் ஜூஸா!

"ஜூஸ் இல்லைம்மா.  Zeus."

  (அதானே..... விஜயகாந்தா என்ன! )

முதல் மூணு வாரங்களுக்கு வீட்டுக்குள்ளேயே வச்சுப் பழக்கணும். மேலும்  பெரியவனும் சின்னவனுமா இணக்கமா இருக்காங்களான்னு கவனிச்சுக்கணும். எல்லாம் வீட்டில் முதல் குழந்தை  பிறந்து  ரெண்டு மூணு வருசமானதும்  ரெண்டாவது பிறந்துச்சுன்னா எப்படி  கவனிச்சுக்குவோமோ அதேபோலத்தான்.

மனுசக் குழந்தைகளுக்கான அறை அலங்கரிப்பதுபோல்  இந்தப் பூனைக்குழந்தைகளுக்கும் விளையாட்டுச் சாமான்களுடன் அறை ஒன்னு வேணும்தான்.

வீடு பழகுனதும் நம்ம வீட்டுக்கு ஒருநாள்  கூட்டிட்டு வான்னேன்.  வந்தாங்க ரெண்டுபேரும். (ஐ மீன் மகளும் சின்னதுமா)
நம்ம ரஜ்ஜூவுக்கு  குழந்தையைக் காமிச்சேன்.  பதறிக்கிட்டு ஓடினான் வெளியே:-)

அஞ்சு நிமிசம் கழிச்சு மெதுவா அடி எடுத்து உள்ளே வந்தவனைப் பார்த்துட்டு, சின்னது  ஓடிப்போய் அவன் முன்னே நிக்குது:-) முறைச்சுப் பார்த்துட்டு  அப்பா மடியில் தாவி உக்கார்ந்தது ரஜ்ஜூ. சின்னவனோ......  புது இடத்தில்  இருக்கும் சாமான்களை ஒன்னுவிடாமல்  மோந்துபார்த்து ஆராயறான். ட்ரெட்மில்லைக்கூட விட்டு வைக்கலை.



எட்டு வாரத்துக்கு  நல்ல உயரமாவும் பெருசாவும் இருக்கு இந்த ஜூஸு. பச்சைக் கண்ணு வேற! ரொம்ப ஃப்ரெண்ட்லியான சுபாவம்.

ஜூபியும் (ட்)ஸூஸும் மெள்ள மெள்ள பழகிட்டாங்க.   இப்பெல்லாம் ஒன்னில்லாமல் ஒன்னில்லை என்ற அளவில்.



மகள்  வேற வீடு மாறவேண்டிய  சமயம் ,   மத்த எல்லா வேலைகளையும் விட முன்னுரிமை அங்கே இந்தப் பசங்களுக்கான எல்லா ஏற்பாடுகள்தான்.  கேட் டோர்ஸ் ரெண்டு  வேண்டி இருந்துச்சு. பெருசுக்கு ஒன்னு, சின்னதுக்கு ஒன்னா?  ஹாஹா.... கராஜ்  வழியா வெளியே போக ஒன்னு,  கராஜில் இருந்து வீட்டுக்குள் போக ஒன்னுன்னு  இருவழி.






இடம் மாறுனதும் ரெண்டு வாரம் வீட்டுக்குள்ளேயே வச்சுப் பழக்கி அப்புறம்தான்  வெளியே விடணும்.  அந்த நாட்களில்  ரெண்டுபேரும் தங்களுக்கு வாகான இடத்தைத் தேடி வச்சுக்கிட்டானுங்க.  ஜூபி பயந்தாங்குள்ளி, கட்டிலுக்கு அடியில்.  ஜூஸு, வார்ட்ரோப்   தட்டு அடுக்குகளில் ஒரு  இடம்.

"என்னடா ஸூஸப்பா... எப்படி இருக்கே? "


இங்கே நம்மூரில்  Furry Friday  (Stuff.co.nz)  என்று  வாராவாரம் வாசகர்களின்   பூனைகள் படங்களை வெளியிடுவாங்க. சின்னவன் அதுலே பலமுறை வந்துருக்கான்.

ஒருமுறை கவர் ஃபோட்டோவில்!

அதிருக்கட்டும்.......  ராமா ,  க்ருஷ்ணான்னு  வாய் நிறையக் கூப்பிடும்போது புண்ணியம் சேருதுன்னு பெரியவங்க சொல்வாங்க.  எந்தக் கடவுளா இருந்தால் என்ன? கடவுள் ஈஸ் கடவுள்தானே!  ஜூபிடர், ட்ஸூஸுன்னு கூப்பிடும்போதும் மகளுக்குப் புண்ணியம் சேருமுன்னு சொல்லி வச்சேன்.

'கடவுள் இருக்கா, இல்லையான்னு  சரியாத் தெரியலை. அப்படியே இருந்தாலும்  'அது'  உனக்கு மட்டுமே  நல்லது செய்யுது' மகளின் அருள்வாக்கு!

ஆகக்கூடி ரெண்டு சாமிகள் இருக்கும் வீட்டுலே சாமி நம்பிக்கை இல்லாத ஒரு Atheist. இப்படிச் சொல்லிக்கிறது இப்போதைய இளைய தலைமுறைகளுக்கு  ஒரு ஃபேஷனாப் போய் இருக்கு.







கடவுளே.....காப்பாத்து!..


15 comments:

said...

பூனைச்சாமிகள் இரண்டும் அழகு..!

said...

படங்கள் அருமை மேடம்.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

ரசிப்புக்கு நன்றீஸ்.

said...

வாங்க ஆறுமுகம் அய்யாசாமி.

முதல்வருகைக்கு நன்றி.

மீண்டும் வருக.

ம்யாவ்.......:-)

said...

இறை மறுப்பாளியிடம் சொல்லவும் அவரோட குட்டீஸ் very சுவீட் ன்னு !!குட்டிகள் புசுபுசுன்னு !!!!sooooo cute.

said...

வாவ் !!! மியாவ் !! :)

//இது லைஃப்டைம் கமிட்மெண்ட் ஆச்சேன்னு சின்னதா உள்ளூற ஒரு பதற்றம்.//



ரெண்டு பேரும் ரொம்ப அழகுக்கா !! ரஜ்ஜூ அழகோஅழகு !!கோவிசுக்கபோறான் :)
எங்க வீட்டிலும் ஒரு பொண்ணு இருக்கா ஜெஸ்ஸி :) ரொம்ப நாட்டி ..கமிட்மன்ட் பற்றி நானும் யோசிச்சேன் ..என் பொண்ணுக்கு ரொம்ப ஆசைன்னாலே இறங்கி வந்தேன் /தோம் ..
ரெண்டு நாள் ட்ரிப்புக்கே தண்ணி மட்டும் குடிச்சி எங்களுக்காக சாப்பிடாம இருந்தா ஜெஸி .என் கணவர் சொல்றார் நான் மனுஷ பிள்ளை மாதிரி அதையும் ஆக்கிட்டேனாம் !!
ஆனா ஒண்ணுக்கா இந்த நாலு கால் வாலர்கள் வீட்டில் இருந்தா சந்தோஷத்துக்கு பஞ்சமில்லை :)
அப்பப்போ வந்து முட்டும் இடிக்கும் நாவால் நக்கும் !!


ஜெஸி அதோட அட்வன்ட் காலண்டரை என் பொண்ணோட போட்டி போட்டு கிழிக்கும் :)

கொடுத்துவைச்ச மிய்யாவ்ஸ் :)








said...

அழகு அருமை

said...

அத்தனையும் அழகு அருமை

said...

கண்ணு படப் போகுதுன்னு இருக்கு துளசி. அத்தனை அழகுச் செல்லங்களா இருக்குமா. அன்பு இருக்கிற இடத்தில் கடவுள் இருப்பார்மா.

said...

வாங்க சசி கலா.

மகளுக்குச் சொன்னேன்.

நன்றி சொல்லச் சொன்னாள்.

நன்றிப்பா.

said...

வாங்க ஏஞ்லீன்.

பழகிட்டா, விட்டுட்டு நம்மால் இருக்கமுடியாதபடி, நம்மை மாற்றி வச்சுடறாங்களே இந்தப் பசங்க!!!

ஜெஸிக்கு என் அன்பு.

ரஜ்ஜுவும் அழகுன்னதுக்கு நன்றி சொல்லச் சொன்னான்:-)

இத்துனூண்டு தலை. அதுக்குள்ளே குட்டியூண்டு மூளை. அது என்னமால்லாம் சிந்திக்குதுன்னு பார்த்தால் ரியலி அமேஸிங்க்ப்பா!!!!

said...

வாங்க ஸ்ரீ சந்த்ரா.

ரசனைக்கு நன்றீஸ்.

said...

வாங்க வல்லி.

ரெண்டு பேருக்கும் நாலு வயசு வித்தியாசம் இருக்கேன்னு முதலில் ரொம்ப பயந்தேன்ப்பா. ஆனால் இவ்ளோ இணக்கமா இருப்பது மனசுக்கு நிறைவா இருக்கு!

என் கண்ணுதான் பட்டுருக்கும். சுத்திப்போடறேன்:-)

said...

அம்மாவும் அப்பாவும் வெள்ளைப்பூனைகள்
அவர்கள் மகள் நான் சின்னப்பூனை-ன்னு ஒரு எம்.எஸ்.வி பாட்டு இருக்கு. இந்தப் பதிவைப் படிக்கிறப்போ அந்தப் பாட்டுதான் நினைவுக்கு வருது.

பூனைகளைப் பராமரிக்கிறது கொஞ்சம் எளிதுன்னு சொல்றாங்க. ஊருக்குப் போயிட்டாக்கூடப் பொழச்சுக்குமாம்.

ஜூபிடரும் சீயுசும் வாழ்க. கடவுளுக்கே வாழ்த்துப் பாடும் ஊரும்மா நம்ம ஊரு. :)

said...

வாவ்! குட்டீஸ் வாழ்க!