Friday, March 06, 2015

மார்பு முடிகளை மறைக்கும் T Shirtக்கு வயசு இப்போ 102!



"ஏங்க , நீங்க எப்ப முதல்முதலா  டி ஷர்ட் போட்டீங்க?  "

"அது ஃபிஜி வந்த புதுசில்.  கடைகளில் இதுதான் ஏராளமாத் தொங்குது. தெருக்களில் நிறையப்பேர் போட்டுக்கிட்டு உலாத்தறாங்க. அதைப் பார்த்துட்டுத்தான்  வீக் எண்ட்க்கு வீட்டுலே போட்டுக்கலாமுன்னு ஒன்னு வாங்கினேன்."

"ஏன் நாம் இந்தியாவில் இருந்தப்போ  வாங்கிக்கலை?  "

"அப்ப ஏது?   மூணாவது வீட்டுப் பையன் துபாய்லே ( அப்பெல்லாம் எந்த மிடில் ஈஸ்ட் நாடாக இருந்தாலும் எல்லாத்துக்கும் நம்ம மக்கள்ஸ் சொல்லும் பெயர்  துபாய்தான்!)  இருந்து வந்தப்போ, எனக்கு ஒரு சிகரெட் பாக்கெட் கொண்டு வந்து கொடுத்தானே அப்ப ஒன்னு போட்டுக்கிட்டு இருந்தான்.  எதோ படம் முன்பக்கம் இருந்துச்சுன்னு நினைவு."

எங்க கேண்டர்பரி ம்யூஸியத்துக்குப் போகும் வழியில்  பேசிக்கிட்டே போறோம். முந்தியெல்லாம் ஞாயிறுகளில் பார்க்கிங் மீட்டரில் காசு போடவேணாம். இப்ப என்னன்னா  காலை 9 முதல் மாலை 6 வரை காசு போடணுமாம். ஆறுமணிக்கு மேலே போகலாமுன்னா ம்யூஸியம் அடைச்சுருவாங்களே:(

வரவர சிட்டிக் கவுன்ஸில் கொஞ்சம் அல்பமாத்தான் நடந்துக்கிட்டு இருக்கு.  சிட்டி புனர் நிர்மாணத்துக்குக்  காசு சேர்க்குது போல. போயிட்டுப்போகட்டும். மூணு டாலர் பத்து செண்ட் ஒரு மணி நேரத்துக்கு சார்ஜ். காசைப்போட்டுட்டு, மெஷீன் துப்பும் ரசீதை காருக்குள்ளே டேஷ் போர்டு மேலே வெளியே தேதியும் நேரமும் தெரியறாப்ல வச்சுடணும்.  இல்லைன்னா.... வண்டிக்கு க்ளாம்ப் போட்டுட்டுப் போயிருவாங்க. அதுக்கு ஒரு பெரிய தண்டம் அழணும்:(

எங்க ஊர்லே இப்ப கோடைகாலத்துக் கொண்டாட்டங்கள் நடந்து முடிஞ்சுருக்கு.  அதன் நீட்சி இன்னும் ஒரு மாசத்துக்கு  லேசா இருக்கும். கேரண்டியா சொல்ல முடியாது. நேத்து 28. இன்னிக்கு 14. இப்படித்தான் என்றாலும் சூரியனைப் பார்க்க முடியும்.

எங்க ம்யூஸியத்துலே   T Shirt Unfolding  என்ற Theme காரணம் 800 டி ஷர்ட் காட்சிக்கு இருக்குன்னு  சேதி கிடைச்சது.  போனோம்.

உள்ளே நுழைஞ்சதும்  டி -வொர்ல்ட் ( T shirt world)என்ற புத்தகம் ஒன்னு விற்பனைக்கு.  விலை $39.90 என்பதால் வாங்கிக்கலை. வரவேற்பில் இருந்த  பெண்மணியிடம்  டி ஷர்ட் எங்கேன்னு கேட்டால்....  Pபாவாவுக்குப் போகும் வழின்னாங்க.

இது நியூஸி பாவா சிப்பிகள் வச்சுக் கட்டினவீடு இருக்குமிடம்.  ம்யூஸியத்துக்குள்ளே நெசமாவேஒரு வீடு இருக்குன்னு சொன்னா நம்பணும். ஐயம் இருந்தால் இங்கே பாருங்க.


நமக்கு வழி தெரியாதா என்ன! விடுவிடுன்னு அங்கே போய் ஹாலுக்குள் நுழைஞ்சால்.... நம்ம தலைக்கு மேலே எதோ கொடிக்கயித்துலே தொங்க விட்டாப்லெ வரிசை வரிசை  டிஷர்ட்டுகள்.  வானவில் பார்க்கறாப்லெ.....ஆரஞ்சு, நீலம்,  பச்சை, சிகப்பு, மஞ்சள், வெள்ளை, கருப்பு (வானவில்லில் வெள்ளையும் கருப்பும்  எங்கேன்னு கேக்கப்டாது கேட்டோ!)

ரெண்டு பக்கமும்  சுவர்கள் போல  போர்டு பலகைகள் வச்சு டியின் சரித்திரம்!  அப்பத்தான் மனசுக்குப் பட்டது... இது ச்சும்மா வந்து பார்த்துட்டுப்போற சமாச்சாரம் இல்லை. ஒரு பதிவுக்கானது என்று.  நாமும் சரித்திரத்தைத் தெரிஞ்சுக்கிட்டு, நம்ம மக்கள்ஸ்க்கும் சொல்லும் கடமை உணர்ச்சியை என்னன்னு சொல்ல:-))))

1913தான்  ஆரம்பம்.  அமெரிகக்கப்பல் படையினர்  போட்டுக்கும் உள்ளாடையா இது உருவாச்சு.  மார்பில் இருக்கும் கொசகொச மயிர்கள் வெளியே அசிங்கமாத் தெரியுதுன்னு  'இதைப்போட்டு அதை மறைச்சுக்கோ'ன்னு சொல்லிட்டாங்க. முழுக்க முழுக்கப் பருத்தியினால்   ஆன உள்ளாடை.  வட்டக்கழுத்தையும்  ரெண்டு பக்கமும் நீட்டிக்கிட்டு இருக்கும் குட்டைக் கையுமா பார்க்கறதுக்கு T  போலவே இருந்ததால் இதுக்கு டிஷர்ட் என்ற பெயர்.

பின்னாட்களில் இந்த  டி ஒரு சரித்திரம் படைக்கப்போகுதுன்னு அப்ப யாருமே ஊகிக்கலை!!!

வேலை சமயத்து சீருடைகளைக் களைந்து ஓய்வா  இருக்கும்போது  கேஷுவலா இந்த டியை வெளிப்புற ஆடையாப் போட்டுக்கவும் ஆரம்பிச்சாங்க கடற்படை மக்கள்ஸ்.

(ஆமாம்... இது நம்மூரு கை வச்ச பனியனில்லையோ!!!!)

1920 இல்  டிக்ஷ்னரியில் டி ஷர்ட் என்றசொல் இடம்பிடிச்சுருச்சுன்னு சொல்றாங்க.இதுக்குள்ளே  இந்த டி  வெளியே உள்ளேன்னு ஆல்பர்ப்பஸ் உடையாக  ஆகி இருந்துச்சு.

1938 லே  25 காசுக்கு ( அமெரிக்கக்காசு, க்வாட்டர்) டிபார்ட்மெண்ட்  ஸ்டோர்களில் விக்க ஆரம்பிச்சாங்க.

1939 லே விஸ்ஸர்ட் ஆஃப் ஓஸ் ( Wizard of OZ) படத்துலே சோளக்கொல்லை பொம்மைக்கு  இந்த டி யைப் போட்டு , உள்ளே வைக்கோல் அடைச்சு முகப்பில் OZ என்று பெருசா அச்சடிச்சு வச்சதுதான் முதல் டிஸைன். பச்சைக்கலர் சட்டையில் வெள்ளை எழுத்துகள்!
1942 இல் லைஃப் பத்திரிகையில் அட்டைப்படத்தில் இடம் பிடிச்சது  அச்சடிச்ச படங்களுடன் இருந்த டி சட்டை. லாஸ்வேகாஸில் இருக்கும்  Aircorp Gunnery School  படையினர்  போட்டுக்கிட்டு இருந்துருக்காங்க.

1945  ரெண்டாவதுமுறை நடந்த  உலகப்போரில் கலந்துகிட்ட  ஆர்மி ஆட்களுக்கு  சப்ளை செஞ்சுருந்தாங்க. உள் ஆடை இப்போ வெளி ஆடையா மாறி இருந்துச்சு.

1948 லே டி ஷர்ட் அரசியலுக்குள் நுழைஞ்சது. இல்லே அரசியல் டி ஷர்ட்டுக்கு(ள்ளு)ம் நுழைஞ்சுருச்சுன்னும் சொல்லலாம். Dew -it with Dewey  என்று  அச்சடிச்ச  டி சட்டைகளை Newyork Governor Thomas  E Dewey , அவர் சார்ந்துள்ள கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிச்சு  நடக்கும் தேர்தல் கூட்டங்களில் அறிமுகப்படுத்தி  இருக்கார்.

1951 இல் சினிமா பிரவேசம்.  சினிமாக்காரர் சொல்றதைக் கேட்பதில் அமெரிக்கர்களும் இந்தியரும் ஒன்னு போல!  மார்லன் ப்ராண்டோ ,  வெள்ளை டி ஷர்ட் போட்டுக்கிட்டு A streetcar named desire  என்ற படத்துலே நடிச்சதைப் பார்த்துட்டு இளைஞர்களிடம்  டி ஷர்ட் புகழ் பத்திக்கிச்சு.  அந்த வருசம் மட்டும்  180 மில்லியன் அமெரிகன் டாலர் விற்பனை!  சந்தர்ப்பத்தை விடாமல் சட்னு  ஒரு கம்பெனி, டிஸ்னிலேண்ட்  மிக்கிமவுஸ், இன்னபிற டிஸ்னி நடிகர்கள்  படம் போட்டுக்கும் ஷர்ட் டிசைனுக்கு பிரத்யேக லைசன்ஸ் வாங்கிருச்சு. இந்த கார்ட்டூன் படங்கள்  சக்கைப்போடு போட்டுக்கிட்டு இருந்த காலக்கட்டம் அது.

அப்புறம் 1955 வருசம்தான்  டிஸ்னிலேண்ட் என்ற தீம் பார்க் ஆரம்பிச்சார்  வால்ட் டிஸ்னி. அதிலிருந்து  வளர்ச்சிதான்! சுற்றுலாப்பயணிகள்தான்  ஏராளமா வந்துக்கிட்டு இருந்தாங்களே  டிஸ்னிலேண்டுக்கு!  அப்ப  ஒரே ஒரு டிஸ்னிலேண்ட்தான். அதுக்கப்புறம்தான் டிஸ்னி வொர்ல்ட் என்ற பெயரில்  1971 இல் ஃப்ளோரிடாவில் கிளை ஆரம்பிச்சது. இப்பப் பலநாடுகளில்  கிளைகள் விரிஞ்சு கிடக்கு!

என்னமோ இதைப் போட்டுக்கிட்டாவே பெரிய புரட்சி என்பது போலெல்லாம் இருந்துருக்கு!

  Rebel without a cause என்ற 1955 வது ஆண்டு திரைப்படமே சாட்சி. எல்விஸ் ப்ரெஸ்லி இன்னும்  கொஞ்சம் மேலே போய்  ஜீன்ஸ் பேண்ட்ஸ், டி ஷர்ட், அதுக்கு ஒத்து ஊத லெதர் ஜாக்கெட்ன்னு போட்டு  இன்னொரு ஸ்டைலைக் கொண்டுவந்தார். (ஜீன்ஸ் வந்தது 1871 லே!  இன்னும் கோயிங் ஸ்டெடி:-)

1959 லே புதுசா  ஒரு  அச்சு மை  கண்டுபிடிச்சாங்க.  ஒரு இடத்துலே மொத்தையா உக்காராம  விரிந்துகொடுக்கும் தன்மைஉள்ள மை. இதனால் சட்டையைக் கழுத்து வழியாப்போடும்போது  விரிஞ்சு கொடுக்கும் துணிக்கு ஏத்தாப்போல இந்த மையால் அச்சடிச்ச படமும் விரிஞ்சு கொடுத்துச்சு.  இப்ப நுணுக்கமான படங்களும் போட்டுக்கலாம் என்பதால்  கூடுதல் மகிழ்ச்சியே!

முந்தியெல்லாம்  ஸ்ப்ரே பெயிண்ட்தான் பயன்படுத்துனாங்களாம் டி சட்டைக்கு. இந்த ஸ்ப்ரே பெயிண்ட் சமாச்சாரம் ஒன்னும் இன்னிக்கு வேற இடத்துலே பார்த்தோம். அதைப்பற்றி பின்னொருநாளில் எழுதறேன். சட்டையே பெரிய கதையால்லே இருக்கு:-)))


இப்படியே டி ஷர்ட் புராணம் விரிஞ்சுக்கிட்டே போகுது. 1913இல் ஆரம்பிச்ச சமாச்சாரம்  எந்தெந்த முக்கிய வருடங்களில் என்ன ஆச்சுன்னு  2013 வரை சுருக்கமா ஒரு சுவரில் அடக்கி வச்சுருக்கு எங்க ம்யூஸியம். படங்களாவே போட்டு வச்சுருக்கலாம் நான், இல்லே!

பெரிய ஹாலின் நடுவில் வச்ச  இந்தத் தடுப்புக்கு எதிரில் வச்ச இன்னொரு தடுப்புச்சுவர்(!)  சட்டையில் போட்ட விதவிதமான படங்களைக் காமிக்குது.


ரெண்டு  டி சட்டை ப்ரேமிகள்,  (T Shirt Enthusiasts   Julien Potart and Dimitri Pailhe  )மூணு வருச காலம் எடுத்து  தயாரிச்ச டி ஷர்ட் கதை   படப்பிடிப்பு,  2011 வது வருசம்  பூர்த்தியாகி  இப்போ ஒரு மணி நேரக் குறும்படமா  வந்துருக்கு. அதை இங்கே காமிச்சுக்கிட்டு இருக்காங்க.  வசதியா உக்கார்ந்து பார்க்க  இருக்கை  எல்லாம் போட்டு வச்சுருக்காங்கன்னாலும் நமக்கு ஏது நேரம்? பார்க்கிங் கூட ஒரு மணி நேரத்துக்குத்தானே எடுத்துருக்கோம்.


தடுப்புக்கு அடுத்த பக்கம் வந்துருக்கோம்.  இங்கே  ரொம்பப் பிரசித்தமான  டிஷர்ட் டிஸைன்களைச் செஞ்சவர்களைப் பற்றிச் சின்னக்குறிப்புடன்.
க்ளென் ஜோன்ஸ் (கிவி. நியூஸிக்காரர்.) இவர்.  Glennz என்ற சொந்தத்தயாரிப்பு . உள்ளூரிலும்  அதிகமான புகழ் உண்டு.


ஐ லவ் நியூயார்க் பார்க்காதவர்களை விரல்விட்டு எண்ணிடலாம். அதுக்குப்பிறகு இந்த வகை ப்ரிண்டுகள்  டூரிஸ்ட்டுகள் அதிகம் போகும் நாடுகளில் காப்பி அடிக்கப்பட்டுச்சு:-)

மேலே படம்: ஒரிஜினலை முதல்முதலா செஞ்ச  மில்டன் க்ளேஸர்.


ரெக் மொம்போஸா இன்னும் ஒரு படிமேலே போய்  சிக்கலான படங்களை வரைஞ்சு தள்ளி அவைகளைச் சட்டைகளில் போட்டு பிரசித்தி அடைஞ்சார்.  நல்ல கடுமையான உழைப்பு. விவரமான படங்கள் இல்லையோ!
அந்தந்த காலக்கட்டத்தில் புகழ்பெற்றவர்களின் முகங்களும் டி ஷர்ட்டில் இடம்பெறத்தவறலை:-)


இப்படிரெண்டு பக்கச் சுவர்களிலும் பார்த்துக்கிட்டேபோகும்போது  டி ஷர்ட் ப்ரிண்டிங் செய்யும் தொழிற்சாலைப்படங்களைப் பார்க்கும்போது சட்னு நம்ம ஜோதிஜி நினைவு வந்துச்சு. ஏன்?எதுக்குன்னு கேட்டாச் சொல்லத்தெரியலை:-)
சில பல சமாச்சாரங்களைப் பார்க்கும்போது  அதில் எதாவது வகையில் சம்பந்தப்பட்ட பதிவர்கள் நினைவு வருவது இப்பெல்லாம் இயல்பா ஆகிக்கிடக்கு.




யானை, பூனை, வடை எல்லாம் பார்த்தால் என் நினைவு உங்களுக்கு வரணுமே!  இல்லைன்னு சொன்னால் நீங்கள் பதிவர் குடும்பத்தில்  இதுவரை சேர்ந்துக்கலைன்னுபொருள்:-)))

ஒரு பெரிய திரையில்  சிலபல டி ஷர்ட் டிஸைன்களை  ஒரு மூணு நிமிசப்படமா தொடர்ந்து காமிச்சுக்கிட்டு இருந்தாங்க. அதுலே ஒரு பூனை கூட வந்துச்சு:-)

மத சம்பந்தமான சமாச்சாரங்களை டிஷர்ட்டில்  போட்டு வைப்பது கொஞ்சம் ஆபத்தானதுதான். பலநாடுகளில் இதுக்கு மக்களின் எதிர்ப்பு இருக்கு. ஒரு கார்ட்டூன் போட்டவங்க கதி என்னாச்சுன்னு தெரியும்தானே?

சில தடை செய்யப்பட்ட ப்ரிண்ட் உள்ள  சட்டைகளும்  இருக்கு என்பதே உண்மை. நியூஸியில் ஏற்கெனவே  ஒரு சட்டையை தடை செஞ்சுருந்தாங்க.  இப்ப   மக்கள் மனசை நோகடிக்கும் விதமா ஒரு டி சட்டையை (Offensive t-shirt in Canterbury Museum exhibition) இங்கே வச்சுருக்காங்க. இதுக்கான மிரட்டல்களை  ம்யூஸியம் பொருட்படுத்தலை. இது கிறிஸ்துவமதம் சம்பந்தமுள்ளது என்பதால்  மெத்தனமா இருக்காங்க போல.  ஆனால் இதை திறந்த வெளியில் வைக்காம, சின்னதா ஒரு தடுப்புகளை வச்சு மறைச்ச  அறை(!)யில்  சுழலும்  கண்ணாடிப்பெட்டிக்குள் வச்சுருக்காங்க.

வேடிக்கை பார்த்துக்கிட்டே இந்தப்பகுதிக்கு நாங்க வந்தபோது இதைக் கவனிச்சோம். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமானது இந்த டிஸ்ப்ளே. அறைவாசலில் ஒரு  ம்யூஸியம் செக்யூரிட்டி  இருக்காங்க. நம்மைப் பார்த்தவுடனே  பதினெட்டு வயசுக்கான சான்றிதழ் தேவைப்படாததால்  உள்ளே அனுமதிச்சவங்க, 'நோ ஃபோட்டோ ப்ளீஸ் ' என்றதை  சரின்னு தலையாட்டி ஏத்துக்கிட்டேன்.

இதை எப்படி வைக்கப்போச்சுன்னு  பலர்  புகார் செஞ்சுருக்காங்கன்னு  சேதி. ஆன்லைனில்  புகார்  கொடுக்கலாமாம். ஆயிரக்கணக்கானவர்கள் புகார் செஞ்சுருக்காங்க இதுவரை.

ம்யூஸியம் டைரக்டர்,  இதுவும் டி ஷர்ட் ஸ்டோரியில்  முக்கிய இடம் வகிக்குது. அதனால்  நல்லது சொல்லும்போது கெட்டதையும் மக்களுக்குச் சொல்லத்தான் வேணும் என்கிறார்.  நியூஸி  chief censor சொன்னபடி செஞ்சுருக்கோம் என்று பதில் சொல்லி இருக்கார்.

New Zealand's  ruled the t-shirt objectionable in 2008 but granted the museum an exemption to display it provided it was kept in a separate space from other exhibits and was age restricted.

இந்த  டிஷர்ட்  கண்காட்சி சுமார் மூணு மாசத்துக்கு  இருக்கு.  ஃபிப்ரவரி 14 முதல்மே மாசம் 10 வரை.  அனுமதிக்கட்டணம் கூட இல்லை. இலவசமே! ம்யூஸியமே கூட  இலவச அனுமதிதான். நம்ம வரிப்பணத்துலேதானே நடக்குது!


ஹாலை ரெண்டு பாகமா தடுப்பு வச்சுப் பிரிச்சதால்  நாலு சுவர்கள் கிடைச்சு, சம்பந்தமுள்ள நிறைய சமாச்சாரங்களை நம்மால் பார்த்துத் தெரிஞ்சுக்கமுடியுது.  பேக்கிங், ப்ரிண்டிங், இதுக்கான ரெஃபரன்ஸ் புத்தகங்கள், ஸ்டிக்கர்ஸ், ஸ்டென்ஸில்ஸ் இப்படி  பலவகை.

மெல்பெர்ன் (அஸ்ட்ராலியா) நகரைச் சேர்ந்த  Eddie Zammit அவர்களின்  சொந்த சேகரிப்பில் இருக்கும் டிஷர்ட்டுகளைத்தான் நமக்குக் கடனாகக் கொடுத்துருக்கார்.இவர்தான்  T-world  என்ற புத்தகத்தின் பதிப்பாளரும் ஆவார்.
அச்சுத்தொழில் முடிஞ்சுபோச்சுன்னு சொல்றது உண்மை இல்லைன்னு சொல்றார்  நம்ம  Eddie Zammit .

நமக்கும்  நம்ம எழுத்து அச்சுலே புத்தகமா வந்துருச்சுன்னா எவ்ளோ மகிழ்ச்சின்னு  நான் சொல்லித்தான் தெரியணுமா என்ன?




நிறையப்படங்கள் இருக்கேன்னு கூகுள்+ இல் ஆல்பமாப் போட்டேன்.ரெண்டு முறை லோடு செஞ்சும்  ஆல்பத்தைக் கண்ணில் காமிக்கமாட்டேங்குது:(

போட்டும். ஒருக்கா ஃபேஸ்புக்கில் போட்டுப் பார்க்கிறேன். வந்துச்சுன்னா இங்கே சுட்டி கொடுக்கலாம்.  கொடுத்துட்டேன்.  ஆர்வம் உள்ளவர்கள் கண்டு களிக்கலாம்:-)




22 comments:

said...

யாருப்பா அது...? இன்னும் எங்க குடும்பத்திலே சேரலை...? வாங்கப்பா... ஹா... ஹா...

படங்களும் தகவல்களும் பிரமாண்டம் அம்மா...

said...

மார்பு முடிகளை மறைக்கும் T Shirtக்கு வயசு இப்போ 102! = நமது மூத்த பதிவர் எந்த விஷயம் என்றாலும் அதை அற்புதமாக எழுதி விடுவார். இது T Shirt இன் தோற்றம், வரலாறு பற்றியது - அது பற்றிய கண்காட்சியைப் பார்த்து நமக்கு சுவையாக எழுதியிருக்கிறார். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி மேடம் Tulsi Gopal

said...

டி சர்ட்டுகளைப் பற்றிய நூற்றாண்டு கால வரலாற்றை உரிய படங்களுடன், வியக்கவைக்கும் செய்திகளுடன் மிகவும் அருமையாக இருந்தது.

said...

திருப்பூரில் ஆய்த்த ஆடைத்துறையில் உள்ள (இங்குள்ள) 95 சதவிகித பேர்களுக்கு இந்தத் தகவல்கள் புதிதாகவே இருக்கும். வியப்பாக உள்ளது.

said...

ஆய்த்த ஆடையைப்பற்றி பதிவு போடும் போது ஜோதிஜி நினைவு வரவில்லை என்றால் எப்படி? யானையைப், பூனையைப் பார்க்கும் போது அவற்றின் பிரியர் உங்கள் நினைப்பு வரவில்லை என்றால் எப்படி?

பேஸ்புக்கில் ஆல்பம் பார்த்தேன். வருட வரிசை கணக்குகள் மலைக்க வைக்கிறது.

said...

T Shirt வயது 102....

எத்தனை தகவல்கள் உங்கள் பதிவில்.....

நன்றி டீச்சர்.

said...

ஒரு T shirt பற்றி இவ்வளவு தகவலா? பிரமிக்க வைத்தது பதிவு. படங்கள் அனைத்துமே அருமை..

said...

டீ ஷர்டுக்கு இத்தனை வயசாயிடுத்தா.எவ்வளவு விதம் எத்தனை வண்ணம். அதிசயிக்கற மாதிரி வரலாறு எனக்கு டி ஷர்ட்னால் சுஜாதாவும் ஜெ....யும் தான் நினைவுக்கு வருகிறார்கள். மே மாசம் வரை இருக்கா. அப்ப வந்தே பார்க்கிறேன். ஏகத்துக்குப் பிரம்மாண்டமா போட்டு இருக்காங்க. படங்களும் பிரமிக்க வைக்கிறது.

said...

ஆண்கள் டி ஷர்ட் போட ஆரம்பிச்சது மார்பு முடியை மறைக்க.பெண்கள்....?இப்போதெல்லாம் அதில் எழுதப் பட்டிருக்கும் கவர்ச்சிகரமான வாசகங்களுக்காகவா?

said...

தேநீர் சட்டைக்குள் இவ்வளவு விவரங்களா.

டிசர்ட்கள் ரொம்ப வசதியானவை. சட்டுன்னு ஒரு ஜீன்ஸ் போட்டுட்டு டிசர்ட் போட்டுட்டா போதும். சல்லுன்னு வெளிய சுத்த ரெடி.

நெதர்லாந்து போறதுக்கு முன்னாடி நண்பன் ஒருவன் பெங்களூர்ல ஸ்வஸ்திக் படம் போட்ட டிசர்ட் பிறந்தநாளுக்குப் பரிசளிச்சான். ரொம்ப அழகான டிசர்ட். எனக்கும் பொருத்தமா இருந்துச்சு.

ஆம்ஸ்டர்டாம்ல ஆனா பிராங்க் முயூசியம் இருக்கு. யுகேல இருந்து ஒரு பதிவர் வந்திருந்தாங்க. பேர் மறந்துட்டேன். அங்க போகனும்னு சொன்னாங்க. நான் பாட்டுக்க அந்த டிசர்ட் போட்டுட்டு மேல ஒரு ஜாக்கெட் போட்டுட்டுப் போயிட்டேன். ஜாக்கட் ஜிப் போடல. டிக்கட் எடுக்குறப்போதான் ஒரு சந்தேகம். இது நாசிகளுக்கு(மூக்கு இல்லை) எதிரானதாச்சே. இங்க ஸ்வஸ்திக் டிசர்ட் போட்டுட்டு வந்திருக்கமேன்னு. கவுண்டர்ல(சாதி இல்ல) இருந்த டச்சுக்காரன் கிட்ட கேட்டேன். அந்த ஸ்வஸ்திக்குக்கு என்ன பொருள்னு கேட்டாரு. எனக்குத் தெரியாதுன்னு சொன்னேன். எதுக்கும் பாத்துக்கோங்கன்னு சொன்னாரு. ஜாக்கெட் ஜிப்பை இழுத்துவிட்டுக்கிட்டு சுத்திப் பாத்தேன். வெளிய வந்து நாலு தெரு தாண்டிய பிறகுதான் ஜாக்கெட் ஜிப்பைத் தொறந்தேன்.

18+ டிசர்ட் டிசைன்களை போட்டோ போடாததை வன்மையாகக் கண்டிக்கிறேன். :)

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

கிடைக்கும் சமாச்சாரம் அப்படி! அதான் பதிவும் பிரமாண்டமா ஆகிருது:-)))

said...

வாங்க ரத்னவேல்.

பகிர்ந்தமைக்கு நன்றி.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ஒரு டி இப்படி நூறு வயசைத் தாண்டிப் போயிருச்சேன்ற வியப்புதான் எனக்கும்!

said...

வாங்க ஜோதிஜி.

அப்ப இந்தத் தகவல்களை உங்கள் சக தொழில் நட்புகளுக்குச் சொல்லுங்க.

உங்களை 'அப்போ' நினைச்சேன்னு சொன்னது சரிதானே:-)))

said...

வாங்க கோமதி அரசு.

எப்படி எப்படி.....ன்னு ஆஹா...ஆஹா....

நான் ரசித்ததை நீங்கள் அனைவரும் ரசிக்கவேணும் இல்லையா!

இன்பம் பொது:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பயனுள்ள பதிவுன்னு சொல்லிக்கலாம், இல்லையா:-)

said...

வாங்க ரமா ரவி.

புத்தகமே போடும் அளவுக்கு அங்கே கொட்டிக்கிடக்குது தகவல்கள்!
அதில் கொஞ்சம் அள்ளிக்கிட்டு வந்தேன், நம்ம வாசகர்களுக்காக.

said...

வாங்க வல்லி.

ஜெ யின் டி ஷர்ட் வாசகங்கள் அந்தக் காலத்துலே பிரபலமாச்சேப்பா!!!

குமுதம் விற்பனை உசந்துக்கிட்டே போனதுக்கு இதுவும் ஒரு காரணமாச்சே:-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

டி வெளி ஆடை ஆனதும், பெண்களும் வசதிக்காக போட ஆரம்பிச்சுட்டோம் என்பதே உண்மை.

இந்தியாவில்தான் இந்த கவர்ச்சி வாசகங்களுடன் இருக்கு. மலினமான வியாபார உத்தி.


இங்கெல்லாம் பொதுவாக அப்படி இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

said...

வாங்க ஜிரா.

ஸ்வஸ்திக் கோலம்கூட வாசலில் போடக்கூடாதுப்பா!

அந்த 18+ ... கூகுளில்
அஃபென்சிவ் டி ஷர்ட் இன் கேண்டர்பரி ம்யூஸியமுன்னு ஆங்கிலத்தில் தட்டுங்கள். கிடைக்கும்.

said...

//யானை, பூனை, வடை எல்லாம் பார்த்தால் என் நினைவு உங்களுக்கு வரணுமே! இல்லைன்னு சொன்னால் நீங்கள் பதிவர் குடும்பத்தில் இதுவரை சேர்ந்துக்கலைன்னுபொருள்:-)))//

ஜனவரி மாதம் சென்னைக்கு ரயிலில் போகும் போதும், வரும் போதும் எங்களின் அருகில் ஒரு அம்மா வந்தாங்க. அவங்களைப் பார்த்ததும் ஏனோ உங்க ஞாபகம் வந்துது டீச்சர்.... என்னவரிடமும் சொல்லிக் கொண்டிருந்தேன். உங்க அக்கான்னு அவங்களைச் சொல்லலாம்...:)

டீ சர்ட் புராணம் சூப்பர்.

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

அரியர்ஸ் எல்லாம் முடிக்கப் போறீங்கபோல!

ரயிலில் வந்த 'என் அக்கா' என்னைவிட ஒல்லியாத்தானே இருந்தாங்க?

யானையோடு போட்டி போட அக்காவால் முடியாது:-)

உண்மையைச் சொன்னால் பதிவர் குடும்ப அன்பு எதோ விட்டகுறை தொட்டகுறைதான்!