Friday, November 03, 2017

முன்னழகுக்குச் சளைக்கலை பின்னழகு!!(இந்திய மண்ணில் பயணம் 71)

இருவர்ன்னு தப்பாக் கணக்குப் போட்டுட்டேன்.  உண்மையில் மூவர் !  கடையின்  உள்ளே போனால், 'எப்பம்மா  இந்தியா   வந்தீங்க? ஸார் வரலையான்னு ' கேள்விகளோடு நம்ம ஸ்ரீதர்!  சின்னப்பேச்செல்லாம் ஆனதும், 'பெருமாள் தரிசனம் ஆச்சா?  கூட்டிட்டுப்போகவா?'ன்னார். அதெல்லாம் நேத்தே ஆச்சுன்னேன்.
புதுசா என்ன வந்துருக்கு இப்போன்னதுக்கு  பழசு ஒன்னு வந்துருக்குன்னார்!  ஸ்ரீதர், கோவில் கடையில் ஸ்வாமி  விக்கிரஹங்கள் விக்கறதோட ஒரு ஆன்ட்டீக்  டீலரும் கூட!  நல்ல கலெக்‌ஷன்ஸ் எல்லாம் வச்சுக்கார்.

பார்க்கலாமான்னதும்,  கடைக்குள் இருக்கும் இன்னொரு அறைக்குள் இருந்து  கொண்டு வந்து  கையில் கொடுத்தார்!  இங்கெதான்   அந்த  மூவர்!
சின்ன உயரம்தான்! ஆனால் அற்புத அழகு!   காளிங்க நர்த்தனமாடும் கண்ணனின் இடுப்புச்சரம் பார்த்து அசந்துதான் போனேன் .  கிருஷ்ணன் கையில் வெண்ணை உருண்டையுடன்! பாம்பு வாலைப் பிடிச்சுக்கிட்டே ஆட்டம். ஆடிக்கிட்டே தின்னணுமாமே!  தலையில் ரெண்டு பக்கமும் பிரபை கூட இருக்கு!
இடுப்புச் சங்கிலியில் கோர்த்த சலங்கைகள் ஒவ்வொன்னும் தனித்தனியா   இருக்கு பாருங்க!  ஹைய்யோ!!!!
தலை உச்சியில்    'க்ருஷ்ணகொண்டை' வேற !!!


 இன்னொருத்தர் லக்ஷ்மியும்   நாராயணருமா இருவர் !
 
இடதுமடியில் லக்ஷ்மி கையில் தாமரை மலருடன்! நாராயணன் காலில்  ஓப்பன் ஷூ !
அஞ்சுதலை ஆதிசேஷன் குடை பிடிக்கறார்!  கண்ணெல்லாம் குறுகுறுன்னு நம்மையே பார்க்குது!

சேஷனின் பின்பக்கம் ஹைய்யோ!!!!
"உங்க கலெக்‌ஷனுக்கா இல்லை விக்கறீங்களா?"

கொஞ்ச நேரம் யோசிச்சவர்,  'உங்களுக்கு  வேணுமா ? எடுத்துக்குங்க' ன்னார்!

"விலை எவ்வளவுன்னு சொல்லுங்க. நம்ம பட்ஜெட்லே அடங்குதான்னு பார்க்கலாம்."

 "அதெல்லாம்  வேணாம். நீங்க எடுத்துட்டுப் போங்க"

எனக்கு  ரெங்கன் கொடுத்த பிள்ளை இவர்!  எப்போ?  எப்படி?

கடை பெயரே கோபால் & சன்ஸ் தான் :-)

ஐம்பொன் உருவங்கள்.  காலத்தால் இப்படிக் கருப்பாகிக்கிடக்கு.  கொஞ்சம் தேய்ச்சால்  பளபளப்பு வந்துருமுன்னு    லேசா, கொஞ்சம் அழுத்தமா  தேய்ச்சதும்  சலங்கை மின்னுச்சு.


க்ருஷ்ணா, நீ நியூஸிக்கு வர்றே........

அவர்   தயக்கத்தோடு ஒரு விலை சொன்னார்.  அதில் கொஞ்சம் குறைச்சுக்கிட்டு  நான் ஒன்னு சொன்னேன்!   சட்னு   பக்கத்து டேபிளில் இருந்த  காகிதத்தை எடுத்துப் பொதிஞ்சு  அங்கே கடையில் வச்சுருக்கும் ரெங்கன் படத்துக்கு முன்னால் வச்செடுத்து, சின்னதா ஒரு ஸ்லோகம் சொல்லி என்னாண்டை கொடுத்தார். 

சரின்னு பைக்குள்  காசைத்  தேடினா கொஞ்சம் கம்மியாத்தான் இருக்கு.   நம்ம   ஏடிஎம், திருவந்திக்காப்பு  மண்டபத்துலேன்னா?
நானும் ஸ்ரீதருமா  அங்கே போனோம் !  பணம் பத்தலைன்னதும் பர்ஸை எடுத்துக் கொடுத்தார் :-)   ஒரு பத்து நிமிட் போல அங்கேயே நின்னு மூணு பேருமாப் பேசிட்டுக் கிளம்பி  ஹயக்ரீவா வந்துட்டோம்.

அறைக்குப்போனதும் பொதியைத் திறந்து காமிச்சேன்!  கண்கள் விரிந்தன!!!
என்ன ஒரு நுணுக்கமான கை வேலை, இல்லே!
சரியாச் சொன்னால்    கண்ணன் 5.7 செமீ!    லக்ஷ்மிநாராயணர்  3.8 செமீ தான் !




உள்ளங்கையில் அடக்கிப்பிடலாம்!   அடங்கிக்கிடக்கறாங்க பாருங்க !


ரெண்டு இஞ்சு கூட இல்லாத ஒரு சமாச்சாரத்துலே  என்னெவெல்லாம் இருக்குன்னு  பார்த்துப் பார்த்து  மனசு கூத்தாடுது!

ஒன்னரைக்குக் கீழே போய் பாலாஜி பவனில் சாப்பாடு . மனசு நிறைஞ்சதுன்னு  ஒரு ஃபுல் கட்டு கட்டிட்டேன் :-)  இவுங்க சொந்தத் தயாரிப்பு பருப்புப்பொடி  சூப்பர்!
கொஞ்சம் ஓய்வெடுத்துட்டுக் கிளம்பலாம்.    மூணு மணிக்கு பதிவர் சந்திப்பு!


PINகுறிப்பு: நியூஸி வந்ததும், விக்கிரஹங்களை லேசாச் சுத்தம் செஞ்சு பார்த்தேன்.  பளபளப்பு வருதுன்னாலும்....  கருப்பும் சேர்ந்தே இருக்கட்டும் அதுதான் அழகுன்னு  விட்டு வச்சேன் :-)  படங்கள்  இப்போ முந்தாநாள்  எடுத்தவைதான்.


தொடரும்.......:-)


15 comments:

said...

கைக்குள் அடங்கும் அளவுதான் சிலையின் பரிமாணம் என்பது ஆச்சர்யம் - முந்தைய க்ளோஸ் அப் படங்களைப் பார்த்ததால்!

said...

பெரும்பாலும் சிலைகளின் பின்புறம் மொழுக்குன்னு தான் இருக்கும். இந்த சிலை பின்னாடி பார்க்கவும் நல்லா இருக்கு

said...

சிலை பெரிசு கனம் ன்னு நினைச்சே. ஏமாத்திட்டீங்க but அழகு. நன்றி.

said...

கண்ணனும், லஷ்மி நாராயணனும் கொள்ளை அழகு. அவ்வளவு தத்ரூபம்!!

said...

வாங்க ஸ்ரீராம்.

இந்த ஆச்சரியம் எனக்கும்தான்! :-)

said...

வாங்க ராஜி.

இந்த அழகுதான் வாங்கச் சொன்னது :-)

said...

வாங்க விஸ்வநாத்!

மூர்த்தி சிறிது, ஆனால் கீர்த்தி பெரிது !

said...

வாங்க ரோஷ்ணியம்மா !

என்ன மாதிரி ஒரு வேலைப்பாடு! சுமார் 800 வருசமாம் !

said...

என் நண்பர் ஒருவர் ஒரு வெண்கலச் சிலையை வாங்கி ( அது சற்றே பெரியது ) யூ எஸ்ஸுக்கு போகும் போது சிலை கடத்தல் என்று சந்தேகப்பட்டு விமான நிலையத்தில் கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள் நல்ல வேளை அவரிடம் கடையில்வாங்கியதற்கான ரசீது இருந்தது தப்பித்தார்

said...

ஐயோ...

கண்ணனை கைக்குள்ள அடைக்கீடீங்களே..அழகு...

பின்புறம் ஆதிசேசணும் ...அச்சோ பார்க்கவே ரொம்ப அம்சமாய் இருக்கு...

said...

உள்ளங்கையில் அடங்கும் நுண்ணிய வேலைப்பாடமைந்த சிற்பம். கலையும், ரசனையும், இறைத்தன்மையும் ஒருங்கே காணப்படும் நிலை. அருமை.

said...

நீண்ட நாட்களுக்குப் பின் இங்கு வந்ததற்கு அருமையான காட்சி. கைக்குள் அடங்கிய கண்ணனும், லக்ஷ்மி நாராயணனும். எங்கு எப்போது யாரால் செய்யப்பட்டவையோ? உங்களுடன் நியுஸி வரவேண்டும் என்று காத்திருந்தார்களோ என்னவோ? சூப்பர் துளசி.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

உண்மையான கடத்தல்காரர்கள் இப்படித்தான் பகிரங்கமா தங்கள்கூடவே விமானத்தில் எடுத்துப்போறாங்களா என்ன?

நம்மையும் ஒருமுறை பெட்டிக்குள் (வெடி) குண்டு இருக்குன்னு புடிச்சுட்டாங்க. சின்ன வெங்கலகுண்டு முகம் கொண்டு வந்திருந்தோம் :-)

பயணகாலத்தில் ரசீது எல்லாம் வச்சுருப்பதுதான் நல்லது.

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

அழகுதான்ப்பா. அதான் கூடவே வந்துட்டாங்க :-)

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

முகத்தில் உணர்ச்சிகள் கூடத் தெரியும்படி வடிவமைச்சுருக்காங்க. சின்னச் சிரிப்பு அப்படியே மனசை கொள்ளையடிச்சது உண்மை !