Friday, March 04, 2016

Puzzle Queen ஐஸ்வர்யா!!!!

எனக்கு ஐஸ்வர்யாவைத் தெரியுமுன்னு சொல்றதா தெரியாதுன்னு சொல்றதான்னு  இன்னும் விளங்கலை!

ஒருநாள் தோழியிடம் பேசிக்கிட்டு இருந்தப்பப் பேச்சு வாக்கில் ஐஸ்வர்யாவைப் பத்திச் சொன்னாங்க.   அர்ஜுனன் போல ஒற்றை நோக்குன்னும் சொல்லக்கூடிய  'கவனம் சிதறாத மக்கள்' பிரிவில் இருக்கும் ஐஸ்வர்யாவின் திறமை என்னன்னா....  பஸில் செய்யறது. செய்யறதுன்ற சொற்பிரயோகமே  சரி இல்லை.  அகராதியைக் கேட்டால்...

puzzle : புதிர் , தடுமாற்றம் , குழப்பம் , திகைப்பு , மலைவு , சிக்கலான பிரச்சனை , திறமையை அல்லது பொறுமையைச் சோதிக்கும் பொம்மைப்பொறி , குழப்பு , புதிரிடு , மலைவுறுத்து , குழப்பமுறு .

இப்படியெல்லாம் சொல்லி நம்மைக் குழப்பி விட்டுருது :-)


போகட்டும். புதிர் என்பதை ஓரளவு  சரியானதுன்னு  எடுத்துக்கறேன். இல்லே ... பேசாம பஸிலை puzzle என்றே சொல்லிப்போனால்தான் என்ன?

எப்பேர்ப்பட்டக் கடினமான puzzle என்றாலும் சுலபமாப் போட்டுருவாங்களாம்!  அடுத்து வந்த இந்தியப் பயணத்தில் ரெண்டு puzzle வாங்கிப்போய்த் தோழியிடம் கொடுத்து ஐஸ்வர்யாவிடம் சேர்த்தாச்சு.  இப்படியே ஒரு சில பயணங்களில் தொடர்ந்த நினைவு.


அந்தக் காலக் கட்டத்தில்தான்  மயிலுக்கு ஆசைப்பட்டு முழி பிதுங்குச்சு எனக்கு. அதையும் இங்கே நம்ம துளசிதளத்தில் போட்டு வச்சேன்:-)



அதுக்குப்பிறகும் பழியைத் தூக்கி பஸிலில் இன்னொருக்காப் போட்டேன்:-)



 ஒரு வருசம் திண்டாடித் தோல்வியை மரியாதையா ஒப்புக்கொண்டு  மயிலை  வாரிக்கொண்டுபோய் தோழி மூலம் ஐஸ்வர்யாவிடம் சேர்த்தாச். அடுத்து வந்தநாட்களிலே இப்படி ஒரு படம் அனுப்பி வச்சாங்க தோழி!

ஹைய்யோடா.........
ஐஸ்வர்யாவின் திறமையைப் பாராட்ட  வார்த்தைகளே இல்லாமப்போச்சு என்பதே உண்மை!  இதை நல்லாப் புரிஞ்சுக்கிட்ட பெற்றோரும் அவுங்க ஈடுபாடு கொண்டுள்ள Chennai Autism Support Groupமாச் சேர்ந்து ஐஸ்வர்யாவின் பஸில்களின் படங்களை அஞ்சு வருசமாக் காலண்டர்களாப் போட்டுக்கிட்டு இருக்காங்க(ளாம்).

எனக்குத் தோழிதான் சொன்னாங்க. 'இந்த வருசக் காலண்டரில் முதல் படமே உங்க மயில்தான்'னு!




என்ன ஒரு இன்ப அதிர்ச்சி!

Fund raising activity என்பதால் சொல்லி வச்சு ஒன்னு வாங்கியாந்தோம். தோழிதான் வாங்கி வச்சுருந்தாங்க.
தனித்தனிப் படங்களா 12 மாசங்களுக்கும் போட்டு,  முதல்பக்கத்துலே ஐஸ்வர்யாவைப் பற்றிய  சிறு குறிப்புகளோடு அட்டகாசமா இருக்கு காலண்டர்!








 அடடா.....  பேசாம இந்த யானையை முதல் மாசத்துக்குப் போட்டுருக்கலாம்!!!!








Puzzle  Queen என்ற பட்டம் ரொம்பவே பொருத்தம் தான். ஜஸ்ட் ஒரே வாரத்தில் 1000 துண்டுகளை அனாயாசமாப் போடும் ஐஸ்வர்யா,   இப்போ 1500 துண்டுகள் உள்ள பஸில் செய்யறாங்களாம்.

அம்மாடியோவ்!!!!!

20 comments:

said...

இந்த மாதிரி பசில்களை வடிவமைப்போர் பற்றி என்ன சொல்வது ஐஷுக்குப் பாராட்டுக்கள்.

said...

இவங்களைப்பத்தி ஒரு பத்திரிகையிலும் வாசிச்ச ஞாபகம். பஸில்களைப்போடும் திறமைக்காகவே இவங்களைப்ப்பத்தி ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தாங்க.

said...

வியக்க வைக்கும் திறமை. என் வீட்டில் கூட இப்படி போட முடியாமல் ஒரு லோட்டஸ் டெம்பிள் பசில் உண்டு! :)

said...

ஐஷ்வரியாவிற்கு வாழ்த்துகள், பாராட்டுகள். எப்படிப்பட்ட திறமை! வியக்க வைக்கிறது.

said...

பாராட்டத்தான் வேண்டும்.

said...

ஐஷி மத்தவங்களுக்கு செய்முறை விளக்கப் பாடமாவே எடுக்கலாம். என்ன ஒரு திறமை துலசி. மிகப் பெருமையா இருக்கு. வாழ்க வளமுடன்.

said...

Wow!! Awesome .amazing talent ..Congrats to Aishwarya !..
அக்கா இங்கே மகளோட வயலின் டீச்சர் வீட்டில் பார்த்தேன் கல்யாண போட்டோவையே 1500 பசில்சாக்கி ஒட்டியிருக்காங்க !
என் நாத்தனார் குடும்பம் இதில் எக்ஸ்பெர்ட் !
ஆனா ஐஸ்வர்யா ஸ்பெஷல் சைல்ட் என்னவொரு வியக்கவைக்கும் திறமை .இறைவன் ஆசிர்வதிக்கட்டும் அப்பிள்ளையை

said...

அம்மாடீ... என்னவொரு அசாத்தியத் திறமை.. ஐஷ்வர்யாவுக்குப் பாராட்டுகள். பஸ்ஸில் செட் பார்க்கும்போதெல்லாம் ஆசை வந்தாலும் மயிலால் நீங்க பட்டபாடு நினைவுக்கு வந்துவிட, வாங்குவதைத் தவிர்த்துவிடுவேன் டீச்சர். காலண்டர் முயற்சி அற்புதம்.

said...

ஐஸ்வர்யாவுக்குப் பாராட்டுகள். அவருடைய திறமை மேலும் வளர்ந்து சிறப்படைய வாழ்த்துகள்.

said...

ஐஷ்வர்யாவிற்க்கு சல்யூூட். உங்க மயிலின் அதிர்ஷ்ட்டம் மிகவும் சந்தோஷத்தை கொடுத்தது

said...

வாங்க ஜி எம் பி ஐயா.

பாராட்டுகளுக்கு ஐஸ்வர்யா சார்பில் நன்றி.

said...

வாங்க சாந்தி.

ஆஹா... பத்திரிகையிலா!! பேஷ்பேஷ்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பேசாம லோட்டஸ் கோவிலை ரோஷ்ணி அம்மாவிடம் கொடுத்து வச்சுருங்க. அடுத்த முறை அவுங்களை நான் சந்திக்கும்போது வாங்கிப்போய் ஐஷ்வர்யாவிடம் சேர்த்தால் ஆச்சு!

said...

வாங்க துளசிதரன்.

பாராட்டுகளுக்கு ஐஸ்வர்யா சார்பில் நன்றி.

said...

வாங்க ஸ்ரீராம்.


பாராட்டுகளுக்கு ஐஸ்வர்யா சார்பில் நன்றி.

said...

வாங்க வல்லியம்மா.

அபாரத் திறமைப்பா!

said...

வாங்க ஏஞ்சலீன்.


பாராட்டுகளுக்கு ஐஸ்வர்யா சார்பில் நன்றி.

படங்களைப் பஸில் ஸ்டைலில் வெட்டவும் ஒரு மெஷீன் இருக்கேப்பா!

said...

வாங்க கீதமஞ்சரி.

ஆமாம்ப்பா... மயிலால் பட்ட மன அழுத்தம் கொஞ்சநஞ்சமில்லை! அதைப் பார்வையில் இருந்து மறைச்சபிறகுதான் கொஞ்சம் நிம்மதி ஆச்சு.

மகள் நம்மோடு இருந்த காலக்கட்டத்தில் நிறைய பஸில்களை சேர்ந்தே செஞ்சுருக்கோம். இதுலே பசங்க ரொம்ப ஷார்ப்:-)


பாராட்டுகளுக்கு ஐஸ்வர்யா சார்பில் நன்றி.

said...

வாங்க ஜிரா.


பாராட்டுகளுக்கு ஐஸ்வர்யா சார்பில் நன்றி.

said...

வாங்க சசி கலா.

ஆஹா.. அதிர்ஷ்டமயில் !!!


பாராட்டுகளுக்கு ஐஸ்வர்யா சார்பில் நன்றி.