Monday, March 09, 2015

Bபீம்பாய் Bபீம்பாய், இந்த Gகதை உம்மோடதா!! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 28)

ட்ரெஸ் கோட் நினைச்சால்தான் கொஞ்சம்  பயமா இருக்கு. எதுக்கும் இருக்கட்டுமுன்னு  கொண்டு போயிருந்த முண்டு செட்டையும், வேட்டி, மேல் வேட்டி செட்டையும் எடுத்துப் பையில் வச்சுக்கிட்டார் கோபால்.

கீழே போய் வரவேற்பில் விசாரிச்சால்.... கோவில் திறந்துதான் இருக்கும். அவ்வளவா தூரமில்லை. ஒரு நாலரைக் கிலோமீட்டர்தான்  வரும் என்றார், பொறுப்பில் இருந்தவர். பகவதி கார்டன்ஸைத் தொட்டடுத்து இருந்த ஒரு  பேக்கரி கடையில்  சில  மேசை நாற்காலிகள் போட்டு வச்சுருக்காங்க.  ஒரு பையன் எண்ணெய் உருளிக்கு முன்னால்.

பழம்பொரியான்னு கேட்டேன்.  'அதே. வேணோ' என்றான்.  'சாய உண்டோ?' என்றால் 'இருக்யூ' (உக்காரு)என்று பதில். மூணு சாயா  மாத்திரம் வாங்கிக்கிட்டோம். வேறேதும் தின்னத் தோணலை!


நாயர் கடையில் உக்கார்ந்து  டீ குடிக்கணும், கூடவே ஒரு பருப்பு வடை என்ற ஆசை  இன்னும் நிறைவேறலை:(

திருப்புலியூர் கோவிலுக்குப்போறோம். ஆதி காலத்தில் இந்த ப்ரதேசத்துக்கு  குட்டநாடு என்ற பெயராம். அங்கே இங்கேன்னு வழி கேட்டுத்தான் போனோம். பத்தேல் பள்ளிபெருநாள் நேத்தும் முந்தாநாளுமா நடந்துருக்கு. வழியெங்கும் திருவிழா முடிஞ்ச  காட்சிகள்.  இந்தப் பள்ளி (சர்ச் என்பதை கேரளத்தில் பள்ளி என்று சொல்வார்கள்.  அதனால் பள்ளிக்கூடத்தையும் பள்ளியையும் சேர்த்துக் குழப்பிக்க வேணாம் கேட்டோ!)  பள்ளி முக்கு திரும்பிய  ஆறாவது மினிட் நாம் கோவிலுக்கு வந்திருந்தோம்.

ஒரு பத்திருவது படிகள் ஏறிப்போகணும். கோவில் முகப்பில் பள்ளிகொண்ட பெருமாள். திருப்புலியூர் மஹாவிஷ்ணு கோவில் என்று மலையாளம், தமிழ், இங்கிலீஷ்,ஹிந்தின்னு நாலு மொழிகளிலும் எழுதி வச்சுருக்காங்க.  ரொம்ப நல்லது. படிகளின்  முடிவில் இருந்தவர் , 'ஷர்ட் ஊரிக்கோ' என்றார். சீனிவாசனுக்கு முழி பெயர்த்தேன்.  அவர் சட்டையைக் கழற்றிக் கையில் வச்சுக்கிட்டார் .  நமக்கு சல்வார் ஒக்கே போல. யாரும் ஒன்னும் சொல்லலை. நிம்மதி.

மேலேறிப்போய் முன்னால் இருக்கும் மண்டபத்தைக் கடந்தால்  கண்ணெதிரே  மிகப்பெரிய வளாகம். தரையெல்லாம் கலர் டைல்ஸ் பதிச்சு பளிச்!



 நெடுநெடுன்னு கொடிமரம் மேலே போகுது!  கல்லால் ஆன தீபஸ்தம்பம் புது மாதிரி!   பதினொரு குழிப்பணியாரக் கல்லை அடுக்கி வச்சது போல்  !   அதுவும்   முன்மண்டபத்தின் ரெண்டு பக்கத்திலும் ஒவ்வொன்னு!  அடடா... இதுலே விளக்கேத்தி இருந்தால் எப்படி இருக்குமுன்னு மனக்கண்ணில் தீபமேற்றிப் பார்த்தேன். ஹைய்யோ!

நம்மாள் அதுக்குள்ளே  வேஷ்டிக்கு மாறி இருந்தார். அசலாயி:-)

இந்தப்பக்கம்  மேடை மேல்  ஒரு பெரிய  Gகதை

கொடிமரம் பலிபீடம் கடந்து  அடுத்த பிரகாரத்திற்குள் போகணும். திண்ணைச்சுவர் வச்ச  உம்மரம். ' ஓம் நமோ நாராயணா. ஓம் நமோ பகவதே வாசுதேவாய 'ன்னு ரெண்டு வரிகள்  தலைக்குமேல் எழுதி இருக்கு. இடத்துவசம்...  பூஜா நேரங்கள்  எழுதி வச்ச போர்டு.


சின்னதா  நடுவில் மனிதர் (மட்டும்) உள்ளே போகும் வழி. அதில்மரக்கட்டைகள் வச்சு  பிடிப்பிச்சு, ஒரு நாலு இஞ்சு இடைவெளி. பாதத்தைக் கஷ்டப்பட்டுத் திருப்பி நுழைச்சு அடுத்த பகுதி படிக்கட்டில் காலு குத்தணும். எண்டே நாராயணா.....

உம்மரத்தில்  உக்கார்ந்திருந்த  ஒருவரிடம் படம் எடுக்க  அனுமதி வாங்கிக்கிட்டேன். வெளிப்புறம் மட்டும் எடுத்துக்கலாம்.நோ ஒர்ரீஸ்.

அடுத்த வாசலில் நுழைஞ்சால்  பெரிய திண்ணைகள் ரெண்டு பக்கமும் வச்ச இடைநாழி.  அது கடந்து போனால்  தாழ்ந்த கூரை உள்ளதும் இடுப்பளவு உயரம் வரும் திண்ணைத்தரையுமாக ஒரு மண்டபம். ஒரு பெரிய சதுர மேடைக்கு மேல் கூரை போட்டாப்போல!

கொஞ்சம் உடலைக்குறுக்கிக் குனிஞ்சு பார்த்துக் கும்பிடறாங்க முன்னே போன ரெண்டு லேடீஸ். நாமும் அதே போல் செய்தால் ஆச்சுன்னு குனிஞ்சேன். ஹைய்யோ!

ரொம்ப தூரத்தில் ஏராளமான எண்ணெய் தீபங்களின் ஒளியில் சந்தனக்காப்பில் கண்ணெழுதி பொட்டு தொட்டு நின்றகோலத்தில் இருக்கார் மாயபிரான்! இந்த மண்டபத்தை இடமோ வலமோ வந்தால் கருவறைவாசலில் நிற்போம். அஞ்சு படிகள் ஏறிப்போகணும்.  நாம இல்லை.  பட்டர் ஸ்வாமிகள். படிக்கு  ரெண்டு புறமும் மக்கள்ஸ் நிற்கலாம்.ஆண்கள், பெண்கள் என்று தனித்தனியாப் பிரிச்சு இல்லை. ஒருவேளை நாம் போனபோது  கூட்டம் இல்லை என்பதாலோ என்னமோ!

நான் வலமாகப்போய் நிற்கும்போதே, இடதுபக்கம் நின்ற அந்தப் பெண்கள் கருவறை  வலம்வரப்  போயிட்டாங்க. நமக்கு ஏகாந்த தர்ஸனம்!  நல்லா  என் பார்வையை உள்ளே செலுத்தினேன்.  இந்த அஞ்சு படிகள் முடிஞ்சு  உள்ளே ஒரு சின்ன  அறை. அதைக்கடந்து இன்னும் ஐந்து சின்னப்படிகள். அதுக்கும் மேலேஇருக்கும் இடத்தில்தான் பெருமாள் நிக்கறார். பெருமாள் முகத்துக்குத் தங்கக்கவசம்.  இது மஞ்சளா மின்னியதைத்தான் தூரத்திலிருந்து பார்த்துட்டுச் சந்தனக்காப்புன்னு நினைச்சிருந்தேன்.  உள்கூரையில் இருந்து தொங்கும் சரவிளக்குகள், கீழே ஆறேழு குத்துவிளக்குகள்.  இதில்லாமல் அகல்போல்  வரிசையா இன்னும் விளக்குகள் வேற.  நல்ல ப்ரகாசமான கருவறை.

நாம் நிற்குமிடத்தில்   நம் கண் முன்னால்  ரெண்டு சர விளக்கு  படிக்கட்டின் பக்கத்துக்கொன்னா தொங்குது. அதில்  ஒற்றை திரியில்  தீபம்.  திடீருன்னு  சின்னதா  மேள ஒலி. சட்னு திரும்பிப் பார்த்தேன்.  எனக்கு வலதுபக்கம் கருவறைச் சுவரை ஒட்டிய இடத்தில்  நம்மூர் உடுக்கை  போன்ற ஒரு மேளத்தை தோளில் தொங்கவிட்டுக்கிட்டு  மெல்லிய பிரம்பால் வாசிக்கிறார் ஒருத்தர். பெரிய சைஸ் உடுக்கை போல நடுவில்  இடை சிறுத்தும் இருப்பதால்தான் இதுக்கு இடெக்கான்னு பெயர் வந்துருச்சோ என்னவோ!

 மோஹினியாட்டம்,  கதகளி. க்ருஷ்ணனாட்டம் நிகழ்ச்சிகளில் எல்லாம் இது  ஒரு முக்கியமான  வாத்தியம்.  சிவபெருமானே இதை வடிவமைச்சு  தன் பக்தனான பாணாசுரனுக்குக் கொடுத்தாராம். அதனால் இது தெய்வீக இசைக்கருவியாக  ஆகிருக்கு. ஆஹா....  சிவபெருமானே  டிஸைன் செஞ்சதா!!!  அதான் தன்னுடைய உடுக்கைப்போலவே  செஞ்சு கொடுத்துட்டார் போல!

நம்மூர் கோவில்களில் சாயரக்ஷை பூஜை சமயம் தவில், நாதஸ்வரம் வாசிக்கிறாங்க பாருங்க அதைப்போல் கேரளத்தில்  சந்தியா  நேரப்பூஜைக்கு  இதை வாசிக்கன்னே கோவில் ஒரு கலைஞரை நியமிச்சிருக்கு.
டுணுக்கு டுணுக்கு டுக்கு  டுணுக்கு டுணுக்கு டுக்குன்னு ஒரே லயத்தில் வாசிக்கிறார்.  கேட்ட நமக்கும் மோஹினியாட்ட  அசைவுகள் தானே வர்றதுபோல எனக்குத் தோணல்.


படம்  : முன்னே நம் பதிவுகள் ஒன்னில் மோஹினியாட்டம் பற்றி எழுதினபோது போட்டது.  மேடை நிகழ்ச்சி என்பதால்  கலைஞர்  ஷர்ட் போட்டுருக்கார். ஆனால் கோவிலில் ஷர்ட் பாடில்லா.


பூஜைகள் ஆரம்பிச்சது. படிக்கட்டுகள் ஏறி கருவறைக்குப் போகும் இடங்கள் எல்லாமே   உயரம்  ரொம்பவே குறைவான தாழ்ந்த கூரை என்பதால் நம்பூதிரி உடம்பை ரெண்டாக மடிச்சுக் குனிஞ்சு நடந்து பெருமாள் முன் உக்கார்ந்துக்கறார்.

முன்பக்கம் மல்லிகைப்பூக்கள் கொட்டி வச்சுருக்கு.  பெருமாளுக்கும் மல்லிகைச் சரங்களால் அலங்காரம். மல்லிகைப்பூக்களால் அர்ச்சனை செய்து,  கெண்டி நீர் ஊற்றி கைகாட்டி, திருவிளக்குகள் சுத்தி  தீபாராதனை  காமிச்சுன்னு ஒவ்வொன்னாக நடக்குது.

பூஜை முடிஞ்சதும்  ரெண்டாக  உடலை மடிச்சுக் குனிந்த வாக்கிலேயே  தீபாராதனை காமிச்ச  திருவிளக்கைக் கொண்டுவந்து படிக்கட்டின்  இடதுபுறக் கல்லில் வச்சவர்  கிடுகிடுன்னு இறங்கிப்போயிட்டார். இதுக்குள்ளே கருவறை வலம் முடிச்சு வந்த சிலர்   தீபாராதனை ஜோதியை  லேசாத்தொட்டு வணங்கிட்டு பக்கவாட்டில் திண்ணை மண்டபத்துலே  இருந்தவரிடம் கை நீட்ட அவர் துளிச் சந்தனத்தைக் கிள்ளி எறிந்தார். அது 'சொத்'  என்று அவர்கள் உள்ளங்கையில்  விழுந்துச்சு.

ஓஹோ.... இதுதான் இங்கே முறைன்னு பார்த்துப் படிச்சுக்கிட்டேன். நாமும் கருவறை சுற்றி வரப்போனோம்.  வட்டமான கருவறை. ரொம்பப் பெருசாவே இருக்கு. கருவறை விமானம் பழுது பார்க்கறாங்க போல! தென்னோலைகளால் மூடி வச்சுருக்காங்க.  வெறும் ஓடுகளால் ஆன கும்மாச்சி போலத்தான் தெரியுது.

அகலமான பிரகாரத்தின்  வலம் வரும்போது  நமக்கிடது பக்கம்  வெராந்தா போல் இருப்பது முழுசும் திண்ணை உயரத்தில்.  அதுலே அங்கங்கே    குட்டி அறைகள் போல  அமைப்பு. மடப்பள்ளி,பிரசாதம் விளம்பும் இடம் என்றெல்லாம்  இதுலேயே இருக்கு போல. திண்ணையின் ஒரு பக்கம் விளக்குகளும் உருளிகளும், கெண்டிகளுமா தேய்ச்சு மினுக்கிக் கவுத்து வச்சுருக்காங்க.

வட்டக்கருவறையில் ஒரு இடத்தில் சின்னதா  மாடம் போல் சந்நிதி  இருக்கேன்னு எட்டிப்பார்த்தால் புள்ளையார் இருக்கார்.

கருவறைக்கு பின்பக்கத் திண்ணையின்  வலது மூலையில் ஒரு சின்ன அறை. தாயார் சந்நிதி!  பொற்கொடி நாச்சியார்!  திண்ணை மேலேறி தரிசிக்கலாம்.  அப்படியே வலம் வந்து முன்புறத்திண்ணை மண்டபத்துக்கு அருகில் வரும்போது அங்கே ஒரு கிணறு!

அதுக்கு எதிர்ப்புறம் வரும் திண்ணைச்சுவரில் ரெண்டு  தமிழ்பாசுரங்கள் எழுதி வச்சுருக்காங்க. கருப்புப் பளிங்கில் செதுக்கி வச்ச எழுத்துகள். நம்மாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் ஆளுக்கொரு பாடல் பாடி இருக்காங்க.

மறுபடி திண்ணைமண்டபத்துக்கு வந்து சந்தனத்துக்கு இருகைகளையும் ஒன்றுக்கு மேல் ஒன்று  வச்சு நீட்டினேன். சின்ன வாழை இலை நறுக்கில் சந்தனமும் ரெண்டு மல்லிகையும்வச்சு   இரு ஒரங்களிலும் பிடிச்சு நம் கைகளில்  மெதுவாகத் தூக்கிப் போட்டார். வேற்று மாநிலத்தினருக்கான மரியாதையாக  இருக்கலாம்!

கருவறைக்கு அக்கம்பக்கம் தட்டில்  போட்ட தக்ஷிணைகளோ, உண்டியலோ இல்லை . யாரும் பக்தர்களிடமிருந்து காசை எதிர்பார்க்கலை. இதை எதிர்பார்க்காத எனக்கு  ஒரே ஆச்சர்யம்தான்.

இடைநாழி கடந்து, முன்வாசல் (உம்மரம்) வந்து  தடுப்பு வச்ச முன்படிகளைத் தாண்டி வெளியே ஏறக்குறைய குதிச்சேன்னு சொல்லலாம்.

இப்ப வெளிப்ரகாரத்தை வலம் வருவோம்,சரியா? நல்ல உயரமான   சுவரும், ஓட்டுக்கூரையுமா இருக்கு. அதில் சுவரில் ஆளுய மரச்சட்டத்தை அங்கங்கே வரிசையா அடிச்சு அதில்  விளக்கு வைக்கும் பித்தளை அகல்களைப் பொருத்தி வச்சுருக்காங்க. கேரளக்கோவில்களில் வழக்கமா  நாம் பார்க்கும் விளக்குச் சட்டங்கள் வரிசை இல்லை.




இந்தக் கோவிலுள்ள இடத்துக்குப் புலியூர் பெயர்க்காரணம் என்னன்னு  சொல்லிக்கிட்டே வரேன். கேட்டுக்கிட்டே நீங்களும்  வாங்க.

நம்ம சிபிச்சக்ரவர்த்தியின்  (புறாவுக்காக தன் தசையை வெட்டிக்கொடுத்தவர்)  மகன் வ்ருஷாதர்பி இந்தப்பகுதியை ஆண்டுக்கிட்டு இருக்கார். அப்போ பெரிய வெள்ளம் வந்து  நாடே கஷ்டத்தில் இருக்கு. அப்பப்பார்த்து சப்த ரிஷிகள் இங்கே வர்றாங்க. நாடு இருக்கும் நிலையில் தானம் தர தன்னால் இயலாதுன்னு மன்னர் சொல்றார். நாட்டை வளமாக்கினால் தானம் தருவேன்னும் சொல்றார்.

தானம் வாங்கவந்தவர்கள்னு தங்களை  நினைச்சதுலே ரிஷிகளுக்குக் கோபம்.  அரசருக்கு பயம் வந்துருது. அவர்களுக்குப் பழங்கள் கொடுத்து உபசரிக்கிறேன்னு பழங்களுக்குள்ளில்  கொஞ்சம் தங்கம் ஒளிச்சு வச்சு அனுப்பறார்.  ஞானதிருஷ்டியால் ரிஷிகளுக்கு விவரம் தெரிஞ்சதும் பழங்களை வேணாமுன்னு சொல்லி திருப்பிஅனுப்புனதும் மன்னருக்கு மகாகோபம்!   ரிஷிகளை ஒழிச்சுக்கட்ட ஒரு யாகம்செஞ்சு,  யாகத்தீயில் இருந்து ஒரு துர்தேவதை  வருது. அவள் பெயர் க்ருத்யை என்று எங்கோ வாசிச்ச நினைவு.

இதை உணர்ந்த ரிஷிகள் மஹாவிஷ்ணுவை வேண்டினதும்,  இந்திரனை ஒரு புலியாக மாறி தேவதையைத் தாக்கச் சொல்லி  அனுப்பறார் விஷ்ணு. புலி  துர்தேவதையைக் கொன்னு ரிஷிகளைக் காப்பாற்றுச்சு. அதான் புலியூர் பெயர் வந்த காரணம்.  சப்த ரிஷிகளுக்குத் தரிசனம்  தந்து மோட்சம் கொடுத்தார் விஷ்ணுன்னு கதை முடியுது!

"அப்ப மாயபிரான் என்று மூலவரை ஏன் சொல்லணும்? புலியூரான் என்று சொல்லக்கூடாதா?"

" ஹாஹா... வாங்க,  இன்னொரு  புராணக்கதை கேட்க."

நாரதருக்கு ஒரு சமயம் ரொம்பபோர் அடிச்சது. இந்த முறை கலகத்தை   கண்ணனின் மனைவிகளிடம் ஆரம்பிக்கலாம் என்று திட்டம் போட்டார். முதலில் ருக்மணி வீட்டுக்குப்போறார். அங்கே  மனைவிக்குத் தாம்பூலம் மடிச்சுக் கொடுத்துக்கிட்டு இருக்கறார் க்ருஷ்ணர்.  ஆஹா.... இனி மற்ற மனைவிகள் /துணைவிகள் வீட்டுக்குப்போய் போட்டுக்கொடுக்கலாம் என்ற குஷியில் ராதையின் வீட்டுக்குப்போறார் நாரதர்.

அங்கே ராதைக்காக தன் புல்லாங்குழலில் அழகான  இசையை வாசிச்சுக் காட்டும் கிருஷ்ணர். இது எப்படி? இப்பத்தானே  வெத்தலை பாக்கு மடிச்சுக்கொடுத்துக்கிட்டு இருந்ததைப் பார்த்தேன் என்ற குழப்பத்தோடு, சத்யபாமா வீட்டுப்பக்கம் நடையைக் கட்டுனார் நாரதர்.  அங்கே என்னன்னா, கணவருக்கு  ஆசை ஆசையா சாப்பாடு ஊட்டிக்கிட்டு இருக்காங்க மனைவி.
என்னடா..இதுன்னு  ஜாம்பவதி வீட்டுக்குக் காலைவீசிப் போட்டு வர்றார் நாரதர். அங்கே ஓய்வா படுத்திருக்கும்  கிருஷ்ணருக்கு ஜாம்பவதி கால் அமுக்கி விட்டுக்கிட்டு இருக்காங்க.

நம்ம கோள்மூட்டல்  நடக்கலையே.... இப்படி மாயக்கண்ணனா எங்கே பார்த்தாலும் இருக்காரேன்னு  நாரதர் 'அன்றைக்கான' கலக எண்ணத்தை விட்டார். அதனால் இங்கே  மூலவருக்கு  மாயபிரான் என்று பெயராம்.

கோவில் திறந்திருக்கும் நேரம் காலை அஞ்சு முதல் பதினொன்னு, மாலை அஞ்சு முதல் எட்டுன்னு  சொன்னாங்க. நூத்தியெட்டு திவ்யதேசக்கோவில்கள் வரிசையில் திருப்புலியூர் கோவில்  அறுபத்தி மூணாவதா இருக்கு.


வெளிப்ரகாரத்தின்  ஒரு மூலையில்  அம்மன் சந்நிதி ஒன்னு இருக்கு. விஷ்ணு துர்கைன்னு நினைச்சேன். புவனேஸ்வரி அம்மன்னு சொன்னாங்க.

ரொம்பத்தள்ளி  தூரமா ஒரு நாகர் ப்ரதிஷ்டை.  சர்ப்பக்காவு!  ஏழுதலை ஆதிசேஷன்!


'விஸ்தாரமா ரொம்ப பெரிய கோவிலா இருக்குல்லே' என்றார் கோபால்.

" இருக்காதா பின்னே? பீமன் கட்டுன கோவிலாமே. அவன் சைஸுக்குத்தானே  இருக்கும்"

ஓ... அதுதான் இங்கே Gகதை  இருக்கா!!!!

தொடரும்.........:-)

PIN குறிப்பு: இந்த முறை  நம்ம இந்தியபயணத்தின் நோக்கமான   சேரநாட்டு திருப்பதிகள்  என்ற  அஸைன்மெண்ட்  இன்னிக்குத்தான் ஆரம்பிக்குது! முதல் தரிசனமே மனசுக்குத் திருப்தியாக அமைஞ்சது மகிழ்ச்சி! 











25 comments:

said...

ஆனாலும் ரொம்ப சிரமப்பட்டு இருக்கிறீர்கள் என்று மட்டும் தெரிகிறது...

புலியூர் பெயர்க்காரணம் அறிந்தேன் அம்மா...

said...

புலியூர் பெயர்க்காரணம், கோவில் படங்கள், புராணக் கதைகள் என அனைத்தும் அருமை. கேரளக் கோவில்களில் இருக்கும் அமைதி மிகவும் பிடித்த ஒன்று.

said...

ஒரு சமயம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு என் பைவாரங்களோடு சென்றேன். அப்போது என் மூத்த பேரனும்மு ஐந்து வயதிருக்கலாம்மேடையில் ஏறி தரிசனம் செய்ய ஆண்கள் மேல் சட்டையை கழட்ட வேண்டும். மேடையில் தரிசனம் செய்து கொண்டிருந்தபோது என் பேரன் சத்தமாக ‘ஏன் அப்பா பாய்ஸ் மட்டும் உடுப்பைக் கழற்றணும் கேர்ல்ஸ் ஸுக்கு ஏன் இல்லை என்று கேட்டது நினைவுக்கு வந்தது. ஒவ்வொரு டிடெயிலாகக் குறித்து வைத்துக் கொண்டமாதிரி எழுதிப் போகிறீர்கள் பாராட்டுக்கள். நாங்கள் திருப்புலியூர் போனதில்லை கேட்டோ..!

said...

நல்ல வர்ணனை.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

அதென்ன அப்படி ஒரு வழின்னு இன்னும் யோசனையாத்தான் இருக்கு! இன்னும் கொஞ்சம் குண்டா இருந்திருந்தால்... கதை கந்தலாகி இருக்குமோ என்னவோ:-)))

இளைக்கணும்ப்பா. இன்னும் இளைக்கணும்:(

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பிரசித்தியான சில கோவில்களைத்தவிர கேரளக் கோவில்களில் கூட்டம் இருப்பதில்லை.

அந்தந்த நேரத்துக்குப் பூஜையை முடிச்சுக்கிட்டு போய்க்கிட்டே இருக்காங்க பட்டர்கள்!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

சின்னப்பிள்ளைகளின் வெகுளித்தனம்...ஹாஹா.

எப்போதும் குறித்து வைப்பதில்லை . பலவிஷயங்களை மறந்துட்டும் எழுதுகிறேன். எப்பவாவது நினைவுக்கு வந்தால் சேர்த்துக்கொள்ளலாம் தானே!

கேரள யாத்திரையில் இந்தமுறை எல்லா இடங்களிலும் நல்ல தர்ஸனம்தான். குருவாயூர் தவிர:(

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

வருகைக்கு நன்றி.

said...

nangalum tirupuliyur solli kettu alaithom pinnar orvaur kutta nadu enru solli anupinarkal. nice to see this

said...

டீச்சர் பறஞ்ஞது ஒண்ணு மாத்ரம் மனசிலாயிட்டில்ல. ஷர்ட் உடுத்தாம் பாடில்லன்னு பறஞ்ஞல்லோ? போட்டோஸ்ல ஓராள் உண்டல்லோ purple கலர் ஷர்ட் இட்டு. அயாலுக்கு மாத்ரம் எங்ஙன பற்றும்?

பக்‌ஷெ ஆ டைல்ஸும் ஸ்தலமும் கொல்லாம் கேட்டோ. ஐஸ்வர்யமாயிட்டுண்டு. ஒரு திவசம் அவிட செல்லணம் என்டு ஒரு ஆக்ரஹம் கொறய நாளாயுண்டு. எனக்கு செல்லாம்பற்றுமோ?

said...

கேரளாவில் உள்ள எல்லா கோவில்களிலும் பிரசாதத்தை கையில் தர மாட்டார்கள்.சின்ன வாழை இலை நறுக்கில் சந்தனமும் குங்குமமும் பூவும் வச்சு இரு ஒரங்களிலும் பிடிச்சு நம் கைகளில் மெதுவாகத் தூக்கி தருவார்கள்.நம்மை தொட மாட்டாா்கள்.இது இவா்கள் பாரம்பரிய பழக்கம்

said...

aha very nice ambalam yr photos r as usual very clear even we want to go for kerala temples when god will call me i dont know tks for information

said...

வாங்க பித்தனின் வாக்கு.

எங்கே ரொம்ப காலமா ஆளையே காணோம்!

குட்டநாட்டில் தரிசனம் நல்லபடியாகக் கிடைச்சதுதானே?

said...

வாங்க ரிஷான்.

அடக்ருஷ்ணா.....படம் பார்த்தீங்களே... அதுக்குக்கீழே இருக்கும் ஒன்னரை வரியைப் பார்க்கலையா?

உள்பிரகாரம் கருவறைக்கு முன் போகத்தான் ஷர்ட் கழற்றணும். வெளிபிரகாரத்தில் சுற்றலாம்தான். பேசாம ஒரு முண்டு (வேஷ்டி + மேல்வேஷ்டி) அங்கவஸ்த்ரம் கட்டிக்கிட்டுப் போங்க.

லோகல் மக்களிடத்தில் ஸம்ஸாரிக்கான் இத்தர மலையாளம் மதி கேட்டோ!

said...

வாங்க சுபா.

வணக்கம்.முதல் வருகைக்கு நன்றி.

உண்மைதான். ஆனால் எல்லாக் கோவில்களிலும் இல்லையாக்கும். பெரிய கோவில்களில் இருக்கும் தள்ளுமுள்ளுகளில் உள்ளங்கையில் சொத் என்று விழும் துளிச் சந்தனம்தான் பெரும்பாலும். சொந்த அனுபவம் உண்டு.

எங்க கண்ணம்புழா அம்பலத்திலும், ஸ்ரீதரமங்கலம் க்ருஷ்ணன் அம்பலத்திலும் வாழைநறுக்கில் நீங்க சொன்னதுபோல்தான் எப்போதும்.

கேரளாவில் தான் எங்கள் ஆரம்பகால வாழ்க்கையில் குப்பை கொட்டுனது:-)

said...

வாங்க மீரா பாலாஜி.

அதெல்லாம் கிடைக்கும். கவலை ஏன்? எனக்கு இந்த வயசில் கிடைச்சது, உங்களுக்கு இன்னும் சீக்கிரம் கிடைக்கட்டுமுன்னு பெருமாளிடம் வேண்டிக்கறேன்.

said...

திருப்பதி ஆந்திராவில் மட்டும் இல்ல. கேரளாவிலும் இருக்குன்னு நிரூபிச்சிட்டீங்க :)

திருப்புலியூரும் திருப்பாதிரிப்புலியூரும் ஒன்னா வெவ்வேறயா?

உங்க கிட்ட இந்தக் கேள்வியைக் கேட்டுட்டு ஒடனே நானே தேடிட்டேன். அது கடலூர் பக்கம் இருக்காம். சைவக்கோயில் வேற.

நம்மூர்ல திருநீறையும் குங்குமத்தையும் கிள்ளியெறிஞ்சா அவங்க சந்தனத்தைக் கிள்ளியெறியுறாங்க போல.

சரி. சட்டுன்னு ஒரு வரலாற்றுத் தகவல். நெற்றியில் ஏதாவது பூசிக்கிறது ஆதிவாசிகளின் பழக்கமாம். ஆப்ரிக்காவில் இன்னைக்கும் பூசிக்கிறாங்க. அவங்க பூசிக்கிற டிசைனை வெச்சு எந்தக் குடியைச் சார்ந்தவங்கன்னு கண்டுபிடிக்கலாமாம்.

நம்மூர்லயும் அந்தக்காலத்துல அப்படித்தான் இருந்துச்சு.
பாண்டியன் - திருநீறு
சோழன் - குங்குமம்
சேரன் - சந்தனம்
இப்ப எல்லாம் கலந்துருச்சுன்னு வெச்சுக்கோங்களேன்.

அந்த கதை ரொம்பப் பெருசு. அதத் தூக்குனாதான் கல்யாணம்னு சொன்னா ஒருபயலுக்கும் ஆகாது.

கோயிலும் கோயில் சார்ந்த எடங்களும் மிக அழகு.

நாட்டை வளமாக்கித்தந்தால்னு கேட்டப்பவே அரசனோட நல்ல மனசை அந்த முனிவர்கள் புரிஞ்சிக்கலையே. அதுக்கு மேலயும் கோவம் வேற. அந்த துர்தேவதைய விட்டது சரிதான்.

said...

கோவிலை மிக அழகாக சுற்றிக் காட்டி திவ்யமாக தரிசனமும் செய்ய வைத்திருக்கிறீர்கள்..துள்சி!
அது சரி..அடிக்கடி 'கேட்டோ..கேட்டோ?'என்ற வார்த்தைகள் வந்து விழும் ரகசியம் இப்போது புரிந்தது. உங்களுக்கும் 'புரிஞ்சோ?'

said...

குளுமையான படங்கள்.

யாகம் எந்த கடவுள் மேலே செஞ்சாராம் ராஜா? customer return தேவதை லாயக்கில்லேனு இன்னொரு தேவதை replacement கேட்டிருக்க வேண்டாமோ?

தலைப்பு புரியலியே?

said...

வாங்க ஜிரா.

வரலாற்றுத் தகவலுக்கு நன்றி.இப்படித்தான் சட் சட்னு புதத் தகவல்கள் வந்து வியக்க வைக்கிறது!

திருநீறு, குங்குமம், சந்தனம் எல்லாம் கலந்தால் தப்பில்லை. முகத்தில் ஈஷிக்காமல் இருக்கணும். அம்புட்டுதான்:-)

அந்தக்காலத்து (இள)வட்டக்கல் நினைவுக்கு வந்துருச்சு:-)

said...

வாங்க நானானி.

புரிஞ்சதா..... நல்லா மனஸிலாயி கேட்டோ:-)))

said...

வாங்க துரை.

பீமனின் 'கதை'யாக்கும் இது. பீமன் கட்டிய கோவில் இது.

யாகம் துர்தேவதைகளின் தலைவிக்கு செஞ்சுருப்பார்னு தோணுது.

கெட்டதோ நல்லதோ.... எல்லோருக்கும் ஒரு 'தலை 'இருக்கத்தானே செய்யுது!

தலைப்பு... அந்த ஆங்கில எழுத்துக்களைச் சொல்றீங்களா?
சரியான உச்சரிப்புக்காக துளசிதளத்தின் கண்டுபிடிப்பு இது.

said...

திருப்புலியூரில் தரிசனம் கிடைத்தது குறித்து மகிழ்ச்சி. படங்களும், கதையும் சுவையாக இருந்தது.

நாங்கள் திருவனந்தபுரத்தில் பத்மநாபனை பார்க்கவேயில்லை...:) எங்கோ தள்ளி இருந்த சுவாமியையும் பார்க்க விடாமல் ”போகட்டே போகட்டே” என்ற அலறல் தான் கிடைத்தது...:)

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

அதுக்குத்தான் சென்னை அடையாரில் நம்ம அநந்தபதுமனைப்போய் எவ்ளோ நேரமுன்னாலும் ஸேவிச்சுக்கலாம் என்பது:-)

இல்லைன்னா... நம்ம ரங்கன், உங்க வீட்டாண்டையே இருக்கானேப்பா!!!!

said...

ரங்கனை பார்ப்பதும் அபூர்வமாகத் தானே இருக்கு....:) பிடிச்சு வெளியே தூக்கிப் போடாத குறை தான்...:)