Monday, January 04, 2016

என் சொத்து விவரம்!

இந்த புதுவருச ஆரம்பத்தில் உருப்படியா செஞ்ச ஒரு வேலை.... நம்ம நூலகத்தைப் பார்வையிட்டு புத்தகங்களின் பெயர்களை எழுதி வச்சதுதான்.  பிந்தொடரும் பயணங்களில்  வாங்கிய புத்தகங்களையே மீண்டும் வாங்காம இருக்க இது ஒரு முன்னேற்பாடு.




புத்தகக்கடைக்குப்போனதும், பட்டிக்காட்டான் முட்டாய்க்கடையைப் பார்த்தமாதிரி ஒரு பிரமிப்பு வந்துரும் எனக்கு. எதையெதை வாங்கணுமுன்னு நினைச்சுக்கிட்டுப் போனதெல்லாம் அப்படியே மறந்து போயிரும். திருப்பதி வேங்கடவனிடம் இன்னின்ன  சொல்லணுமுன்னு யோசிச்சுக்கிட்டுப்போய்  அங்கே போனதும் எல்லாத்தையும் மறந்து நின்ன காலம் ஞாபகம் வருது. இப்பெல்லாம்  நிக்கவிட்டாத்தானே சொல்றதுக்கு :-(
அதிகமா ஒன்னும் இல்லைதான். இதுலேகூட கடன் கொடுத்த புத்தகங்களை அடிச்சுக்கிட்டுப் போனவங்களும் இருக்காங்க.

பட்டியல் தயாரிப்பு,  தமிழ்ப் புத்தகங்களுக்கு  மட்டும்தான்.

 ஆங்கிலப் புத்தகப் பட்டியலைத் தமிழ்ப்புத்தாண்டு சமயம் செஞ்சு முடிக்கணும்.

பார்க்கலாம். இந்த வருசப்பயணத்தில் என்னோடு நியூஸிக்கு வர யார் யார் தயாரா இருக்காங்கன்னு !

என்ன ஒரு மகிழ்ச்சின்னா இப்போது கைவசம் இருக்கும் எல்லாப் புத்தகங்களையும் வாசிச்சு முடிச்சாச்சு.

இவைகள் இல்லாமல் கணினியில்  வாசிப்புதான்  அதிகம். வலையில் இல்லாத சமாச்சாரமா?


வெள்ளையானை எட்டு பகுதிகள் வாசிச்சு முடிச்சாச். கனமான பொருள் என்பதால்.... நிறுத்தி நிதானமாகத்தான்.

ராயபுரத்தில் இருக்கும் கத்தோலிக் சர்ச் பற்றி இதன்மூலம்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.  போய்ப் பார்க்கணும். நாங்க எப்பவும் சி எஸ் ஐ. சர்ச்சுக்குத்தான் போவது பழக்கம்.




இதுவரை வாசிச்சது கடுகளவு.  வாசிக்க வேண்டியது மலை அளவு. பிரமிப்பா இருக்கு,  முடியுமான்னு!

எனக்கு மட்டுமில்லை, நம் அனைவருக்கும் வாசிப்பு தொடரணுமுன்னு  வேண்டிக்கறேன்.  

சரி. பட்டியலைப் பார்க்கலாம். நம்ம  எஸ் ரா சொன்ன நூற்றில் சிலது(ம்)  இருக்கு என்பதில் மகிழ்ச்சி!

ஆன்மிகம்

சம்ப்ரதாய விரத பூஜாவிதானம்
சிவனருட்செல்வர்
தெய்வத்தின் குரல், 1 2 3 6
தெய்வதேனமுது
பகவத்கீதை
பாகவதம்
ஸ்ரீவிஷ்ணுசகஸ்ரநாம பாஷ்யம்
அர்த்தமுள்ள இந்துமதம்  1  & 2
கீதாச்சாரம்... பிரபுபாதா
தென்கலை  நித்யானுசந்தாநம்
திருக்கைலாயம் த்ரிசனம்
கீதை சொல்லும் பாதை
மஹாபாரதம்
ராமாயணம்
நலம்தரும் நாராயணீயம்
தினம் ஒரு திவ்யப் பிரபந்தம்
பாடிக்களித்த 12 பேர்
ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம்- கிரி பப்ளிகேஷன்ஸ்
ஹிந்துமதம்
ப்ரம்மா
மஞ்சுநாதர் கோயில் கத்ரி
மங்களாதேவி மங்களூர்
கோகர்ணா தலபுராணம்
ஸ்ரீரங்கம்  டெம்பிள்
அபிராமி அந்தாதி
லார்ட் ஸ்ரீ அநத்தேஸ்வரா உடுபி
தியாகராஜ  கீர்த்தனைகள் 2 புத்தகங்கள்
ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் பொருள்  வேளுக்குடி
திருநீர்மலை தலவரலாறு
திருப்பாவை
திருமலை திருப்பதி  தலபுராணம்
சுப்ரபாதம்    பெரிய எழுத்து ப்ரிண்ட்
தன்னையறியும் விஞ்னானம்  பிரபுபாதா
க்ருஷ்ணா.  ப்ரபுபாதா
குந்தி மஹாராணியின் போதனைகள்
பத்துமலை  தலப்புராணம்
திருக்கண்டியூர்
நாதன்கோயில்  நந்திபுரவிண்ணகரம்
108 வைணவ திருத்தல மகிமை நர்மதா பதிப்பகம்
ஸ்ரீவைஷ்ணவம்
--------------------------------------------------------------------------
பாரதியார் கவிதைகள்
திருக்குறள் தெளிவுரை
========================

அசோகமித்ரன்

மானஸரோவர்
1945 இல் இப்படியெல்லாம் இருந்தது
கரைந்த நிழல்கள்
=========================

தமிழ்வாணன்

மச்சங்களும் அதன் பலன்களும்
வீட்டு விஷயங்கள்
செலவில்லாத வைத்தியம்
ஸ்வீட் வகைகள்
பலகாரவகைகள்
அவசியமான 600 மருத்துவக்குறிப்பு
உடல்பருமனைக்குறைக்க சுலபமான வழிகள்
சத்துள்ள காய்கறி பதார்த்தங்கள்
வயிற்றுக் கோளாறுகள்
விதவிதமான முட்டைச் சமையல்
உடல்நலக்குறிப்புகள்
வீட்டுக்குறிப்புகள்
கனவுகளுக்குப் பலன்
ஊறுகாய் வகைகள்
-----------------------------------------------------

சமைத்துப்பார்  1,2,3
===========================
பாலகுமாரன்

இரும்புக்குதிரைகள்
துளசி
மாலை நேரத்து மயக்கம்
புருஷவதம்
கரையோர முதலைகள்
=====================
லா ச ரா

ஜனனி
புத்ர
கல் சிரிக்கிறது
சிந்தாநதி
கங்கா
கழுகு


----------------------------------------
ஜானகிராமன்

அம்மா வந்தாள்
ஜானகிராமன் சிறுகதைகள் தொகுப்பு  1,2
மரப்பசு
நளபாகம் ஜானகிராமன்
மோகமுள்
மலர்மஞ்சம்
========================

ஜெயமோகன்

வாழ்விலே ஒருமுறை  ஜெ.மோ
ஜெமோ சிறுகதைகள் முழுத்தொகுப்பு
பிந்தொடரும் நிழலின் குரல்
விஷ்ணுபுரம்
காடு

அறம்
இரவு   ஜெமோ
ரப்பர்  ஜெமோ
கன்யாகுமரி  ஜெமோ
ஏழாம் உலகம்
கொற்றவை
============================

ஜெயந்தி சங்கர்

நியாயங்கள் பொதுவானவை   ஜெ
திரைகடலோடி  ஜெ
குவியம்  ஜெ
தூரத்தே தெரியும் வான் விளிம்பு  ஜெ
முடிவிலும் ஒன்று தொடரலாம்  ஜெ
திரிந்தலையும் திணைகள்
பெருஞ்சுவருக்குப்பின்னே   ஜெ
வாழ்ந்து பார்க்கலாம்  ஜெ
நெய்தல்  ஜெ
மிதந்திடும் சுயபிரதமைகள்   ஜெ
ஏழாம் சுவை  ஜெ
பின்சீட்  ஜெ
மனுஷி  ஜெ
மனப்பிரிகை  ஜெ
நாலேகால் டாலர்  ஜெ
==============================
சுஜாதா

வைரங்கள்
மீண்டும் ஜீனோ
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
கணையாழியின்  கடைசிப்பக்கங்கள்
சுஜாதா கதைகள் 1,2 3
மாயா
வஸந்த் வஸந்த்
ஆதலினால் காதல் செய்வீர் சுஜாதா
கரையெல்லாம் செண்பகப்பூ
ஒரு நடுப்பகல் மரணம்  சுஜாதா
தப்பித்தால் தப்பில்லை சுஜாதா
================
புதுமைப்பித்தன் 

முழுத்தொகுப்பு  103 சிறுகதைகள்
புதுமைப்பித்தன் சிறு கதைகள்
=====================
எஸ்.ரா

துணையெழுத்து  எஸ் ரா
அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது
நெடுங்குருதி  எஸ் ரா *
துயில்  எஸ்ரா
எஸ்ரா கதைகள்
உபபாண்டவம்
மழைமான்  எஸ்ரா

=================
வண்ணதாசன்

ஒளியிலே தெரிவது
முத்துக்கள் 10
சில இறகுகள் சில பறவைகள்  வண்ணதாசன்
மனுஷா மனுஷா   வண்ணதாசன்
கனிவு  வண்ணதாசன்
சின்னு முதல்சின்னு வரை  வண்ணதாசன்
கலைக்கமுடியாத ஒப்பனைகள்  வண்ணதாசன்
உயரப்பறத்தல்  வண்ணதாசன்

=============================
இரா முருகன்

 கதைகள் தொகுப்பு
மூன்றுவிரல் இராமு
ராயர் காப்பி க்ளப்  இராமு

==========================
நீல்கண்ட்

மஹான்
வே ஃபேரர்
Seriously searching Siva  
==========================================
பாலபாரதி

சாமியாட்டம்  பாலபாரதி
அவன்  அவள் அது
ஆட்டிஸம்
துலக்கம்
===============
மதுமிதா


இரவு  
பருவம்
அக்கமஹாதேவி  கவிதை
காலம்

===============
சுந்தர ராமசாமி


ஒருபுளியமரத்தின் கதை  - சுந்தர ராமசாமி
குழந்தைகள் பெண்கள் ஆண்கள் - சுந்தர ராமசாமி
ஜே ஜே சில குறிப்புகள்
=====================================

மற்றும்....  இவை


ராகசிந்தாமணி - பதிவர் சிமுலேஷன்
அடியாள்
மகாபலிபுரம்
மணிக்கொடி  2 பாகம்( ஜோதிர்லதா கிரிஜா)
மழைத்துளி நிலா  விமலா ரமணி

 மதன் ஜோக்ஸ்
பாலங்கள் சிவசங்கரி
 சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது  சிவசங்கரி
மாமியார்   பானுமதி
வாரம் ஒரு தகவல்  தென்கச்சி

சிரிப்போம் சிரிப்போம்
ரிலாக்ஸ் ப்ளீஸ் சுகபோதாநந்தா
அசத்தல் நிர்வாகிக்கு  அற்புதவழிகள்   அருணா சீனிவாசன்
கிளிமுற்றம்  இரா வசந்தகுமார்
யதாஸ்தானம்

கொல்லனின் 6 பெண்மக்கள் -  கோணங்கி
வனங்களில் விநோதங்கள்  லதானந்த்
வாடிவாசல் - சி சு செல்லப்பா
உருள்பெருந்தேர்

ஸி ஐ டி சந்த்ரு -  தேவன்
சீனுப்பயல் - தேவன்
மல்லாரிராவ் கதைகள்- தேவன்
சொல்லாததும் உண்மை  ப்ரகாஷ்ராஜ்
மலரும் உள்ளம்  1 & 2

விக்கிரமாதித்தன் கதை
 வினாவிடை  க்ருபானந்த வாரியார்
ஒப்பனையில் ஒளிர்ந்திடும் தமிழகம்  முருகேசபாண்டியன்
வாடாமல்லி   சு.சமுத்திரம்
சிந்திப்போம் சிந்திக்க வைப்போம்

துளசிதளம் எண்டமூரி
மீண்டும் துளசி   எண்டமூரி
பிரமலைக்கள்ளர் வாழ்வும் வரலாறும்
சோதனையும் சாதனையும்
தொல்காப்பியப் பூங்கா

ஓநாய் குலச்சின்னம்  (தமிழாக்கம். சி. மோகன்)
அலையோசை  - கல்கி
தமிழ்ப் பழமொழிகள்  தொகுப்பு - கி வா ஜ
 சுப்ரமணியராஜூ கதைகள்
கிருஷ்ணன்நம்பி ஆக்கங்கள்

கிருஷ்ணப்பநாயகர் கௌமுதி
சாப்பாட்டுக் கடை  கேபிள் சங்கர்
சாப்பாட்டுப் புராணம்  சமஸ்
நகரத்தின் கதை  (சிங்கை சித்ரா ரமேஷ்)
லிண்ட்ஸே லோகன்  ஒய்ஃப் ஆஃப் மாரியப்பன்  வா. மணிகண்டன்

நிலவொளியில் பனித்துளிகள்
கடவுளின் காலடிச்சத்தம் - சங்கரநாராயணன்
மனக்குப்பை  சங்கரநாராயணன்
முன்னணியின் பின்னணிகள் -  சங்கரநாராயணன்
டாலர் நகரம் - ஜோதிஜி

இருவாட்சி  இலக்கிய த் துறைமுகம்
நகர்வலம்   ஞாநி
சரிதாயணம் - பாலகணேஷ்
ஆரண்யநிவாஸ் - ராமமூர்த்தி
Maori Myth

பல்லவர் காசுகள்
நாயக்கர்  கால காசுகள்
டிசம்பர் தர்பார்   எல்லே ராம்
என் பெயர் ரங்கநாயகி
கருங்கல் கோட்டை சிங்கராயன் கதைகள்

அவனும் இவனும்
பலநேரங்களில் பலமனிதர்கள் - பாரதிமணி
துளசிமாடம்-  நா.பா.
நான் வித்யா  - வித்யா
தலைகீழ் விகிதங்கள்-  நாஞ்சில்நாடன்

இப்போது அலை  இங்கு வருவதில்லை -  கிருஷ்ணன் ரஞ்சனா
கூப்பிடுவது எமனாக இருக்கலாம்  - வாமு கோமு
செவக்காட்டுமக்கள் கதைகள் - கழனியூரான்
ரதிப்பெண்கள் திரியும் அங்காடித்தெரு - எழில்வரதன்
ஊர்க்கதைகள் - நீலகண்டன்

கோபல்ல கிராமம் - கி.ரா
 கோபல்ல கிராமத்து மக்கள் - கி.ரா
கோணல்பக்கங்கள்  - சாரு
கிராமங்கள் பேசுகின்றன
ஜன்னலொட்டி அமரும் குருவிகள் - நாகரத்தினம் கிருஷ்ணா

தமிழா
பிரதாபமுதலியார்  சரித்திரம்
நல்லா எழுதுங்க நல்லதையே எழுதுங்க
கள்ளம் - தஞ்சை பிரகாஷ்
அடைமழை - ராமலக்ஷ்மி
இலைகள் பழுக்காத உலகம் - ராமலக்ஷ்மி

வாழ்வின் விளிம்பில் ஜி எம் பாலசுப்ரமணியன்
சோளகர் தொட்டி - பாலமுருகன்
காலம்
விந்தைக்கலைஞனின் உருவச்சித்திரம்
காலங்காலமாய்  சா.கந்தசாமி

அள்ள அள்ள  பணம்
நாளை பிறந்து இன்று  வந்தவள்
மூலிகைகலைக் களஞ்சியம்
பூமியின் பாதிவயசு
புலிநகக்கொன்றை

என் நிலைக்கண்ணாடியில் உன்முகம் சொக்கன்
வசந்த மேகம் -லக்ஷ்மி
தசாவதாரம்  - பொன்னம்மாள்
Transcendence  Dr. Abdul kalam


PIN குறிப்பு: 1  தமிழ்வாணன் புத்தகங்களான்னு  நினைப்பவர்களுக்கு:  இவையெல்லாம் 1978 இல் பூனா வாழ்க்கையில் வாங்கியது. அப்பெல்லாம் VPP யில் புத்தகம் வாங்கிக்கலாம்.

2     ஐயோ   பாவம்..... இவ்ளோதானான்னு நினைப்பவர்கள் புத்தகங்களை  எனக்கு  அனுப்பலாம்.
===========================================



13 comments:

said...

அடேயப்பா!!!.. இவ்ளோ இருக்கா!?

இப்படிக்கு,
இன்னொரு ஐயோ பாவம் ;-)

said...

உங்க புத்தகப் பட்டியலைப் பார்த்தபின்
நானும் ஒரு பட்டியல் போடலாமா என்று
நினைத்து அலமாரியைத் திறந்தபோது
பத்து பதினைந்து வருசத்திற்கு முன் வாங்கிய
புத்தகங்கள் இன்னும் புது வாடை நீங்காது
முதல் பக்கம் கூட படிக்காத நிலை கண்டேன்.

இது என்ன அதிசயம் ?
அந்த அனந்த பத்மநாபனை எழுபது வருடங்களாகப்
பார்த்துக்கொண்டு இருந்தாலும்
முழுக்கவா பார்க்க முடிந்தது ? உணர முடிந்தது ?

தோள் கண்டார் தோளே கண்டார் என்பது போல்
ஆங்காங்கே தான் எல்லோருமே
நின்று கொண்டு இருக்கிறோம்.

லைப்லே அடுத்த படி வைக்கவே இல்லையே என்று தோன்றியது.

சுப்பு தாத்தா.

said...

உங்க சொத்துலாம் என் பேருக்கு எழுதி வச்சிடுங்க துளசிம்மா!

said...

சொத்து விபரம்னதுமே இதான்னு நினைச்சுட்டு/புரிஞ்சுட்டு ஓடோடி வந்த என்னை ஏமாத்தலை நீங்க. உயில் எழுதும்போது கணிசமா எனக்கு ஒதுக்கும்படிக் கேட்டுக்கறேன். :) ம்ம்ம்ம்ம், நானும் ஒரு லிஸ்ட் எடுக்கணும்; ஆனால் வெளியிட்டேன்னு வைச்சுக்குங்க, அங்கே, இங்கேனு ஓடோடி வந்து கேட்காமலே எடுத்துட்டுப் போயிடக் கூடிய சாத்தியங்கள் உண்டு. அசோகமித்திரன் (சித்தப்பா) நாவலில் பதினெட்டாவது அட்சக்கோடு, ஒற்றன் என்னிடம் கூடுதல் சேர்ப்பு. தேவன் கலெக்‌ஷனும் உண்டு. கல்கி கலெக்‌ஷனில் அலைஓசை எங்கேயோ போயிடுச்சு! :(

said...

உங்களுக்கு சொத்து விபரம் அப்படின்னு தெரிஞ்ச உடனே.... !!!!!

பார்த்தா புஸ்தக குவியல்.

கீதா அம்மா,
எங்கிட்ட வேதார்த்த பத மஞ்சுஷா அப்படின்னு 1926 லே வெளிவந்த ஒரு கிரந்த புஸ்தகம் இருக்கு. உபநிஷத், வேதங்கள் லே வர வார்த்தைகளுக்கு, இன்னா அர்த்தம், அதனோட மூலம் என்ன, இன்னிக்கு அந்த அதே அர்த்தத்திலே இருக்கிற சொல் என்ன அப்படின்னு எல்லாம் ...
all the books mentioned in the first aanmeekam category.

உங்களுக்கு வேணுமா...
இல்ல...
பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம்,
கள்வனின் காதலி எல்லாமே இருக்கு.
இங்க்லீஷ் லே
க்ஷேச்பி அய்யர் எழுதிய மேக்பெத், கிங் லியர், ட்வெல்வ்த் நைட்,
கீட்ஸ் வர்ட்ச்வோர்த் எழுதிய எல்லா கவிதையும்.
ஹிந்திலே அமிதாப் பச்சன் அப்பா ஹரிவம்ஸ் ராய் எழுதிய அத்தனை கவிதையும்
மைதிலி ஷரன் எழுதிய ஊர்மிள விரஹ கான்.
வால்மீகி ,வியாஸ் எழுதிய ராமாயணம், மகாபாரதம்,

எழுத்தச்சன் எழுதிய உரை ப்ரபந்தம்.
ஆதி சங்கர் எழுதிய பிருஹத் நாராயண உபநிஷத், உரை.
கண்ணதாசன் எழுதிய கனக தாரா ஸ்தோத்ரம் தமிழ் , மற்றும், பஜ கோவிந்தம்.
இத்யாதி, இத்யாதி...

ஆனா,
எல்லாவத்தையும் விட முக்கியமா,
துளசி கோபால் எழுதிய கோவில்கள் முக்கியமா திவ்ய தேசம் பெருமாள் கோவில்கள், சம்பந்தமான பதிவுகள் எல்லாவற்றையும் தனியா பத்திரப்படுத்தி டிரைவ் லே இருக்கு.

என்னிக்காவது என் பேரப்புள்ளைங்க படிப்பாங்க அப்படின்னு ஒரு ஹோப் இருக்குது.

சுப்பு தாத்தா.




said...

பட்டியல் போடும் அளவுக்குப் புத்தகங்கள் இல்லை நான் வாசித்ததெல்லாம் லைப்ரரியில் இருந்து எடுத்து வந்ததுதான் மேலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள பல எழுத்தாளர்களின் படைப்புகளை பத்திரிக்கையில்தான் வாசித்திருக்கிறேன் இருக்கும் புத்தகங்கள் எல்லாமே நீங்கள் வாசித்து முடித்து விட்டீர்கள் என்பது ஆச்சரியமளிக்கிறது

said...

அக்கா
எனக்கும் படிப்பது உயிர். னூலகம் இருந்த போது படிப்பேன் .ஆனா இங்க னூலகம் மும் இல்ல.ஆனா தமிழ் சங்கத்துல இருக்கு வாரத்துல ஒரு நாள் மட்டும் 2 மனி நேரம் அதனால் போவது இல்ல.

said...

Great collections .

said...

பொஸ்தக லிஸ்ட்டையே வாசிக்க முடியல. நான் எப்ப பொஸ்தகத்தை வாசிக்கிறது? ஹூம் அடுத்த ஜனமத்தில பார்க்கலாம் !

said...

நீண்ட பட்டியல்.....

என்னிடம் இருக்கும் புத்தகங்களின் பட்டியல் எடுத்ததில்லை. :) சில இங்கேயும் சில புத்தகங்கள் தமிழகத்திலும்! :)

தற்போதெல்லாம் அதிகமாக வாசிக்க முடிவதில்லை. மீண்டும் வாசிக்கத் துவங்க வேண்டும்.

said...

இந்தச் சொத்துக்கெல்லாம் என்ன வாரிசா எழுதி வெச்சுருங்க டீச்சர் :)

கல்வி கரையில. கற்பவர் நாள்சிலன்னு புலவர்கள் சொன்னது எவ்வளவு உண்மையா இருக்கு. இந்த மாதிரி நான் பட்டியல் போட்டா ஒத்துப் போறது மூனு நாலு புத்தகங்கள்னு நெனைக்கிறேன்.

சிவனருட்செல்வர்
அறம்
கோபல்ல கிராமம்
கோபல்லபுரத்து மக்கள்
புருஷவதம்
அம்மா வந்தாள்
நளபாகம்
உபபாண்டவம்
புதுமைப்பித்தன் சிறுகதைகள் - இருக்குன்னு நெனைக்கிறேன். படிச்சதில்ல.
மதன் ஜோக்ஸ்
மாமியார் - பானுமதி
மல்லாரிராவ் கதைகள்
பாலங்கள்
வாடாமல்லி
அலையோசை

அட.. மூனு நாலுன்னு நெனச்சேன். இத்தன வந்துருச்சே :)

said...

ஜெயகாந்தன் காணோமே !!

said...

கனமாக இருக்கின்றன.