Monday, February 05, 2018

அமெரிக்கா...... இதோ வந்தேன்.... (@அமெரிக்கா... 1 ) (புதிய தொடர்: பகுதி 1)

America.... here I come....


கொஞ்சம் மலிவான விலையில் க்வான்டாஸ் டிக்கெட் கொடுத்துச்சு அமெரிக்காவுக்கு.  அங்கே ஒரு சமாச்சாரம் பார்க்கணுமுன்னு நீண்டநாள் கனவொன்னு  வச்சுருந்தேன். என்ன ஒன்னுன்னா....     நம்மூரில் இருந்து அஸ்ட்ராலியா போய், அங்கிருந்து  அமெரிக்கா போகணும்.      மூக்குலேருந்து வாயைத் தொடப்டாதாம்....  தலையைச்சுத்திக்கிட்டுப்போய்  காதைக் கடந்து வாய்க்கு வரணுமாம்.....

அங்கெயும் நம்ம இந்தியா போலத்தான்..... எங்கே போனாலும் ஒரே  கூட்டம்.......  பள்ளிக்கூட லீவு காலமுன்னா கேக்கவே வேணாம்.....

குளிர் காலம் ஆரம்பமாகுமுன் போயிட்டு வரணும், அதிகக் கூட்டமும் இருக்கக்கூடாது.....    கணக்குப் போட்டுப் பார்த்து (!) ஆகஸ்ட் கடைசி வாரம் கிளம்பிப்போய் .....  'ஸ்டாப்  ஸ்டாப்....  அவ்ளோ தூரம் போயிட்டு உன்னுடைய இன்னொரு கனவையும் சேர்த்தே பார்த்துட்டு வந்துடலாமா'ன்னார் நம்மவர்.

பழம் நழுவி.... பாலில்....   ஓக்கே..... செப்டம்பர்  முதல் ரெண்டு வாரமுன்னு சேர்த்தால் மொத்தம் மூணு வாரம் சரியா?  டபுள் ஓக்கே!

முதல் வேலை முதலில்..... ரஜ்ஜுவுக்கு  இடம் கிடைக்குமான்னு பார்த்துட்டு, அங்கே சரின்னதும், இங்கே டிக்கெட் புக் பண்ணியாச் :-)

ரொம்ப விஸ்தாரமா எழுதப்போறதில்லை.....  கொஞ்சம் படங்களால் மட்டுமே கதை நகருதான்னு பார்க்கலாம் இந்த முறை.... :-)

  (நினைப்புதான் பொழப்பைக் கெடுக்குதோ!)
காலை ஆறுமணிக்கு  அஸ்ட்ராலியா ஸிட்னி ஃப்ளைட். நாலரைக்கு  ஏர்ப்போர்ட் போய்ச் சேர்ந்தோம். ஆன்லைன் செக்கின் பண்ணிக்கறதால்.... கொஞ்சம் ஈஸிதான். விமானத்துக்குள்ளே ஸீட்டிங்தான் கொஞ்சம் படுத்தல். நாப்பத்தியெட்டு மணி நேரத்துக்கு முன்னால்தான்  சைட்டே ஓப்பன் ஆகுது. கண்குத்திப் பாம்பா இருந்தாலும்...  நாம் சைட்டுக்குள்ளே போகும்போதே  நல்ல ஸீட்ஸ் எல்லாம் Gகான்!

இதுலே ஏதோ ச்சீட்டிங் இருக்குன்னு எனக்குத் தோணல்.....  சில சமயம் ப்ளேனுக்குள்ளே போனபிறகு பார்த்தால்  வலையில் ஏற்கெனவே போயிருச்சுன்னு சொன்ன இடங்கள் எல்லாம் ஆளே இல்லாமல் காலியாத்தான் கிடக்குக் கடைசி வரை... ப்ச்....
நம்மூரில் இருந்து ஸிட்னி  ஒரு  மூணரை மணி நேரம்தான்.  பரவாயில்லை. அதுவும்  மேற்கே போறதால்.... நேர வித்தியாசத்தையும் சேர்த்துப் பார்த்தால்....  இங்கே ஆறு அஞ்சுக்குக் கிளம்பி ஏழு நாப்பதுக்கு (ஆஸி டைம்) போயிருவோம்.  அங்கே ரெண்டு மணி நேரக் காத்திருப்பு.  ஒன்பது  நாப்பதுக்குக் கிளம்பினால்.....  காலை   அஞ்சு நாப்பதுக்கு   ( லாஸ் ஏஞ்சலீஸ் நேரம்) எல் ஏ. போயிருவோம். ஒரு பதினாலு மணி நேரம்.

இங்கே இறங்கி  இமிக்ரேஷன் எல்லாம் முடிச்சுட்டு, இன்னொரு ஃப்ளைட் (இதே க்வாண்டாஸ்தான்) பிடிச்சு எல் ஏ வழியா,     நியூயார்க் போற டிக்கெட். நேராப் போக முடியாதாமே....  நாட்டுக்குள்ளே நுழைஞ்சதும் இமிக்ரேஷன் முடிக்கணுமாம்.

நமக்கு  பார்க்க வேண்டிய  கவர்ச்சி சமாச்சாரங்களில் பாதி  இங்கே இந்தப் பகுதியில் தான் இருக்கு என்பதால்  ப்ளேன் கம்பெனி கொடுக்கற ஸ்பெஷல்ஸ் டிக்கெட்டில்  ஒரு இடைவெளி விட்டுக்கறோம்.  போகும்போது மட்டும்தான். திரும்பும்போது  (பெரிய) ஆப்பிளில் இருந்து கிளம்பி,  நேராக்  கிவி ஃப்ரூட்ஸ்க்கு  வந்துருவோம்.
மத்த உள்ளூர், வெளியூர் பயணங்களுக்கெல்லாம் அந்தந்தப் பகுதியில் இயங்கும் விமானக்கம்பெனிகளில் தனித்தனியா டிக்கெட்ஸ் புக் பண்ணிக்கணும். அதுவும் ஆச்சு.

   எங்க ஊரில் இருந்து (கிறைஸ்ட்சர்ச்) சரியா ஆறு அஞ்சுக்குக் கிளம்பி இதோ   ஆஸி (ஸிட்னி) போறோம்.  கிளம்புன ஒரு முக்கால் மணி நேரத்தில் 'கொடுமை' ஆரம்பிச்சது. ப்ரேக்ஃபாஸ்ட் தர்றாங்க. எப்பவுமே க்வாண்டாஸ்லே  சாப்பாடு நல்லாவே இருக்காது. அதுலே  கொடுமையின் உச்சக்கட்டம் இப்போ :-(   பொடேட்டோ ஹேஷ்ப்ரௌன், பொரிச்ச தக்காளி,  வேகவச்ச கீரை. காலங்கார்த்தாலே சாப்புடறதா இது? இந்த அழகுலே இது ஸ்பெஷல் மீல்ஸ் வேற ! ஹிந்து மீல்ஸ்.  அதையும் ஊருக்கு முன்னால் கொண்டுவந்து  வச்சுருவாங்க.  தட்டைத் திருப்பி எடுக்க எப்படியும் ஒரு ரெண்டு   மணி   நேரம் ஆகும். பின்னே எப்படிப்பயணிகளை ஒரே இடத்தில் கட்டிப்போடறதாம்?
நல்ல வேளையா, நம்மவருக்கு இங்கத்து க்ளப் கார்ட் இருப்பதால், வண்டி ஏறுமுன்  ஏர்ப்போர்ட் லவுஞ்சுலே போய் ஜூஸ், ம்யூஸ்லி, தயிர்,  கப்புச்சீனோன்னு உள்ளே தள்ளிட்டதால் தப்பிச்சேன் :-)
வேடிக்கை ஒன்னும் பார்க்க முடியலை.   வெளிச்சத்துலே இருந்து இருட்டு நோக்கிப் போறோமே....   போதாக்குறைக்கு  மழை வேற...  அப்புறம் அங்கே பொழுது விடிஞ்சப்ப மழை இல்லை.  வெயில் வந்துக்கிட்டு இருந்துச்சு. உடனே சில பல க்ளிக்ஸ். கடமையை ஆத்த வேணாமா?
ஸிட்னியில் போய் சரியான நேரத்துக்கு இறங்கியாச்.  ரெண்டு மணி நேரம் போகணுமே....   ஒரு கப்புச்சீனோவைத் துளித்துளியாக் குடிச்சு அரைமணியைத் தள்ளினோம்.  ட்யூட்டி ஃப்ரீயில் ஒன்னும் வாங்கிக்காம வேடிக்கைமட்டும் பார்த்துட்டு,   நம்ம கேட்டுக்குக் கிளம்பிப்போனா....  ஏகப்பட்ட கூட்டம்.
அரைமணி இருக்கும்போதாவது கேட்டைத் திறப்பாங்கன்னு பார்த்தால் எங்கே?  ஒன்பது நாப்பதுக்குக் கிளம்பும்னு போர்டுலே போட்டதைக்கூட மாத்தலே.....  டிலேன்னு  வாய்ச்சொல் மட்டுமே....

அப்படி இப்படின்னு  ரெண்டரைமணி நேரத்தை முழுங்கிட்டு உள்ளே விட்டாங்க.
நமக்கு வேணுங்கற ஸீட்டுக்கு  ஆளுக்கு முப்பது யூ எஸ். டாலரை வாங்கிக்கிது  க்வாண்டாஸ். இதுகூட  மொத்தப் பயணத்துக்கும் இல்லை. ஒவ்வொரு செக்டருக்கும் தனித்தனியாக் கட்டணும்.   இப்ப இப்படி ஒன்னு ஆரம்பிச்சுக்கிட்டு கொள்ளையடிக்குதுங்க இந்த ஏர்லைன்ஸ் எல்லாம்.  இதுலே  சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கொள்ளையில் முதல் இடம். எழுபத்தியஞ்சு டாலர் தரணும் ஒரு ஆளுக்கு :-(  நாம்  பதினாலு மணி செக்டர்களுக்கு மட்டும் புக் பண்ணிக்கிட்டோம்.

  இந்தப்  பதினாலு மணி நேரத்தை எப்படித் தள்ளப்போறேன்னு நினைக்கும்போதே பகீர்.  கொஞ்சம் கதைகளை எல்லாம் பென்ட்ரைவ்லே கொண்டு போயிருந்தேன்.  எங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து  ஒரு  நோட்புக்.
ஆகிவந்த என் பொழுதுபோக்கான  ஃப்ளைட் பாத்  ஓப்பன் செஞ்சால்..... தப்புத்தப்பாக் காமிக்குது.  நேரம் பத்து நாப்பத்தியஞ்சாமே.....   அப்ப அந்த ரெண்டு மணி எங்கே போச்?  விமானம் கிளம்புனதும்  சரியான நேரம் காமிக்குமுன்னு நினைக்கிறேன்.
ஒரு இடம் பாக்கி இல்லாம  நிரம்பிருச்சு!!  சரியான கூட்டம்......
ஒரே ஒரு ஆறுதல்... இந்த விமானம்     ஏ380 வகை. முதல்முறையா இதுலே போறோம்.  மாடி இருக்கு. ஆனால்  நமக்கு  அங்கே  இடம் கிடைக்கலை. இன்னொரு ஆறுதல் இதுலே இருக்கும் ஸ்நாக் பார்.   இவுங்க தரும்  சாப்பாட்டுக் கொடுமைகளில் இருந்து அப்பப்பக் காப்பாத்துனது  இதுதான். அதுவும் நாலு முறை....   ஒவ்வொரு மூணு மணி நேரத்துக்கும்  டான் டான்னு  மணியடிச்சுக் கொடுமை..... ஐயோ...

ஒரு வழியா லாஸ் ஏஞ்சலீஸ்லே இறக்கி விட்டதும்,  கேபின் பேக்ஸ் எடுத்துக்கிட்டு இமிக்ரேஷன் பகுதிக்கு ஓடறோம்.  ஆட்டோமேட்டட் பாஸ்போர்ட் கன்ட்ரோல்னு ஏகப்பட்ட  மெஷீன்ஸ் வச்சுருக்காங்க.  அதுலே போய்  பாஸ்போர்ட்டை நுழைச்சதும்  விவரம் பதிஞ்சுக்கிட்டு நம்மை ஒரு படம் எடுத்து ப்ரிண்ட் பண்ணி சீட்டுக் கொடுத்துச்சு மெஷீன்.
அதை எடுத்துக்கிட்டு   வரிசையில்  போய்  பாஸ்போர்ட்டில்  ஸ்டாம்ப் பண்ணி வாங்கிக்கிட்டுப் பொட்டிகளை எல்லாம் எடுத்துக்கிட்டு ஒரு வழியா வெளியில் வந்தோம். ட்ராலிக்குக் காசு போட்டால்தான் கிடைக்கும். (எங்கூர்லே  எல்லாம் ஃப்ரீ... ஹூம்....)

காலநேரம் ஒன்னும் கணக்குத் தெரியலை. கிழக்கு நோக்கிய பயணம் என்பதால்  டேட் லைன் தாண்டி,  இருபத்தியஞ்சாம்  தேதி கிளம்பி  இருபத்தியஞ்சாம் தேதியே வந்துருக்கோம்.

செல்லங்களுக்கு ரெஸ்ட் ஏரியா & குடிக்கத்தண்ணி வசதி வச்சுருக்காங்க. எனக்கு ரொம்பவே பிடிச்சது!
அடுத்த  ஃப்ளைட் சௌத்வெஸ்ட்  ஏர்லைன்ஸில்.   ட்ராலி உருட்டிக்கிட்டே அந்த டெர்மினலுக்குப் போய்ச் சேர்ந்து  செல்ஃப் செக்கின் பண்ணியாச்.


சரியா சாப்பாடொன்னும் இல்லாததால்.....  எதாவது சாப்பிடலாமேன்னு  தேடுனதில்   இங்கேயும் ஒன்னும் சரி இல்லை. ஒரு பீட்ஸா கடை தெம்பட்டது.  அங்கே ஒரு சீஸ் அண்ட் டொமெட்டோ பீட்ஸா  வாங்கி உள்ளே தள்ளிட்டு  பத்து பத்து ஃப்ளைட்டுக்குன்னு  செக்யூரிட்டி செக் போனால்....

அங்கே என்னைப் புடிச்சுக்கிட்டாங்க.  வளையலைக் கழட்டணுமாம்.  இத்தனைக்கும் வழக்கமாப் போடும் வளையலைப் போட்டுக்கலை.  ரெண்டே ரெண்டு சாதா வளையல்கள்.  அதுகூட கார்டிகன் கையில் மறைஞ்சேதான் இருக்கு. நமக்கு  விஸா வாங்கும்போது  டி எஸ் ஏ அப்ரூவல் கொடுத்தும் பயன் இல்லை.....  நம்மவர் பிரச்சனை இல்லாமல் அந்தாண்டை போயிட்டு, எனக்கென்னமோ ஆயிருச்சுன்னு  தவிக்கிறார்!

'செக் பண்ணனும், இங்கேயே பண்ணிக்கிறேயா இல்லை  தனி ரூமா? 'ன்னு கேட்டதும்  எந்த மாதிரி செக்கப்போன்னு தனி ரூமுன்னு சொன்னேன்.  அதுக்கு ரெண்டு  லேடி ஆஃபீஸர்ஸ் வரும்வரை என்னை ஓரங்கட்டிட்டு அவுங்க வந்ததும் கூடப் போகச் சொன்னாங்க.  அறைக்குள் போனதும் தொட்டுத் தடவிப் பார்க்கணுமுன்னதும்.... 'சீ' ன்னு ஆகிப்போச்சு. ஆனால்  சொன்னதோடு சரி. ஒன்னும்  ஆகலை. சத்தம் போட்டது வளையல்னு தெரிஞ்சதும் போகச் சொல்லிட்டாங்க. இந்த நைன்லெவனுக்குப் பின்னே  கொஞ்சம் கடுமையான கூத்துகள்தான் நடந்துக்கிட்டு இருக்கு. ப்ச்....

'சம்பவம்' நடந்த பின் இப்பதான் நானும் முதல்முறையா அங்கே போறேன். போனமுறை போனது 1999 இல். நம்ம ஸில்வர் வெட்டிங் கொண்டாட்டத்துக்கு உலகை  'இடம்வர'ப்போனது அப்போதான். அரௌண்ட் த வொ(ர்)ல்ட்.

கேட்கிட்டே போய் காத்திருந்தால்  நம்ம ஃப்ளைட் பத்து பத்துக்குப் போகவேண்டியது பனிரெண்டரைக்குப் போகுமாம்.  ஏன்? க்யா மாலும்..... தேவுடு காக்க......
நாம் இப்போ போகுமிடம் லாஸ் வேகஸ்.  இதைத் தவிர மத்த  ஊர்களுக்குப் போக வேண்டியவங்களுக்கு வண்டிகள் போய்க்கிட்டேதான் இருக்கு.  சிலர் நாய்க்குட்டிகளோடு பயணம் போறாங்க. சின்னதா  ஒரு பைக்குள் உக்கார்ந்து தலையை நீட்டிக்கிட்டு இருந்தது ஒரு செல்லம்.

பார்க்க அவ்வளவா நட்புணர்வு இல்லாத சிடுசிடுத்த முகமா இருக்காங்க பலர் என்பதால்  நான் க்ளிக்காமல்  ச்சும்மா இருந்தேன். வந்த இடத்தில் ஏன் வம்பு?

இதுலே செக்யூரிட்டி செக்கப் சமயம் என்னை ஓரங்கட்டி நிக்கச் சொன்ன இடத்தில் இன்னொரு  பெண்ணும் நின்னுக்கிட்டு இருந்தாங்க.  பெரிய வண்டி தள்ளிக்கிட்டு வந்த ஊழியருக்காக இடம் விட்டு நான் கொஞ்சம் தள்ளி நிக்க வேண்டி வந்தப்ப, அந்தம்மா சொல்லுது, 'நீ என்னை ஃபாலோ பண்ணிக்கிட்டு கிட்டக் கிட்ட வர்றே'

போதுண்டா சாமி..... வெறுப்பா இருந்தது எனக்கு.  'இங்கே வெயிட் பண்ணச் சொல்லி என்னிடம் சொல்லி இருப்பதால் நான் இங்கேதான் நிப்பேன்.  நீங்க ஏன் என் பக்கத்தில் இவ்ளோ நெருக்கமா நிக்கறீங்க?'ன்னதும்  அந்தப் பக்கம் திரும்பி நின்னாங்க அவுங்க..... என்ன மாதிரி மனிதர்கள்?  எங்க நியூஸி மக்களுக்கு ஒரு கோவில் கட்டிக் கும்பிட்டாலும் போதாது !

 'சம்பவத்துக்குப்பின்' யாரைப் பார்த்தாலும் சந்தேகமா இருக்கோ என்னவோ?

பனிரெண்டே காலுக்கு   போர்டிங் ஆரம்பிச்சது. இதுலே ஒரு விநோதமான க்யூ வரிசை. நம்ம போர்டிங் பாஸ்லே இருக்கும்  நம்பரை வச்சு  அங்கங்கே சின்னச்சின்னக் கூறு கட்டி விட்டமாதிரி  நிக்கறாங்க. விஷயம் புரிபடவே கொஞ்ச நேரம் ஆச்சு.....  ஏ  பி  சி ன்னு   கூப்புடும்போது போகணும். இது ரொம்ப ஈஸி அண்ட் எஃபிஸியன்ட் சிஸ்டமாம்.  ஙே.....  போர்டிங் பாஸில் ஸீட் நம்பர் கிடையாது.

ப்ளேனுக்குள்ளே போனதும்  எங்கே காலி இருக்கோ அங்கே உக்கார்ந்துக்கணுமாம்.  ஸீட் நம்பர் எல்லாம் கிடையாது.  நமக்கு முன்னே போனவங்க ரெண்டு பக்கத்து ஜன்னல்களையும் புடிச்சுக்கிட்டாங்க.   எனக்குக் கட்டாயம் ஜன்னல் வேணும்.  கட்டக் கடைசியா ஒன்னு இருந்துச்சுன்னு அங்கே போனேன்.  இது என்ன சிஸ்டம்?  நாலு பேர் இருக்கும் குடும்பம் ஒன்னு  நாலு ஜன்னல்ஸ் எடுத்துக்கிட்டாங்க.  தலை சுத்தல்தான் எனக்கு...

இதுலே நம்மவர் சொல்றார் 'ஒன்னேகால் மணி நேரம்தானே.... எங்கியாவது உக்கார்ந்தால் ஆச்சு.............  '

ரொம்ப பெரிய விமானம் இல்லை.   சின்ன  சைஸ் தான்.  கிளம்பறதுக்காக வெளியே வந்து  ரன்வேயில் ஓடக் காத்திருக்கோம் ஒரு அரை மணி நேரமா..... ஊஹூம்....   அப்புறமும் ஒரு காமணியாச்சு  சிக்னல் கிடைக்க.....

ரொம்ப பிஸியான ஏர்ப்போர்ட் இது.  காலையில் கூட  ஸிட்னியில் இருந்து வந்த நம்ம விமானம்  தரை தொட்ட பிறகும் கூட  பார்க்கிங் பே கிடைக்காமல்  இருவத்தியஞ்சு நிமிட்  வெட்டவெளியில் நின்னுக்கிட்டு இருந்துச்சு.   இதுலே மட்டும் சிங்கப்பூர் ஏர்ப்போர்ட்டை யாராலும் வெல்ல முடியாதுன்றது உண்மை.  இந்த முப்பத்தியாறு வருசத்துலே ஒரு முறை கூட இப்படித் தரை  இறங்கியும், காத்து நின்னதில்லை.

ஏர்ஹோஸ்டஸ் வந்து  ஃப்ரீ ட்ரிங் கொடுப்போம். என்ன வேணுமுன்னு  கேட்டாங்க... ஜிஞ்சர் ஏல்னு  ரெண்டு பேரும் சொன்னதும் ஒரு கேன் + ரெண்டு  கப் + ஒரு கப் ஐஸ் வந்துச்சு.   இதெல்லாம் நடக்கும்போதுதான் ஜன்னல்வழியாக் கீழே பார்த்தால்..... ஏகப்பட்ட  விமானங்கள் வரிசை கட்டி நிக்குது.  கேமெராவை எடுக்கறதுக்குள்ளே காட்சி  மாற்றம் ஆகிப்போச்சு.  இது  விமானங்களுக்கான கல்லறை.

  மேலே படம். கூகுளாண்டவர் உபயம்.

கீழே மொட்டக்காடு.... செம்மண் பாலைவனம். மருந்துக்குக்கூட கட்டடம் இல்லை.  கீழே  பூமியில் அங்கங்கே வட்டம், சதுரம்னு  சிலபல டிஸைன்கள்.   தேவர்களின்   கணக்கு வகுப்பறை மாதிரி.....


ஊர் வருதுன்னு சொல்லும்   சாலைகளும் வீடுகளும் கட்டடங்களுமா   கண்ணில்  பட்டது.  அப்பாடா.....   பகல்     ரெண்டரை மணி  இப்போ.  விமானம் விட்டு வெளி வந்து  விமான நிலையத்தில்  நடக்கும்போதே  இது என்ன மாதிரியான ஊருன்னு  தெரிஞ்சுருது!  எங்கே பார்த்தாலும் ஸ்லாட் மெஷீன்ஸ்.  சூதாட்ட நகர் இல்லையோ!  ஷட்டில் ஒன்னு புடிச்சு  ஊருக்குள்ளே  ட்ராப்பிக்கானா ஹொட்டேல் போய்ச் சேர்ந்தோம்.
எங்க ஊரில் இல்லாத சமாச்சாரம்.... டிப்ஸூ

வீட்டை விட்டுக் கிளம்பி  எத்தனை மணி நேரம் ஆச்சுன்னே  தெரியலை...  கொஞ்ச நேரம் தூங்கணும். மத்த சமாச்சாரம் எல்லாம் அப்புறம்.....

தொடரும்..........:-)

30 comments:

said...

ஆஹா அமெரிக்க பயணமா? வாவ்... உங்கள் மூலம் விவரங்கள் அறிந்து கொள்ளத் தொடர்கிறேன்.

said...

aahaa, america payanaththodaaaraa, sollungammaa

hotels il they collect 15 percent tips compulsorily

idhu engalukku romba over aa therinjudhu. ungalukku?

said...

You came to our.city. Didn’t know that. Welcome to America,

said...

கடவுளைக் கும்பிட்டுவிட்டு பிரயாணம் ஆரம்பித்திருக்கிறீர்கள். நிறைய விவரங்களைத் தெரிந்துகொள்கிறேன்.

said...

அமர்க்கள ஆரம்பம்,
அமெரிக்கா
அபாரம்
அருமை நன்றி

said...

வெகு அழகு..விறுவிறுப்பு..எப்படி டீடெய்ல்ஸ்லாம் மறக்காம இருக்கீங்க எண்ணும் உணர்வு உங்களது எந்தக் கட்டுரையைப் படித்தாலும் ஏற்படும்.. அன்புடன் சின்னக் கண்ணன்

said...

நம்ம ஊர் தேவலைன்னு நினைக்க வெச்ச ட்ரிப்பா

said...

ரொம்ப அருமையான ஆரம்பம் அம்மா காத்திருக்கிறேன் நானும். மேலும் தெரிந்து கொள்ள ஆவலாய்.

said...

Madam, one suggestion, please remove the immigration doc picture - it has some personal info.

said...

இந்தத் தொடரைப் புறக்கணிக்கிறேன். என் கண்டனங்களையும் தெரிவிச்சுக்கறேன். ஹேப்பி பர்த்டே!

said...

"நம்மை ஒரு படம் எடுத்து"

ஸார் படம் மட்டும்தானா?

எனக்கும் (மானசீகமா) ஒரு ஸீட் போடுங்க... நானும் அமெரிக்காவுக்கு வர்றேன்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தொடர்ந்து தரும் ஆதரவுக்கு நன்றிகள்!

எவ்வளவு பயன் தரும் என்று தெரியலை..... நான் அப்போ என்ன உணர்ந்தேனோ.... அதைத்தான் எழுதறேன் :-)

said...

வாங்க எஸ்கிருபாஸ்

எங்கூரில் இந்த டிப்ஸ் என்ற வழக்கமே இல்லைன்றதால்.... கொஞ்சம் கஷ்டமாத்தான் முதலில் இருந்துச்சு. அதான் சொன்னேனே இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் வித்தியாசமே இல்லைன்னு.... ரூபாய் இடத்துலே டாலர் !

said...

வாங்க தெய்வா,

பயணம் போன ஆகஸ்ட் கடைசி வாரம். நம்ம தியேட்டரில் இந்தியப் பயணம் ஓடிக்கிட்டு இருந்ததால் , இப்பதான் இதை எழுத ஆரம்பிச்சேன்.

வரவேற்புக்கு நன்றி!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

எல்லாம் என் அனுபவமும், என் பார்வையிலும்தான்! பயனாக இருக்குமான்னு தெரியலை.

said...

வாங்க விஸ்வநாத்.

அகர வரிசையா!

நன்றீஸ் !!!

said...

வாங்க சின்னக் கண்ணா,

யானையின் பலமும் பலவீனமும் இதுதான் :-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

ஆரம்ப அதிர்ச்சிதான். அப்புறம் சரியாப்போயிருச்சு :-)

said...

வாங்க தவமணி.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

said...

வாங்க ஸ்ரீ.

பதிவு போட்ட கொஞ்ச நேரத்துலேயே நம்மவரும் இதைத்தான் சொன்னார். எனக்குத் தோணலை......பாருங்க. உடனே அப்பவே விவரத்தை எடுத்துட்டேன்.

கவனமா இருக்கணும் இல்லே?

கவனிச்சுச் சொன்னதுக்கு நன்றி!

said...

வாங்க கொத்ஸ்.

புறக்கணிப்பா? அட ராமா......

அப்ப வகுப்புத் தலைவர், தொடர் முடியும்வரை வகுப்புக்கு வெளியிலேயா? அச்சச்சோ....


வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க ஸ்ரீராம்.

ரெண்டு பேருக்கும் தனித்தனி படம்தான் :-)

க்வாண்டாஸில் வேணாம். போர்!

அடுத்தமுறை சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் இல்லைன்னா எமிரேட்ஸில் போகலாம் :-)

said...

>>ப்ளேனுக்குள்ளே போனதும் எங்கே காலி இருக்கோ அங்கே உக்கார்ந்துக்கணுமாம். ஸீட் நம்பர் எல்லாம் கிடையாது.
நமக்கு முன்னே போனவங்க ரெண்டு பக்கத்து ஜன்னல்களையும் புடிச்சுக்கிட்டாங்க <<<

வணக்கம் துளசி.

சவுத் உவெஸ்ட் ல் தான் நாங்கள் எப்பவும் பறக்க விரும்புகிறோம். இருக்கை எண் கிடையாது, சரிதான். ஆனால் உள்ளே விடும் போது, வயதானோர், குழந்தை குட்டிகளுடன் குடும்பத்தினர்,
முன்னாள் இந்நாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் முதலில் பிறகு வரிசைகள் A 1 -30, A 31- 60, B1 -30, B31 -60 & C1- C30, C31 -C60 என்ற வகையில் நுழைய
விடுவார்கள். பயண நுழைவுச்சீட்டு வகை மற்றும் எப்போது சீட்டட்டை வாங்கியது பொறுத்து அமையும் வரிசை. பழக்கமானால் இதுவே உசிதமாக உணர்வீர்கள்.

https://ibb.co/go8f3x படத்தில் காட்டும் 'wanna get away ' சீட்டுகள் முக்கால்வாசி கடைசியில் - குறைந்த காசுக்கு வாங்கினது1

'என் பின்னாடியே நீ வர்ற' என சொல்லிய ஒரு பெண் ஐ போல எல்லோரும் இல்லை. என்னுடைய உத்தரவாதம் ;)

said...

Ball by ball description மாதிரி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் அருமையாக விவரிக்கிறீர்கள். பல தகவல்கள், டிப்ஸ், அருமையான காட்சி வர்ணனை..இனி விடாது தொடர்வேன். நன்றி.

said...

வாங்க வாசன்.

முதல்முறை இப்படிப் பார்க்கறதாலே சிஸ்டம் புரிபடலை.......

//என் பின்னாடியே நீ வர்ற' என சொல்லிய ஒரு பெண் ஐ போல எல்லோரும் இல்லை. என்னுடைய உத்தரவாதம் ;)//

முதல்கோணல் முற்றிலும் கோணல்னு இல்லாமத்தான் போச்சு :-) திருஷ்டிப் பரிகாரமுன்னு சொல்லிக்கலாம்.


said...

வாங்க டாக்டர் ராஜன்.

முதல் வருகைக்கு நன்றியும் வணக்கமும்.

பயணக்கதைகள் பிடிக்கும் என்றால் துளசிதளத்தில் ஏராளம்!

நேரம் கிடைக்கும்போது (!) அங்கே எட்டிப் பாருங்கள் :-)

said...

உங்கள் அமெரிக்கப் பயணத்தைத் தொடர்கிறோம்...சகோதரி/ துளசிக்கா...நிறைய தகவல்கள்...


துளசிதரன், கீதா

said...

படங்களுடன் மிக இயல்பாகச் சொல்லிச் செல்லும் உங்கள் பாணி அசத்தல்.தொடர்கிறோம்

said...

வாங்க துளசிதரன் கீதா.

எவ்ளோ நாள் கழிச்சு இங்கே வந்து பதில் சொல்றேன், பாருங்க..... மன்னிச்சூ.... ப்ளீஸ்.

அமெரிக்கா முடிச்சுட்டு வாங்க. நாம் சீனா போயிட்டு வரலாம் :-)

said...

வாங்க ரமணி.

பயணங்கள் எங்கே முடியுது சொல்லுங்க....

அமெரிக்கா முடிஞ்சு சீனம் ஆரம்பிச்சு இப்போ அதுவுமே முடியும் நிலையில்.

நிதானமா வாசிச்சுட்டு வாங்க.

வலைப்பதிவுகளில் இது ஒரு நன்மை.... நமக்கு நேரமும் விருப்பமும் உள்ளபோது தொடரலாம்.

வருகைக்கு நன்றி.